மொறு மொறு மெதுவடை வேண்டுமா?

உளுத்தம் பருப்புடன் கொஞ்சம் பச்சரிசி சேர்த்து ஊற வைத்து அரைத்து, சுட்டு பாருங்கள். மெதுவடை மொறுமொறுப்பாக இருக்கும்.

முட்டை கெட்டுப் போகாமல் இருக்க என்ன செய்வது?

முட்டையின் மீது லேசாக எண்ணெய் தடவி வைத்தால் முட்டை விரைவில் கெட்டுப் போகாமல் இருக்கும்.

சாப்பாடு உதிரி உதிரியாக

அரிசி ஊற வைக்கும் போது சில ஐஸ்கட்டிகள் சேர்த்து ஊறவைத்தால் சாதம் உதிரியாக வரும். அத்துடன் சாதம் வெள்ளையாகவும் வரும். பழுப்பு நிறத்தில் சாதம் வராது.

உப்பு நீர்த்துப் போகாமல் இருக்க. .

மழைக்காலங்களில் உப்பில் நீர் சேராமல் இருக்க, பிளாஸ்டிக் சீட் போட்டு அதன் மேல் உப்பை கொட்டி வைக்கவும். அப்படியிருந்தால் உப்பில் நீர் சேராது.

பொடியாய் ஏலக்காய் அரைக்க

ஏலக்காயை பொடியாக அரைக்க ஏலக்காயுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்துக் கொண்டு, அதை பொடி செய்தால் ஏலக்காய் பொடியாக அரைத்து விடும்.

தயிர் ஓவராக புளிக்காமலிருக்க

தயிர் புளிக்கின்ற நிலை வரும்போதே, அதில் ஒரு துண்டு தேங்காயை போட்டு வைக்கவும். அப்படி செய்தால் தயிர் அதிகமாக புளிக்காது.

முட்டை தோல் எளிதில் உரிக்க

முட்டை தோல் எளிதாக உரிக்க வர முட்டை வேக வைக்கும் போதே சிறிது உப்பு சேர்க்கவும். அப்போது முட்டையின் தோல் எளிதாக உரிந்து வரும்

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE