குழந்தைகளின் கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி?

The child in anger.

90ஸ் கிட்ஸ் என்ற 1990களில் பிறந்தவர்கள் எல்லாம் ஏதேனும் ஒரு வகையில் அவர்களது பெற்றோருக்கும் உடன் பிறந்தவர்களுக்கும் கட்டுப்பட்டு இருந்தனர்.

ஆனால், சில 90ஸ் கிட்கள் பெற்றோரான பின்பு அவர்களால் தங்களது குழந்தைகளின் கோபத்தை சமாளித்து கையாள முடியவில்லை என்றே சொல்ல வேண்டும்.

செல்லம் கொடுக்கிறேன் என்ற பெயரிலோ அல்லது தான் தனது பெற்றோரிடம் பெற்ற அடி உதைகளை தனது பிள்ளைக்கு கொடுக்கக் கூடாது என்று ஒரே நல்ல காரணத்தினாலோ அவர்கள் குழந்தைகளை திருப்பி அடிப்பதில்லை.

மாறாக பெற்றோர்கள் தான் குழந்தைகளிடம் அடி வாங்கும் சூழ்நிலை உள்ளது.

அதுவும் நகம் வெட்ட கொஞ்ச நாள் தவறிவிட்டால் போதும். வீட்டில் இருப்பவர்கள் அனைவரையும் பிராண்டி மார்க் மாயாண்டி களை போல மாற்றி விடுவார்கள்.

குழந்தைகள் தானே? எப்படி கண்டிப்பது? எப்படி அடிப்பது? என்றெல்லாம் சிலர் தயக்கம் காட்டி அவர்களை கண்டிக்காமல் விட்டால் பின்னாளில் அதுவே அவர்களுக்கு, பார்ப்பவர்களை எல்லாம் தான் அடிக்கலாம், தனக்கு முழு சுதந்திரம் இருக்கிறது என்பதை போல் அட்வான்டேஜ் எடுத்துக் கொள்வார்கள்.

பிற்காலத்தில் இது சமூகத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் தலைகுனிவை ஏற்படுத்தி விடும் நிலை வந்து விடும் என்று 90ஸ் கிட்ஸ்கள் அச்சம் கொள்கின்றனர்.

அப்படி பிடிவாதம் பிடித்தோ, கோபம் கொண்டோ, திட்டி, அடித்து, உருண்டு புரண்டு அழும் குழந்தைகளை எப்படி சமாளிக்கலாம் என்று டிப்ஸ்களை த காரிகை உங்களுக்கு வழங்குகிறது.

பாசிட்டிவிட்டி

உங்கள் குழந்தை எதிர்மறையான விஷயங்களை செய்யும் போது அவர்களை தண்டிப்பது, அடிப்பது, திட்டுவது போன்ற பழக்கத்தை முதலில் கைவிடுங்கள். மாறாக அவர்கள் ஏதேனும் பாசிட்டிவாக செய்தால் அதை கைதட்டி உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துங்கள். எனவே எந்த ஒரு குழந்தையும் பாராட்டுக்கு மயங்கும் என்ற சொல்லாடலை போல் உங்கள் குழந்தையை அன்பாலேயே நீங்கள் கட்டுப்படுத்தி விடலாம்.

நோ சொல்வதிலும் அன்பு

உங்கள் குழந்தை ஏதேனும் செய்வதை தடுக்கும் போது அல்லது அவர்களுக்கு நோ என சொல்ல வேண்டிய சூழலிலோ அவர்களை முதலில் அன்போடு கையாள வேண்டும்.

எடுத்த எடுப்பிலேயே நீ அதை செய்யக்கூடாது என சொன்னால் குழந்தைக்கு கோபம் தான் வரும். மாறாக எதனால் அதனை செய்யக்கூடாது, என்பதை முதலில் தெளிவு படுத்தி விட்டு பின்பு நோ சொல்லினால் குழந்தை அதை புரிந்து கொள்ளும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE