பார்லரே போகாம முடி ஷைனிங் ஆகணுமா? இதை ட்ரை பண்ணுங்க
கடைகளில் 5 ரூபாய் 10 ரூபாய்க்கு கிடைக்கும் வாழைப்பழங்களை விடுத்து விட்டு பெரும்பாலான பெண்கள் ஹேர் ஷைனிங்காக இருக்க வேண்டும் என்பதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்து காஸ்மெட்டிக் பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
அதே பனானா ஹேர் மாஸ்க் என்ற பெயரில் கடைகளில் விற்றால் அதையும் வாங்கி பயன்படுத்துகின்றனர். இன்னும் ஒரு சிலர் அடுத்த படிக்கு சென்று பார்லருக்கு சென்று ஆயிரக்கணக்கில் பணத்தை செலவிடுகின்றனர்.
ஆனால் வாழைப்பழமும் சிறிது கற்றாழையும் மட்டுமே வைத்து வீட்டிலேயே பளபளவென உங்கள் தலைமுடி மின்னும் வகையில், எப்படி ஒரு ஹேர் மாஸ்க் எப்படி தயாரிக்கலாம்? அதை எப்படி பயன்படுத்தலாம் ?என்பதை த காரிகை உங்களுக்கு சீக்ரெட் டிப் ஆக வழங்குகிறது.
உடல் ஆரோக்கியத்திற்கு எப்போதுமே வாழைப்பழம் மிகவும் உகந்தது. அதன் வழவழப்புத் தன்மை எளிதில் ஜீரணத்துக்கு உதவும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதேபோல் தான் வாழைப்பழம் ஆனது ஹேர் மாஸ்காக பயன்படுத்தும் போது பொடுகை தடுத்து, உச்சந்தலையை ஈரப்பதமாக்கி தலைமுடியை மினுமினுக்க செய்யும்.
வாழைப்பழத்தில் பொட்டாசியம், இயற்கை எண்ணைகள், வைட்டமின்கள் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்துள்ளன. எனவே இது தலைமுடியை மிருதுவாக்கும்.
வாழைப்பழத்தோடு கற்றாழையும் சேர்த்துக் கொள்ளலாம். கற்றாழையில் வைட்டமின் ஏ பி சி மற்றும் ஈ ஆகியவை நிறைந்திருக்கும்.
எனவே உங்களது உச்சந்தலையில் குவிந்துள்ள இறந்த செல்களை அகற்றவும், முடியை மிருதுவாகவும், முடி வளர்ச்சியை தூண்டவும் கற்றாழை மிகவும் உதவும். ஏனெனில் இதில் புரோட்டியோலிடிக் என்சைம்கள் உள்ளன.
உச்சந்தலையில் மட்டுமின்றி தலையில் எந்த இடத்தில் இறந்த செல்கள் இருந்தாலும் அதை உடனடியாக இது கிளியர் செய்யும் ஒரு உன்னதமான ஹேர் மாஸ்க் இதுவாகும்.
ஹேர் மாஸ்க் தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்
3 மீடியம் சைஸ் வாழைப்பழம்
கற்றாழை 1
செய்முறை
கற்றாழையின் மேல் தோலை உரித்து விட்டு அதன் கூளை நன்றாக பிரித்து எடுக்கவும்.
கற்றாழையின் கூளையும் வாழைப்பழங்களையும் மிக்ஸியில் போட்டு நன்றாக கெட்டியாக பேஸ்ட் ஆக மாறும் வரை அரைக்க வேண்டும்.
எப்படி பயன்படுத்துவது?
இந்த வாழைப்பழ கற்றாழை ஹேர் மாஸ்கை தலை முடியின் வேர்களில் தான் அதிகம் பயன்படுத்த வேண்டும்.
வேர்களில் ஆழமாக இறங்கும் வகையில் இந்த கலவையை பயன்படுத்த முழு உச்சந்தலையிலும் தடவ வேண்டும்.
2 முதல் 3 மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விட வேண்டும்.
இதை அடுத்து தலை முடியை குளிர்ந்த நீரில் ஷாம்புடன் பயன்படுத்தி நன்றாக கழுவிக் கொள்ளவும்.
இதேபோல் வாழைப்பழத்தோடு, கற்றாழை கிடைக்காவிட்டால் அதற்கு பதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி இதே போன்று கெட்டியாக கிரீமை போல் பேஸ்ட் ஆகும் வரை கலந்து தலையில் தேய்த்து குளித்து வர கேசம் மிருதுவாகும்.
கற்றாழை தேங்காய் எண்ணெய் மட்டுமின்றி, பசும்பாலிலும் பப்பாளியிலும் கூட வாழைப்பழத்தோடு சேர்த்து ஹேர் மாஸ்க் செய்யலாம்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.