விஜய் டிவியின் கேம் ஷோ ஆன பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தாலே அவர்களுக்கு வெள்ளித்திரையில் நல்ல ஒரு இடம் காத்து இருக்கிறது என்று அர்த்தம். அந்த வகையில் இதுவரை நடைபெற்ற பிக் பாஸின் 7 சீசன்களிலும், பலரும் பங்கேற்று பல உயரங்களை தொட்டுவிட்டனர். ஆனால் டைட்டில் வின்னர்களின் நிலைமை மட்டும் தேட வேண்டியதாக உள்ளது.

அப்படி கூகுளில் தேடி டைட்டில் வின்னர்கள் என்னென்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தொகுத்து வழங்குகியுள்ளோம்.

ஆரவ்

முதல் சீசன் வெற்றியாளர் ஆரவ். பிக் பாஸ் தொடங்கியதுமே அதீத எதிர்பார்ப்பு. எனவே அந்த எதிர்பார்ப்பில் ஓவியா ஹிட் அடிக்க அதை அடுத்து ஆரவும் டைட்டில் வென்றார். பிக் பாஸுக்கு முன்னதாகவே பல திரைப்படங்களில் நடித்திருந்தவர் ஆரவ். ‘மார்க்கெட் ராஜா’ படத்தில் நடித்த அவர் ‘கலக தலைவன்’ படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார். உதயநிதி ஸ்டாலின் உடன் நடித்த பிறகு அஜித்துடன் ‘விடாமுயற்சி’-யிலும் நடித்து வருகிறார். அஜர்பைஜானில் நடிகர் அஜித்துடன் எடுத்த புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.

ரித்விகா

பிக் பாஸ்-ன் 2வது சீசனில் டைட்டில் வென்றவர் ரித்விகா. இவர் ஏற்கனவே மெட்ராஸ், கபாலி உள்ளிட்ட திரைப்படங்களில் இயல்பாக நடித்து மக்களிடம் பெரிதும் பரீட்சையமானவர். ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘நவரசா’ அந்தாலஜியிலும் ரித்விகா நடித்திருக்கிறார். கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 800 என்ற திரைப்படத்தில் ஒரு சின்ன ரோலில் அவர் நடித்திருந்தார். கடந்து சில மாதங்களுக்கு முன்பு புதிய படத்திற்கான வழக்கறிஞர் கெட்டப்பை தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்திருக்கிறார்.

முகேன் ராவ்

இண்டிவிஜுவல் பாடகராக வந்த அவர் பிக் பாஸில் அறிமுகமாகி, 3வது சீசனின் டைட்டிலை வென்றார். அவர் சூரி உடன் சேர்ந்து ‘வேலன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். அதை அடுத்து ஹன்சிகாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் அவரது நடிப்பு மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. இதை அடுத்து ‘மதில் மேல் காதல்’, ‘வெற்றி’, ‘காதல் என்பது சாபமா’ ‘ஜின்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்

ஆரி அர்ஜுனன்

‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’, ‘நெடுஞ்சாலை’ உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் அறிமுகமான ஆரி பிக் பாஸில் 4வது சீசன் டைட்டில் வென்றவர். உதயநிதி ஸ்டாலின் உடன் நெஞ்சுக்கு நீதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அவர் ‘அலேக்கா’, ‘பகவான்’ உள்ளிட்ட படங்களிலும் ‘ சேரனின் ஜர்னி’ என்ற வெப் சீரிசிலும் ஆரி நடித்திருந்தார்.

ராஜு

‘கனா காணும் காலங்கள்’, ‘சரவணன் மீனாட்சி’ என சின்னதிரையில் நடித்து வந்த ராஜு, நடிகர் கவின் நடித்த ‘நட்புனா என்னனு தெரியுமா’ படத்தில் அறிமுகமானார். 5வது சீசன் டைட்டில் வின்னர் ஆன இவர் சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்திலும் நண்பன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது தொகுப்பாளராக வரும் இவர் சில படங்களையும் கைவசம் வைத்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

அசீம்

‘பிரியமானவள்’ ’மாயா’ ’பூவே உனக்காக’ சீரியல்கள் மூலம் பிரபலமானவர் அசீம். வருத்தப்படாத வாலிபர் சங்கம் இயக்கிய பொன்ராமின் அதே பாணியில் மற்றொரு படத்தில் அவர் நடித்து வருகிறார். அந்த படத்திற்கான பூஜைகள் நடைபெற்றதாகவும் சொல்லப்படுகிறது.

அர்ச்சனா

நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த அர்ச்சனா, ‘ராஜா ராணி’ நாடகத்தில் நடித்து புகழ்பெற்றார். இதை அடுத்து 7வது சீசன் பிக்பாஸில் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்து டைட்டிலையும் தட்டி இருக்கிறார். இவர் நடித்துள்ள ‘டிமான்டி காலனி 2’ திரைப்படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகிறதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே பிக் பாஸில் வந்த ஹரிஷ் கல்யாண், சாண்டி, கவின் உள்ளிட்டோர் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கு முன்னேறி கொண்டு இருப்பதை வைத்து பிக் பாஸ் திறமையாளர்களை உலகுக்கு காட்டும் ஒரு நிகழ்ச்சி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்பதை மீண்டும், மீண்டும் நிரூபித்து இருக்கிறது என்றே சொல்லலாம்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE