சென்னையில் பாரமாகி வரும் வீட்டு வாடகை – அதிர்ச்சி ரிப்போர்ட்

மக்களுக்கு கல்வியறிவு அதிகரிக்க அதிகரிக்க வாழ்வில் முன்னேற்றமும் அதிகரிக்கும். அதற்கு பெரு நகரங்களின் பங்கானது மிகவும் அதிகம். பெரும்பாலானவர்களுடைய முன்னேற்றத்தில் அவர்கள் பெருநகரங்களுக்கு இடம்பெயர்தல் தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது.

எந்தவொரு இடத்தில் தேவை அதிகரிக்கிறதோ, அங்கு விநியோகமும் அதிகரிக்க வேண்டும் என்பதுதான் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. இல்லாவிட்டால், அது அடிப்படையையே ஆட்டம் காணச் செய்துவிடும்.

அப்படித்தான். சென்னை என்ற குட்டிப் பரப்புக்குள் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் மக்கள் தத்தமது குடும்பத்தோடு குடிபெயர்ந்துவிடுகின்றனர். ஆனால், குட்டிக் குட்டி நிலப்பரப்பிலும் அடுக்கடுக்காக தளங்களை அமைத்து கட்டிடங்களை உருவாக்கி வரும்போதும், அதன் தேவைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

எனவே, வேறு வழியின்றி வாடகைக் கட்டணமானது அதிகரித்து வருகிறது. இதுகுறித்து வாடகை வீடுகளைக் கண்டுபிடித்துத்தர உதவும் ஆன்லைன் தளமான மேஜிக் பிரிக்ஸ் ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பெரு நகரங்களில் குடியேரும் 100-க்கு 95 பேர் வாடகை வீட்டில் தான் வசிக்கின்றனர்.

வாடகை வீட்டுக்கான தேவை, விலைவாசி உயர்வால் நகரங்களில் வீட்டு வாடகையும் ஆண்டுதோறும் அதிகரிப்பு

நாட்டின் 13 முக்கிய நகரங்களில் கடந்த ஓராண்டில் வீட்டு வாடகை உயர்ந்துள்ளது

டெல்லியின் புறநகரான குருகிராமில் வீட்டு வாடகை ஒரே ஆண்டில் 31.3% உயர்ந்துள்ளது

கிரேட்டர் நொய்டாவில் கடந்த ஓராண்டில் மட்டும் வீட்டு வாடகை 30.4% உச்சம் அடைந்தது

ஐடி சிட்டியான பெங்களூருவில் 23.1 % வீட்டு வாடகை உயர்வு

மும்பையில் 16 %, ஹைதராபாத்தில் 20.7 %, தானேவில் 17.8 % ஆக வாடகை அதிகரிப்பு

சென்னையில் வாடகை

சென்னையில் வீட்டு வாடகை கடந்த ஓராண்டு காலத்தில் 14.7% உயர்ந்துள்ளது

மொத்தமாக சராசரியாக இந்தியாவில் ஓராண்டில் மட்டும் 17.4% வாடகை அதிகரிப்பு

வீட்டு வாடகைக்கான தேவை

கிரேட்டர் நொய்டாவில் ஓராண்டில் தேவை என்பது 6.9% அதிகரிப்பு

இந்த பட்டியலில் சென்னை இரண்டாமிடத்தில் உள்ளது.

சென்னையில் ஓராண்டில் வாடகை வீடுகளுக்கான தேவை என்பது 4.1% என அதிகரிப்பு

அகமதாபாத், டெல்லி, குருகிராம்,ஹைதராபாத், மும்பையில் வாடகை வீடு தேவை அதிகரிப்பு

வாடகை வீடு கிடைக்கும் விகிதம்

நாட்டில் ஒட்டுமொத்தமாக வீடுகள் சப்ளை ஓராண்டில் 16.9% குறைவு

நவி மும்பையில் 38%, தானேவில் 33.6% சப்ளை சரிவு

சென்னை 3-ம் இடத்தில் உள்ளது. ஓராண்டில் வீடுகளின் சப்ளை 33.3% குறைவு

அக்டோபர்-டிசம்பர் மாதங்களில் , வாடகை வீடுகளின் தேவை கணிசமாக குறைவு

2 படுக்கையறை கொண்ட வீடுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது

மாத வாடகை சராசரியாக 10,000 இல் இருந்து 30,000ஆக இருக்கிறது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE