பழங்குடியினரில் லிவ் இன் ரிலேசன்ஷிப் கேட்டதுண்டா?
நகரங்களில் மட்டும்தான் லிவ் இன் ரிலேசன்ஷிப் இருப்பதாகக் கேள்விப்பட்டதுண்டு. இதை சட்டமே தடை சொல்லாத நிலையிலும், காதலித்து ஏமாற்றிவிட்டதாக பின்னர் வந்து கூப்பாடு போட்டால்தான் கண்டுகொள்ள ஆள் இல்லாது போய்விடும் என்ற நிலையும் உள்ளது.
இது எல்லாமே மேற்கத்திய நாகரீகம்தான் என சமூகத்தில் ஒரு பிரிவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். சமூக வலைதளங்களையும், திரைப்படங்களையும் பார்த்துத்தான் இன்றைய இளசுகள் கெட்டுப் போய்விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால், பழங்குடியினருக்குள்ளேயே அப்படி ஒரு வாழ்க்கை முறை இருந்தது. இன்றும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதைப்பற்றி முழு விவரங்களை வழங்குகிறது த காரிகை.
யாரந்தப் பழங்குடியினர்?
ராஜஸ்தான் மற்றும் குஜராத் மலைப்பகுதிகளிலும், மலையை ஒட்டிய பகுதிகளிலும் வசித்து வரும் பழங்குடிகளில் முக்கியமான ஒன்று கராசியா.
பெண்களுக்கு சுதந்திரம்
பெண்கள் தங்களுக்கு விருப்பமான வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதற்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது
காதலுக்குப் பச்சைக் கொடி
காதலுக்கு இந்த பழங்குடியினர் மத்தியில் எப்போதுமே பச்சைக் கொடி தான். இருவருமே ஒருவருக்கு ஒருவர் விரும்பினால் போதும். அவர்கள் காதலித்துக் கொள்ளலாம்.
திருமணத்துக்கு முன் உறவு
காதலிக்கும் நபர்களுடன் திருமணத்துக்கு முன் உறவு கொள்ளலாம். அவர்கள், உடலுறவு கொண்டு குழந்தையும் பெற்றுக் கொள்ளலாம்.
விரும்பினால் மட்டும் திருமணம்
உடலுறவு கொண்டு குழந்தையும் பெற்ற பின், இருவரும் ஒருவருக்கு ஒருவர் விருப்பப்பட்டால் மட்டும் திருமணம் செய்து கொள்ளலாம். திரும்ப வந்து பெற்றோரிடம் காதல் இன்னும் நீடிக்கிறது எனக் கூறினால் மட்டும் போதும். அவர்களே ஜாம் ஜாம் என பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்துவிடுவார்கள்.
டேட்டிங் டே
இளம் பெண்களும், இளம் ஆண்களும் தங்களுக்குத் தேவையான இணையை தேர்ந்தெடுப்பதற்காகவே ஒரு நாள் கொண்டாடுகின்றனர். அந்த நாளில் தங்களுக்கு யாருடன் விருப்பம் உள்ளதோ அவர்களுடன் சென்று வாழத் தொடங்கலாம்.
எதனால் இந்த நடைமுறை?
முன்பொரு காலத்தில் அந்தப் பழங்குடியினரில் 4 சகோதரர்கள் இருந்தனர். அவர்களில் 3 பேர் இந்திய மரபுப்படி திருமணம் செய்து கொண்டனர். ஆனால், அதில் ஒருவர் மட்டும் திருமணம் செய்துகொள்ளாமல் லிவ் இன் ரிலேசன்ஷிப்பில் இருந்தனர். அவர்களில்ல திருமணத்துக்கு முன்பே உறவில் இருந்த ஒருவருக்கு மட்டும் குழந்தை பிறந்தது. மற்ற மூவருக்கும் குழந்தை பிறக்கவில்லை. எனவேதான் திருமணத்துக்கு முன்பே உடன் வாழ்ந்து உடலுறவு கொண்டு, குழந்தையும் பெற்று பிடித்திருந்தால் பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என கராசியா பழங்குடியினரில் முடிவு செய்தனராம்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.