17 முறை தலையணைய வெச்சு கர்ப்பம்னு சொல்லி ஏமாத்துன பெண் கைது

படிக்காதவன் படத்தில் சாராய டயரைக் கட்டிக் கொண்டு அம்பிகா அசைந்து அசைந்து நடந்து வருவதைப் பார்த்து நடிகர் ரஜினிகாந்த் ஏமாற்றிய போதும், அந்த டேக்ஸி லட்சுமி கண்டுபிடித்துவிடும். அப்படியொரு டேக்ஸியை இத்தாலிக்கு பார்சல் செய்ய வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது போல.

இத்தாலியில் பெண் ஒருவர் தான் 17 முறை கர்ப்பமானதாகக் கூறி அரசின் சலுகைகளை அனுபவித்து வந்துள்ளார். அவர் தற்போது ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார். குற்றத்தை வெளிக்கொண்டுவராத குற்றத்துக்காக அவரது கணவருக்கும் குறைந்தபட்ச தண்டனையைக் கொடுத்துள்ளனர்.

பார்பரா லோலேவுக்கு 50 வயது ஆகிறது. ஆனால் அவர் 17 முறை கருத்தததாகக் கூறியுள்ளார். கடந்த 24 ஆண்டுகளில் மெட்ரோ மருத்துவமனைகளில் இருந்து பிறப்புச் சான்றுதழ்களைத் திருடி, போலியாக சித்தரித்து ஏமாற்றி உள்ளார்.

அதில், தனக்கு 5 குழந்தைகள் முழு மாதங்களும் கருவில் இருந்து பிறந்து வளர்ந்துள்ளதாகவும், முதமுள்ள 12 குழந்தைகளும் கருவிலேயே அழிந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இதன் மூலம் அலுவலகத்தில் இருந்து அதிக நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பை அனுபவித்துள்ளார். அதுமட்டுமின்றி கர்ப்பிணிப் பெண்களுக்கு அந்நாட்டில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் அவர் பெற்று தனது அலுவலகத்தில் உள்ளவர்களையும், அந்நாட்டு அரசாங்கத்தையும் ஏமாற்றியுள்ளார்.

இதன் மூலம் அவர் இந்திய மதிப்பில், 98 லட்சத்து 25 ஆயிரத்து 200 ரூபாயை பேறுகால நிவாரணமாகப் பெற்றுள்ளாராம்.

எப்படி ஏமாற்றினார்?

வயிற்றில் மாதத்துக்கு ஏற்றார்போல தலையணையை வைத்து கட்டிக் கொண்டு அவர் ஊரை ஏமாற்றி வந்திருக்கிறார். அதுமட்டுமின்றி அம்பிகா எப்படி கர்ப்பிணி போன்று வயிற்றில் கரு இருப்பதாக வலியோடு இடுப்பைப் பிடித்தபடி நடந்து ரஜினி படத்தில் ஏமாற்றினாரோ? அப்படியேதான் அவரும் ஏமாற்றியிருந்திருக்கிறார்.

எப்படி சிக்கினார்?

கடந்த டிசம்பரில் தான் கருவுற்று இருப்பதாக நடித்தபோதுதான், போலீசார் அவரைப் பின்தொடர்ந்து 9 மாதங்கள் கண்காணித்துள்ளனர். அப்போது, அவர் முழுப் பூசணிக்காய்களை சோற்றில் மறைத்தது அம்பலமானது.

என்ன தண்டனை?

பார்பராவுக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இந்த குற்றத்தை போலீசாரிடம் தெரிவிக்காத அவரது கணவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தனது மனைவி வாழ்நாளில் ஒருமுறைகூட கருத்தரித்தது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE