சத்யராஜ், நமீதா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்த இங்கிலீஷ்காரன் படத்தில், தாலி கட்ட கூட யாரேனும் கட்டிவிட்டால் நன்றாகத்தான் இருக்கும் என சோம்பேறித்தனமாக ஒரு வசனம் பேசி இருப்பார் சத்யராஜ்.

அந்த வகையில், ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு AI தொழில்நுட்பம் தான் பெண் பார்த்துக் கொடுத்துள்ளது. அது எப்படி என்பதை விளக்குகிறது த காரிகை.

உலகிலேயே AI தொழில்நுட்பத்தின் chat gpt பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சாட் ஜிபிடியை மாணவர்களே தற்போது பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இது படிப்பு உள்ளிட்ட பல விஷயங்களுக்கும் உதவும் ஒரு உன்னதமான தொழில்நுட்பம் தான். ஆனால், இந்த தொழில்நுட்பம் வரும் காலத்தில் ஏராளமான மனித உழைப்பாலிகளை வேலை வாய்ப்பு இன்றி அமர வைத்து விடும் என்று ஒரு குற்றச்சாட்டையும் ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

அப்படி நம்மில் பலரது பணியையும் AI தொழில்நுட்பம் பெற்றுக் கொள்ளும் எனில், அந்த ஒரு தொழில்நுட்பத்தை ஏன் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தக் கூடாது? என்று பலரும் கேள்வி எழுப்பி அதை ஒரு விவாத பொருளாகவே மாற்றிவிட்டனர்.

அப்படியிருக்க ரஷ்யாவை சேர்ந்த ஜோனத்தன் என்பவர், தனக்கு பெண் தேடும் பணியை AI தொழில்நுட்பத்திடம் ஒப்படைத்து விட்டார்.

அதில் உள்ள சாட் ஜி பி டி யின் தொழில்நுட்பம் தான் அவருக்கு ஒரு பெண்ணை பார்த்து கொடுத்துள்ளது.

திருமணம் செய்வதற்காக நீண்ட நாட்களாக பெண் தேடி வந்தவர் ஜோனதன். பின்பு டின்டர் என்ற செயலி மூலம் பெண் தேடலாம் என நட்புகள் சொல்ல, அந்த செயலியையும் தனது போனில் பதிவிறக்கம் செய்து பெண் தேடி வந்தார்.

ஆனால் சாப்ட்வேர் டெவலப்பராக பணியாற்றி வரும் ஜோனதனுக்கு, இது அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் அவர் சாட்ஜிபிடி இடம் தனது எதிர்பார்ப்புகள் குறித்து முழுமையாக ஒரு நாள் கூறிவிட்டார்.

எனவே அந்த சேட் ஜி பி டி ஆனது டிண்டரில் உள்ள பெண்களை அலசி, ஆராய்ந்து அவர்களுடன் உரையாடியது.

கிட்டத்தட்ட 5000 பெண்களிடம் சேட் ஜி பி டி ஜோனத்தனை போல உரையாடியது.

இதையடுத்து ஒரு ஆண்டுக்குப் பின்பு ஒரு நாள் சாட் ஜி பி டி ஆனது, ஜோனதனிடம் “உங்களுக்கான பெண்ணை கண்டுபிடித்துவிட்டோம்” என்று மகிழ்ச்சிகரமான செய்தியை கூறியுள்ளது.

அந்தப் பெண்ணையும் ஜோனதன் சந்தித்து பேசும் போது தனது விருப்பத்துக்கு ஏற்ப சரியான துணையையே சாட் ஜிபிடி தேர்வு செய்து கொடுத்திருப்பதாக கூறியுள்ளார்.

AI தொழில்நுட்பமான சாட் ஜி பி டி திருமண வரன் பார்க்கும் தரகர்களின் வேலையை தற்போது பறித்துள்ளது என்றே சொல்லலாம்.

உண்மையில் தரகர்கள் பார்த்து இருந்தால் கூட இவ்வளவு பொருத்தமான ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து இருக்க முடியாது என்றும் பெருமிதத்தோடு கூறியுள்ளார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE