நடிகை சமந்தா நடிக்க வந்து இன்றுடன் 14 ஆண்டுகள் ஆகிவிட்டன என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

என்னப்பா சொல்றீங்க? இப்பதானே அந்த பொண்ணு நடிக்கவே வந்துச்சு? அதுக்குள்ள 14 வருஷம் ஆயிடுச்சா? என கேட்கலாம்.

ஆம் எப்படி நாம் போன வாரம் பார்த்தது போல் இருக்கும் தூரத்து உறவு சிறார்கள் தற்போது கல்லூரி செல்வதை ஏற்க முடியவில்லையோ அதேபோல் தான் இதுவும்.

துரு துரு என சிறு பெண்ணாக வலம் வந்து கொண்டிருந்த சமந்தா “ஏ மாய செஷாவே” என்ற கௌதம் வாசுதேவ் மேனனின் தெலுங்கு விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஜெஸ்சியாக நடித்திருந்தார் நடிகை சமந்தா. இதுதான் அவருக்கு முதல் ஹீரோயின் வேடம் தந்த திரைப்படம்.

அதே தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் செகண்ட் ஹீரோயினாக அவர் நடித்திருப்பார்.

காத்தாடி படத்தில் நடித்திருந்த அவர் தமிழில் அதிகம் புகழ்பெற்றார். “என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது அதன் பேர் என்னவென கேட்டேன்” என்ற பாடல் மிகவும் பிரபலமானது.

இதையடுத்து அவருக்கு மிகப்பெரிய கேரியர் பிரேக்காக அமைந்தது, நான் ஈ படம் தான். தன்னை காதலித்து வந்த நபர் உயிரிழந்த பின்பு அவரது ஆத்மா ஒரு ஈயின் உடலுக்குள் புகுந்து வில்லனை பழி வாங்கும் படமாக அமைந்தது தான் நான் ஈ. அதில் நுண் சிற்பக்கலை பயின்ற சமந்தா, பழிவாங்கலுக்கு ஈகா எப்படி உதவியது என்பதை இந்த படம் வெளிப்படுத்தி இருக்கும்.

அதேபோல், சூப்பர் டீலக்ஸ், த ஃபேமிலி மேன், மகாநடி, தெறி என பல படங்களிலும் நடிகை சமந்தா நடித்திருக்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் விரல் விட்டு எண்ணி 14 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை தானே நினைத்து பிரமிப்பது போன்ற முகபாவனை உடன் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இதற்கு காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தாவுடன் நடித்த நடிகை நயன்தாரா, வாழ்த்துக்களை கூறியுள்ளார். ”உமக்கு மிகவும் சக்தி கிடைக்கட்டும்” என்றும் அதில் அவர் வாழ்த்தியுள்ளார்.

”மிக்க நன்றி அழகே!” என்று நயன்தாராவுக்கு சமந்தா பதில் அளித்துள்ளார்.

“14 இயர்ஸ் ஆஃப் சமந்தா லெகசி” என்ற ஹாஸ்டாகும் டிரண்டாகி வருகிறது.

மையோசிட்டிஸ் சென்ற நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா திரைப்படங்களில் இருந்து சற்று ஓய்வு எடுத்து, உடல் நலத்தில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் முழு உடல் நலம் தேறி விட்டதாக கூறி அவர் சிடாட்டெல் ப்ரொஜெக்ட்டில் நடித்து வருகிறார்.

நடிகை சமந்தா நடித்த படத்திலேயே எந்த படம் உங்களுக்கு மிகவும் பிடித்தது? அந்த படத்தில் அவருடைய கேரக்டரின் பெயர் என்ன என்று கமெண்டில் கூறுங்கள் பார்ப்போம். உதாரணத்துக்கு காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கதீஜாவாக வருவார் நம்ம சம்மு.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE