அயோத்தி கட்டிடக்கலையில் மல்லைத் தமிழர்கள் – பல்லவர் சிற்பக்கலையில் அயோத்தி

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் 4300 பணியாளர்களைக் கொண்டு வெகு வேகமாகவும் அவசரமாகவும் நடைபெற்று வருகிறது. திங்களன்று நடைபெறும் பால ராமர் பிரதிஷ்டையை எதிர்நோக்கி பெரும்பாலான இந்துக்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர்.

உலகமே உற்று நோக்கும் இந்த ராமர் கோவில் கட்டுமான பணியில் தமிழகத்தைச் சேர்ந்த மாமல்லபுரத்தின் சிற்பிகளின் கைவண்ணம் இடம்பெறப் போகிறது என்பது தமிழகத்திற்கு குறிப்பாக பல்லவர்களின் சிற்பக் கலைக்கு பெருமை ஊட்டுகிறது.

அயோத்தி ராமர் கோவிலில் உள்ள 18 கதவுகளை வடிவமைக்கும் பணி மாமல்லபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு கிடைத்துள்ளது.

நேபாளத்தை ஒட்டிய இமயமலை அடிவாரத்தின் ஹரி பருவதம் என்ற ஒரு மலை உள்ளது. அந்த மலை அடிவாரத்தின் கீழ் சங்கர தீர்த்தம் என்ற பகுதியில் கந்தகி நதி உற்பத்தி ஆகி வரும். அங்கு இருந்துதான் சாளக்கிராமம் என்ற கல் கொண்டுவரப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன.

இப்படி ஒவ்வொரு பொருளையும் பார்த்துப் பார்த்து மிகவும் சிரத்தை மேற்கொண்டு தேர்வு செய்த கோவில் நிர்வாகம், மர வேலைகளுக்குத் தேர்வு செய்தது மாமல்லபுரம் தமிழர்களைத்தான்.

மர வேலைகளுக்கு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் சேர்ந்த ரமேஷ் என்ற கலைஞர் கதவுகளை தயாரித்து கொடுத்துள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் மூலம் அலகாபாத் சுற்றுலா துறையை அணுகி அயோத்தி ராமர் கோவிலுக்கு கதவு செய்யும் பணியை தங்களுக்கு ஒப்படைக்குமாறு கூறினோம்.

கதவு செய்யும் பணி கடைசி நேரத்தில் தான் நடைபெறும் என்பதால் கட்டுமான பணிகள் முடிந்த பின்பு செல்வதாக அவர்கள் கூறிவிட்டனர்.

எனவே நாங்கள் நம்பிக்கை இழந்து விட்டோம்.

இதற்கு அடுத்து எங்களுடைய மரச் சிற்ப வேலைப்பாடுகளை அவர்கள் ஆல்பமாக பார்த்தனர்.

அப்போதுதான் அயோத்தி ராமர் கோவிலின் மொத்த உருவத்தை மினியேச்சர் மாடலாக செய்து கொடுக்க முடியுமா? என்று கூறினார்கள் மிகக் குறுகிய காலத்தில் நாங்களும் அதை உருவாக்கி தந்தோம்.

இதை அடுத்து கோவிலின் கர்ப்ப கிரகம் உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் 18 கதவுகளை பொருத்தும் பணி வழங்கப்பட்டது. அதை மிகவும் தீவிரமாக செய்து வருகிறோம்.

அதுமட்டுமின்றி பாலாலயத்தில் உள்ள சிற்பத்தை கருவறைக்கு எடுத்துச் செல்ல பல்லுக்கும் செய்து கொடுக்குமாறு கேட்டார்கள். அதையும் உடனடியாக செய்து விமான மூலம் பத்திரமாக அனுப்பி வைத்தோம்.

வட இந்திய மற்றும் தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையே ஒரு நல்ல பாலம் போன்ற பிணைப்பை நாங்கள் ஏற்படுத்திருக்கிறோம் என்பது எங்களுக்கு மிகவும் பெருமைக்குரிய விஷயம்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி ராமர் கோவிலின் கட்டுமான பணியில் மாமல்லபுரம் சிற்பிகளும் இருப்பது தமிழகத்திற்கு பெருமை அளிக்கிறது.

யாராக இருந்தாலும் தமிழர்கள் செய்த கதவை தாண்டித்தான் அவர்கள் உள்ளே வருவார்கள். எங்களது மரச்சிற்பங்களை மக்கள் தொட்டுப் பார்த்து ரசித்து தான் உள்ளே செல்வார்கள் என்று அவர் பெருமிதத்தோடு கூறினார்.

பிரதான கதவில் யானை வரவேற்று, தாமரை மலர் விரிந்திருப்பது போன்றும், மயில்களையும் செதுக்கி அழகான சிற்ப வேலைகளைச் செய்துள்ளனர்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE