அழுத பச்சிளங்குழந்தையின் வாயில் டேப் ஒட்டிய நர்ஸ்களுக்கு சிறை?
மும்பையின் பட்லூரில் பிரியா என்பவருக்கு கடந்த ஆண்டு மே மாதம் குழந்தை பிறந்தது.
சாவித்திரிபாய் ஃபுலே மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. சில நாட்கள் கழித்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு எடுத்த சென்று விட்டார்.
ஆனால் ஓரிரு நாட்களில் குழந்தைக்கு உடல் நலம் இன்றி போனதால் குழந்தை வீறிட்டு அழத் தொடங்கியது.
எனவே அருகில் உள்ள பி எம் சி மருத்துவமனையில் அவர் குழந்தையை அனுமதித்தார்.
குழந்தை சிகிச்சை அளிப்பதற்கான தனிவார்டில் வைக்கப்பட்டு இருந்தது.
ஆனால் ஓயாமல் தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் அங்கு இருந்த செவிலியர்களால் குழந்தையின் அழுகையை நிப்பாட்ட முடியவில்லை.
எவ்வளவு சமாதானப் படுத்தியும் அழுகை நிற்காதுததால், குழந்தையின் வாயில் செவிலியர்களான சவிதா ஸ்வேதா ஸ்ரதா ஆகிய மூவரும் சேர்ந்து டேப் ஒட்டிவிட்டனர்.
குழந்தையின் அழுகை சத்தம் நின்று விட்டது என பார்ப்பதற்காக சிகிச்சை அறைக்குள் வந்த அவரது தாய் ப்ரியா அதிர்ந்து போனார்.
குழந்தையின் வாயில் டேப் ஒட்டிய போதும் குழந்தையானது வாய்விட்டு அழ முடியாமல் தேம்பிக் கொண்டிருந்தது. கொஞ்சம் விட்டு இருந்தால் குழந்தைக்கு மூச்சு திணறல் கூட வந்திருக்கும். எதற்காக குழந்தையின் வாயில் டேப் ஒட்டினீர்கள் என அங்கு இருந்த செவிலியர்களிடம் வாதிட்டார் தாய் பிரியா.
“இங்கு இப்படித்தான் இருக்கும். அழும் குழந்தைகளுக்கு இது வழக்கமான நடைமுறைதான். நீ கண்டுகொள்ளாமல் போ” என அவர்கள் மிகவும் அலட்சியமாக பதில் சொன்னதாக கூறப்படுகிறது.
இதை அடுத்து குழந்தையை அங்கிருந்து எடுத்துக் கொண்டு அகர்வால் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்றார்.
இருப்பினும் குழந்தையை நடத்திய விதம் சரியில்லை, குழந்தைகள் வாயில் டேப் போட்டு ஒட்டி விட்டனர் எனக் கூறி அவர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கும் தொடர்ந்திருந்தார்.
அதில், பி எம் சி மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டிருந்த அன்று இரவு 8 மணிக்கு தாய் சென்று பார்த்த போது குழந்தையின் வாய், கழுத்து உள்ளிட்ட பல இடங்களில் டேப் ஓட்டப்பட்டு இருந்ததாகவும், இதனை செவிலியர்கள் கவிதா ஸ்வேதா ஸ்வேதா ஆகிய மூவர்தான் செய்ததாகவும் நிரூபணம் ஆனதால் அவர்களுக்கு தண்டனை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
மாநில மனித உரிமை ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டதால் அந்த மருத்துவமனைக்கு சம்மன் அனுப்பி விசாரணையும் நடைபெற்றது.
சிறார் நீதி சட்டத்தின் ஐபிசி பிரிவு 75 ன் படி குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தற்போது அந்த மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.