ஒரு பெண் குழந்தை ருது ஆகி பெண்மை அடைவதும், அவள் திருமணம் ஆகி தாய்மை அடைவதும் தான் ஒரு பெண்ணின் முழுமையாக இந்த சமூகம் கருதுகிறது. அப்படி ஒரு தாய்மை அடைவதற்கான முக்கிய நிகழ்வாக அடிப்படையாக அமைவது அப்பெண் பருவமெய்தலாகும்.

தற்காலத்தில் 10 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள், எப்போது வேண்டுமானாலும் பருவம் அடையலாம் என்ற சூழ்நிலை தான் பெரும்பாலும் உள்ளது.

முன்பெல்லாம் 16 என இருந்த பருவமடைதலின் வயது, படிப்படியாக 14, 13, 12 என குறைந்து 10 வயதிலேயே தற்போது சில சிறுமிகள் பருவம் அடைகின்றனர்.

இதற்கு அவர்களுக்கு மிக விரைவில் நடக்கும் ஹார்மோன் சுரப்பு காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

அதுமட்டுமின்றி தற்காலத்தில் பெண் குழந்தைகள் ஸ்டீராய்டு அதிகம் பயன்படுத்தி வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளை அதிகளவு இறைச்சிகளாக விரும்பி எடுத்துக் கொள்வதால் அவர்கள் விரைவில் பூப்படைவது உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது.

ஆனால், எது எப்படி இருந்தாலும் 10 வயதுக்கு எட்டிய ஒரு பெண் குழந்தை வீட்டில் இருந்தாலே, தற்போது பெற்றோருக்கு “பக்கு பக்”என்றுதான் பரபரப்பு இருக்கும்.

குளியலறைக்கு சென்ற சிறுமி, துண்டு கேட்பதற்காக தாயை அழைத்தால் கூட அவர்கள் ஒரு பதற்றத்தோடு என்ன? என்று விசாரிக்கும் நிலை தான் உள்ளது.

எனவே தங்கள் வீட்டில் உள்ள சிறுமி பூப்பெய்து விடுவாரோ என்று சந்தேகம் இருப்பவர்களுக்கு, இந்த கட்டுரையை அனுப்பவும். இது அவர்களுக்கு ஒரு தெளிவை கொடுக்கும் என்று “த காரிகை” நம்புகிறது.

பருவமெய்தலுக்கு முன் சில அறிகுறிகளை வைத்து அந்த காலம் நெருங்கி விட்டது என்பதை சுட்டிக் காட்டலாம்.

முதல் மாதவிடாய் அறிகுறிகள்

ஒரு பெண் சிறுமியானதும் பருவமடையும் போது உடல் ரீதியாக பல மாற்றங்களை சந்திக்க நேரிடும். அவற்றைப் பற்றிய புரிதல் பெற்றோருக்கு இருப்பது அவசியம். அதைவிட குழந்தைகளுக்கு பெற்றோர் அதனை சொல்லிக் கொடுத்திருப்பது மிக மிக அவசியம். எனவே உடலில் ஏற்படும் அறிகுறிகளை உன்னிப்பாக கண்காணிக்கவும்.

வயது

பெரும்பாலும் 10 முதல் 14 வயதிற்குள் முதல் மாதவிடாய் பெண் குழந்தைகளுக்கு வரக்கூடும். இதற்கு ஹார்மோன், உடல் அமைப்பு, உணவு மற்றும் வாழ்க்கை முறை உள்ளிட்ட காரணிகள் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஒரு சிலர், பருவம் அடையும் வயது முன்கூட்டியும் ஒரு சிலருக்கு தாமதமாகவும் வரக்கூடும்.

மார்பக வளர்ச்சி

முதல் மாதவிடாய்க்கு அதாவது பருவமடைவதற்கு குறைந்தது 2 ஆண்டுகளுக்கு முன்பே பெண் குழந்தைகளுக்கு மார்பக வளர்ச்சியை உணர முடியும்.

இது உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாகும் சுரப்பதன் காரணமாக அமையலாம்.

இதனால் மார்பக பகுதியில் லேசாக வலியும் ஏற்பட வாய்ப்புள்ளதாக சிலர் கூறுகின்றனர்.

உடலில் முடி வளர்தல்

மார்பகங்கள் உட்பட ஒட்டுமொத்த உடலிலும் உரோம வளர்ச்சி காண முடியும். மார்பக வளர்ச்சி அதிகரித்த பின் பிறப்புறுப்பை சுற்றிய பகுதிகளில் உரோமமும் வளர தொடங்கலாம். அது அவர்களது வயதுக்கு ஏற்ப படிப்படியாகவும் கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர தொடங்கலாம்.

முகப்பரு

பருவம் அடையும் முன்பு, அந்த காலம் நெருங்குகையில் சருமத்தில் சில மாற்றங்கள் வரும். குறிப்பாக முகத்தில் பருக்கள் வரக்கூடும். இது சீபம் என்ற உற்பத்தி அதிகரிப்பின் காரணமாகவே வரலாம். ஒரு சிலருக்கு இது தோல் பிரச்சினையாகவும் இருக்கலாம்.

திரவம்

பிறப்புறுப்பில் இருந்து வெள்ளை நிறத்தில் திரவம் வெளியேறலாம் இது முதல் மாதவிடாயின் முக்கிய அறிகுறியாக காணப்படும்.

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால் இது ஏற்படும் இந்த அறிகுறி வந்தபின் 6 முதல் ஒரு வருடத்திற்குள் அந்த சிறுமி பருவம் அடையலாம் என்று நம்பப்படுகிறது.

மனநிலை மாற்றம்

முதல் மாதவிடாய் நெருங்கும் போது ஒரு சிறுமி தீவிர மன நிலை மாற்றங்களை சந்திக்க கூடும். இது மாதவிடாய் முடியும் வரையும் நீடிக்கலாம். அந்த சமயத்தில் அதிக பதற்றம், எரிச்சல் இருக்கும். தூக்கத்திலும் சற்று தொய்வு இருக்கும். தூக்கம் வராமல் தவிக்க கூடிய நிலையும் சிலருக்கு வரலாம்.

முதல் மாதவிடாய் காலம்

ஒரு சில சிறுமிகளுக்கு முதல் மாதவிடாய் 3 நாட்கள் வரலாம். ஒரு சிலருக்கு ஒரு வாரம் வரையும் நீடிக்கலாம். ஆனால், 3 முதல் 7 நாட்களுக்கு மேல் ஆகும். அதற்கு மேலும் மாதவிடாய் ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்

எப்போது மருத்துவர் தேவைப்படுவார்?

7 நாட்களுக்கு பின்பும் ரத்தப்போக்கு நிற்காமல் இருப்பது, மாதவிடாய் மிகக் குறைந்த நாட்கள் வருவது, மாதவிடாயின் போது அதீத வயிற்று வலி மயக்கம் உண்டாதல் போன்ற சூழ்நிலை வந்தால் மருத்துவரை சந்திக்க வேண்டும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE