பசங்களா! சமையல் ஒரு சர்வைவல் கலை. .!
எனக்கு சுடுதண்ணி கூட வைக்க தெரியாது என ஸ்டைலாக சொல்வதை பலரும் ஒரு ஸ்டேட்டஸ் ஆகவே பார்க்கின்றனர்.
பெண்கள் மட்டும் இன்றி ஆண்கள் கூட இதை ஒரு பெருமையாக பொதுவெளிகளில் நண்பர்களுக்கு மத்தியில் பேசிக் கொள்கின்றனர்.
ஆனால் அதன் பின் விளைவு என்ன ஆகும் என்பதை தற்போதைய கனடாவின் சூழல் நமக்கு எச்சரிக்கிறது.
2011 ஆம் ஆண்டு நிதி நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பாக கனடாவில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் சமைப்பதில்லை.
மிக சுலபமாக கிடைக்கும் உணவு என்பதால் அனைத்தையும் கடையில் ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டு வந்தனர்.
இதுகுறித்து பேசிய கனடாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்ணான ராஜ் தந்தி, “எனது பாட்டியும் அம்மாவும் நன்றாக சமைப்பார்கள். ஆனால், அவர்களிடம் நான் கற்றுக் கொள்ளவில்லை. 2011 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை நாங்கள் கடைகளில் தான் ஆர்டர் செய்து சாப்பிட்டு வந்தோம். அது மிகவும் சுலபமாக இருந்தது.
ஆனால், பொருள்கள் எல்லாம் விலை உயர்ந்த பின், அது எங்களுடைய சராசரி பட்ஜெட்டில் மிக அதிகமான தொகையை கிரகித்துக் கொண்டது.
இதன் காரணமாக, நாங்கள் படிப்படியாக கடைகளில் ஆர்டர் செய்வதை குறைத்துக் கொண்டோம். பருப்பு, கீரை உள்ளிட்டவற்றைக் கொண்டு பஞ்சாபி உணவுகளை சமைத்து சாப்பிட பழகிவிட்டோம். இதனால், எங்களுடைய நிதி நிலைமை தற்போது சீராக உள்ளது.” எனக்கு கூறினார்.
கனடாவின் குயிலஃப் பல்கலைக்கழக விவசாயம் மற்றும் உணவுத்துறை பேராசிரியர் மைக் வான் மேசோ பேசும்போது, “30 அல்லது 40 வருடங்களுக்கு முன் ஆண் பெண் பாரபட்சமின்றி அனைவரும் சமையல் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
எனவே மிகக் குறைவான விலையுள்ள பொருட்களைக் கொண்டு எப்படி சமைப்பது என்பது தெரிந்திருந்தது. ஆனால் சமைப்பதற்கான தேவையை குறைத்துக் கொண்டதால் தான் விலைவாசி உயர்வு கடும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது.” எனக் கூறினார்.
டொரண்டோ பகுதி உணவுத்துறை வல்லுனரான ஸ்மித் இது குறித்து பேசியபோது, “நாங்கள் பள்ளி படிக்கும்போது 8ம் வகுப்பில் அடிப்படை சமையல் என்பது ஒரு பாடத்திட்டமாகவே இருந்தது. எனவே எத்தகைய சூழல் வந்தாலும் தாங்களே சமைத்து சாப்பிடும் அளவிற்கு பசியை போக்கும் அளவிற்காவது மாணவர்கள் சமையலை கற்றுக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த பாடத்திட்டம் நீக்கப்பட்ட பின்பு சமைப்பதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. அதனால் தான் தற்போதைய விலைவாசி உயர்வால் பெரும்பாலான இந்த தலைமுறை என கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.”
இவர்கள் கூறுவதை வைத்து பார்க்கும் போது இந்தியாவிலும் வீட்டில் சமைக்கும் பழக்கம் குறைந்து ஆர்டர் செய்யும் பழக்கங்கள் அதிகமாகி வருகிறது.. இதன் விளைவாக அடுத்த சில ஆண்டுகளில் கனடாவை போன்று தற்போதைய இளைஞர்கள் சமையலை மறந்து ஆர்டர் செய்வதை மட்டும் வாழ்க்கை முறையாக கொண்டு இருந்தார்கள் என்றால், அவர்கள் இது போன்ற விலைவாசி உயர்வில் சிக்கி உணவுக்காக தவிக்க நேரிடும் என்று தெரியவந்துள்ளது. எனவே சமையல் என்பது ஒரு சர்வைவல் கலை என்பதால் ஆண் பெண் என பாரபட்சமின்றி இதனை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கனடாவை பார்த்து இன்றைய இளம் தலைமுறையினர் சிலர் சமையலை கற்றுக் கொள்வார்கள் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
குறைந்தபட்சம் தோசை, சாதம், பொரியல், வெரைட்டி ரைஸ் ஆவது கற்றுக்கொண்டால், கடினமான நிதிநெருக்கடி காலங்களில் சர்வைவாகலாம்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.