பட்ஜெட்டில் பெண்களுக்கும், விவசாயிகளுக்கும், இளைஞர்களுக்கும் என்ன ஸ்பெஷல்?
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்த ஒரே பெண் நிதியமைச்சர் என்ற பெருமையைக் கொண்ட நிர்மலா சீத்தாராமன், வரும் ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெறுவதால் இந்த முறை இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார்.
பெண்களுக்கானது
இளம் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஊக்கம் அளிப்பு
30 கோடி முத்ரா கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
பெண்கள் மேற்படிப்பில் சேர்வது 28% உயர்ந்துள்ளது.
83 லட்சம் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 9 கோடி பெண்கள் கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தினர்
2 கோடி பெண்கள் சுய உதவிக் குழுக்களை உருவாக்கும் இலக்கு 3 கோடியாக உயர்வு
விவசாயிகளுக்கான அறிவிப்புக்கள்
கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் 11.8 கோடி விவசாயிகளுக்கு நேரடி நிதியுதவி
4 கோடி விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு
“அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைத் தடுக்கும் கட்டமைப்புக்கு முதலீடு ஈர்ப்பு
எள், நிலக்கடலை, சூரியகாந்தி ஆகிய எண்ணெய் விதைகள் பயிரிட ஊக்கம்
இளைஞர்களுக்கு
‘ஸ்கில் இந்தியா’ திட்டத்தின் மூலம் 1.4 கோடி இளைஞர்களுக்குப் புதிய திறன் பயிற்சி
54 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி
3,000 புதிய தொழில் பயிற்சி நிறுவனங்கள் தொடக்கம்
“புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக 50 வருடங்களுக்கான வட்டியற்ற 1 லட்சம் கோடி கடன்
“2010-ல் இருந்த 20 செஸ் கிராண்ட் மாஸ்டர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்வு
2023-இல் இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், பாரா ஆசியப் போட்டிகளிலும் அதிக பதக்கம்
பொது
மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்த ஒரு குழு அமைக்கப்படும்.
சராசரி வருமானம் 50% உயர்ந்திருக்கிறது.
பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
40,000 சாதாரண ரயில் பெட்டிகள் வந்தே பாரத் பாரத் பெட்டிகளாக மாறப்படும்.
சிறிய நகரங்களுக்கும் விமான நிலையங்கள், விமானச் சேவைகள் வழங்கப்படும்.
சுற்றுலா மேம்பாட்டுக்கான திட்டங்கள்
லட்சத்தீவுகளுக்கான சுற்றுலா வசதிகள் மேம்படுத்தப்படும்.
உள்நாட்டுச் சுற்றுலா வளர்ச்சி உள்ளூர் தொழில்முனைவோருக்கு வாய்ப்பு
சுற்றுலா தலங்களை மேம்படுத்த ஊக்குவிக்கப்படும்.
சுற்றுலாவிற்கான துறைமுக இணைப்புகள் மேம்படுத்தப்படும்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.