“உனக்கு எதாச்சும் வேணும்னு கேட்ருந்தா அக்காவே குடுத்திருப்பேனே” – கதறும் எம்எல்ஏ மருமகள்

18 வயது இளம் பணிப்பெண்ணை ஏஜென்சி மூலம் பணிக்கு எடுத்து பல கொடூர சித்ரவதைகளைச் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, தற்போது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனத்துக்கும் ஆளாகி வருகிறார் பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மருமகள் மெர்லின்.

அந்த இளம் பெண்ணை, அடிப்பது, சூடு வைப்பது, மிளகாய்ப் பொடி தண்ணீரை குடிக்க வைப்பது, ஆடையின்றி வெளியில் நிறுத்துவது என பல கொடூர குற்றச்சாட்டுக்கள் அந்த பணிப்பெண்ணால் வைக்கப்பட்டுள்ளது. அதன் முழு கட்டுரையைக் காண இங்கு கிளிக் செய்யவும்.

தற்போது குற்றச்சாட்டுக்கு ஆளான மெர்லினா வெளியிட்டதாகக் கூறி ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் அழுதபடியே பேசி, பணிப்பெண்ணுக்கான ஒரு செய்தியையும் கொடுத்திருக்கிறார்.

“கடந்த 2-3 நாளா இந்த பிராப்ளம் நடக்குது, ஆனா, எதுனால இந்த பிராப்ளம்னு எனக்கு சத்யமா புரியல. பிரஸ், மீடியாவுக்கெல்லாம் ஒரு ரிக்வஸ்ட். கெட்ட கெட்ட வார்த்தைகள்ல கமென்ட் பண்றாங்க. அரசியல் பின்னணியில் இருந்து வந்ததால அடுத்தவங்கள மிரட்டும் கொடுமைக்கார உலகத்துல நாங்க வாழல.

இங்க சுத்தி இருக்குறவங்கள விசாரிச்சா தெரியும். இது ரொம்ப அபாண்டமா, கொச்சையா இருக்கு. ரொம்ப மன உளைச்சல் ஏற்பட்டு 3 நாளா என்னால சாப்ட முடியல, தூங்க முடியல. என் பாப்பாவக் கூட என்னால பார்க்க முடியல. இதுக்குப் பின்னாடி யார் இருக்கான்னு தெரியல. அந்தப் பொண்ண நான் என் வீட்ல ஒரு பொண்ணா தான் பாத்திருக்கேன். அது அவளுக்கே நல்லா தெரியும்.

இந்த மெசேஜ என்னால அவகிட்ட டைரக்டா கன்வே பண்ண முடியல. உங்களால முடிஞ்சா கன்வே பண்ணிடுங்க. “ரேகா, உனக்கு அக்காவப் பத்தி நல்லா தெரியும். அக்கா உன்னை எந்த விதத்திலயும் கஷ்டப்படுத்துனதோ, நினச்சதோ இல்ல. உன் கைப்பட எனக்கு லெட்டர்லாம் நீ எனக்கு எழுதி வெச்சுருக்க அப்டிங்கறதையே நான் இப்பத்தான் உன் பேக்க பேக் பண்ணனும்னு திறந்து பாக்கும்போது தெரியுது.

இவ்ளோ லவ், இவ்ளோ பாசம் இருக்குற நீ, எதுக்காக இதெல்லாம் செய்யுற மா? உனக்கு எதாவது வேணும்னா அக்காகிட்ட நீ பேசியிருக்கலாமே? எதுக்காக நீ இவ்ளோதூரம் ஒரு ஃபேமிலிய டேமேஜ் பண்ற மா? அதோட சீரியஸ்னஸ் புரியாம இதெல்லாம் நீ செஞ்சுட்டு இருக்க. இது சரியில்ல மா, உனக்கு புரியல.

என்னப்பத்தி, அண்ணனப்பத்தி, பாப்பாவப் பத்தி நீ பேசுற. பரவால்ல, நீ பேசிட்ட. எங்க மாமனாரு என்னமா பண்ணாரு? எத்தனை வருஷம் உழைப்பு தெரியுமா மா? நைட்டும் பகலும் தூங்காம, எவ்ளோ பேர பாத்து, கஷ்டப்பட்டு. . .

எங்க குடும்பத்துக்குள்ளயே இதுனால ஒரு பெரிய பிரச்னை ஏற்படும் இல்ல மா? அதெல்லாம் நீ யோசிக்க மாட்டியா? தயவுசெஞ்சு சொல்றேன், நீ எந்த புகார் குடுக்குறதா இருந்தாலும் எங்களப் பத்தி பேசு. ஆனா, பொதுவாழ்க்கைல இருக்குறவங்கள இழுத்து அட்டேன்சன் கொண்டு வரனும் னு நினைக்கக் கூடாதும்மா. அது ரொம்ப தப்பு.”

என அழுதபடியே கூறியுள்ளார் மெர்லின். அவரின் முழு ஆடியோவைக் கேட்க இங்கு கிளிக் செய்யவும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE