அயோத்தி ராமர் கோவிலில் பிரம்மாண்ட பால ராமர் சிலை பிராண பிரதிஷ்டை நடைபெற்றது. இதை அடுத்து, வந்திருந்த விவிவியை பிக்களுக்கும் விஐபிக்களுக்கும் பிரத்தியேக பரிசு தொகுப்புகள் ரிட்டன் கிப்ட்ஸ் ஆக வழங்கப்பட்டுள்ளன.

பொதுவாக ஏதேனும் விசேஷங்களுக்கு செல்வோர்களுக்கு அவர்கள் வந்து சென்றமைக்காக நன்றி தெரிவிக்கும் வகையில் அவர்கள் செல்லும்போது அவர்களுடன் கொடுத்து அனுப்ப ஏதேனும் ஒரு சில பொருட்களை யோசித்து வைத்திருப்பார்கள்.

உதாரணத்துக்கு குழந்தைகளின் பிறந்தநாளுக்கு வந்து செல்லும் சக பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேனா பென்சில் அடங்கிய தொகுப்பு வழங்கப்படலாம். அதேபோல் வளைகாப்புகலுக்கு வந்து செல்வோருக்கு வெற்றிலை, குங்குமம், மஞ்சள், தாலி சரடு, வளையல் ஆகியவை கொடுத்து அனுப்பலாம். அதேபோல் சுமங்கலி பூஜை நவராத்திரி திருவிழா உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும், தற்காலங்களில் திருமணங்களில் கூட இத்தகைய ரிட்டன் கிஃப்ட்ஸ்களை கொடுத்து அனுப்புவார்கள். மரக்கன்றுகள், விதைப்பந்துகள் என ரிடர்ன் கிஃப்ட்கள் பயனுள்ள வகையில் உருவெடுத்துள்ளன.

அப்படி சரித்திர புகழ்வாய்ந்த அயோத்தி ராமர் கோவிலின் பால ராமர் சிலை பிரதிஷ்டையை அடுத்து ஏராளமான விவிஐபிகளும் அயோத்தியில் குவிந்துள்ளனர்.

அவர்கள் ராமர் கோவிலுக்கு வந்து சென்றதற்கு அடையாளமாக நன்றி தெரிவிக்கும் வகையில் கோவில் நிர்வாகம் பிரத்தியேக பரிசு தொகுப்புகளை வழங்கி உள்ளது.

இதற்காக வேறொரு கோவிலில் சுமார் 5 லட்சம் லட்டுக்கள் தயாராகி வந்தன.

தலா 50 கிராம் இடையில் 5 லட்சம் லட்டுக்களும் தலா 25 கிராம் எடையில் ஒரு லட்சம் லட்டுக்களும் பக்தர்களின் உதவியோடு வெகு சீக்கிரமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்த லட்டுக்களின் இனிப்பு பிரசாதத்துடன் ராமர் கோவில் புகைப்படம், கண்ணாடி குடுவையில் ராமர் பிறந்த அயோத்தியின் புனித மண், காவி துண்டு ஒன்று, ராமர் உருவம் பொறித்த நாணயம் ஒன்று ஆகியவை இடம் பெற்றுள்ளது.

இவற்றை உருவாக்குவதிலும் பேக் செய்வதிலும் ஏராளமான தொழிலாளர்களும் பக்தர்களும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

அயோத்தியில் பாதுகாப்புக்கு என பத்தாயிரம் கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பு கருதி இன்று அயோத்தியயின் தாம் ரயில் நிலையத்துக்கு வரும் அனைத்து ரயில்களும் அங்கு நிறுத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

CRPF வீரர்கள் ஏராளமானோர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை அதாவது ஒரு மாத காலம் அயோத்தியிலேயே தங்கி இருந்து அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்

வரும் 23- ம தேதி முதல் பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வரக்கூடும் என்பதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை கருத்தில் கொண்டு இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

You may have missed

Facebook
Instagram
YOUTUBE