நிர்மலா சீத்தாராமன் கூறிய கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி – முழு விவரம் என்ன?

மத்திய அரசின் இன்று வெளியிடப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், பெண் குழந்தைகளுக்கான கர்ப்பப் பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி வழங்குதல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கர்ப்பப் பை வாய் புற்று நோய்தான் புற்றுநோய் உயிரிழப்புக்களிலேயே அதிக உயிரிழப்பாக இருந்தது. இதை முந்திக் கொண்டு மார்பகப் புற்றுநோய் போட்டி போட்டு வருகிறது. எனவே, இதனைத் தடுக்கும் பொருட்டு 2010-ல் கர்ப்பப் பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியின் சோதனை முயற்சி நடைபெற்றது. அதில் சில சிறுமிகள் இறந்ததாகக் கூட சர்ச்சை எழுந்தது.

யாருக்கு பாதிப்பு?

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 1 லட்சம் பெண்கள் கர்ப்பப் பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் உயிரிழப்பும் அதிகமாகத்தான் உள்ளது. உலகளவில் ஏற்படும் புற்று நோய்களில் 4-வது இடத்தில் கர்ப்பப் பை வாய் புற்றுநோய் உள்ளது. 15 முதல் 44 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத்தான் இந்த வகையான புற்று நோயால் அதிக பாதிப்பு ஏற்படுகிறது.

எப்படி ஏற்படுகிறது?

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பது HPV என்ற மனித பாப்பிலோமா வைரஸால் ஏற்படுகிறது. இது பெரும்பாலும் உடலுறவு கொள்ளும்போது பரவும் வைரஸ். இது அசாதாரண செல் வளர்ச்சியை ஏற்படுத்தி விடும். எனவேதான், இந்தக் கிருமி பரவ ஆரம்பிப்பதற்கு முன்பாகவே தடுப்பூசி போடப்பட வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது,

யாருக்குத் தடுப்பூசி?

பெண் குழந்தைகள் 9 முதல் 14 வயதுக்குள் இருக்கும்போதே அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் என மருத்துவம் சொல்கிறது. எனவே அந்த வயதை எட்டும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

எப்போது முழு பயன் கிடைக்கும்?

9 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டால், வரும் 2030-க்குள் இள வயதுள்ள அனைத்துப் பெண்களும் இந்த கொடிய நோயில் இருந்து காக்கப்படுவார்கள்.

கேள்விகள்?

இந்த கர்ப்பப் பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியின் விலை எவ்வளவு? எப்போது பயன்பாட்டுக்கு வரும்? பின்விளைவுகள் ஏதும் உள்ளதா? இந்தத் தடுப்பூசியைப் போட்டாக வேண்டும் என்ற கட்டாயம் உள்ளதா? என்பன பற்றிய முழு விவரம் தெரியவரவில்லை. மேலும் இத்திட்டம் அமலுக்கு வரும்போது, இந்த கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என நம்பப்படுகிறது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE