மனுஷங்கள விட சுத்தமா இருக்குற விலங்குகள். ஷாக் தரும் முதலிடம்.

பொதுவாக விலங்குகளை விட மனிதர்கள் தான் சுத்தமானவர்கள் என நாம் நினைத்திருப்போம். ஆனால் மனிதர்களை விட உலகில் சுத்தத்தை விரும்பும் விலங்குகள் அதிகம் உள்ளன. அவற்றில் டாப் 5வில் இருக்கும் விலங்குகளை பார்த்தால் நீங்கள் ஆச்சரியப்பட்டு போவீர்கள். மிகவும் அசத்தமான விலங்கு என்று நினைத்திருக்கும் ஒன்று தான் முதலிடத்தை பிடித்துள்ளது என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் தான்.

அதன் அந்த வகையில் உலக அளவில் எந்தெந்த விலங்குகள் தங்களை தாங்களே சுத்தமாக வைத்துக் கொள்ளும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  1. டால்பின்

பொதுவாக ஒரு பொருளையோ அல்லது யாரையேனும் சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் நீரைக் கொண்டுதான் சுத்தப்படுத்துவார்கள். எனவே நீரில் வாழும் உயிரினங்கள் எப்போதுமே சுத்தமாக தான் இருக்கும் என்பது நமது பொதுவான கருத்தாகும். ஆனால் மனிதர்களாலும் சில சமயம் இயற்கைனாலும் கூட கடலில் மாசுக்கள் அதிகம் உள்ளது.

எனவே அந்த மாசு நீரில் இருக்கும் மீன்கள் தங்களை சுத்தம் செய்ய முனைவதில்லை. ஆனால் டால்பின் ஆனது நீரை விட்டு மேலே எகிறி குதித்து கீழே மீண்டும் தண்ணீருக்குள் விம்ழுவதே தங்கள் உடலில் ஒட்டி உள்ள தூசு மற்றும் ஒட்டுண்ணிகளை கீழே வீழ்த்த தான் என சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

4.பனிக்கரடி

பொதுவாக கரடி சோம்பேறித்தனத்துக்கு பெயர் போனது. ஆயினும், பனிக்கரடிகள் உலகளவில் தங்களைசுத்தமாக வைத்துக் கொள்ளும் டாப் 5 விலங்குகளில் 4-ம் இடத்தில் உள்ளது. பனிப்பிரதேசத்தில் வாழும் கரடிகள் சூரிய வெளிச்சத்தில் அதிக நேரம் இருக்காது. எனவே அதன் உடல் உரோமத்தில் ஒட்டியுள்ள உண்ணிகளை விரட்ட, அது தினமும் கடலில் குளித்து, பனியில் புரண்டு எழும்.

  1. முயல்கள்

முயல்கள் எப்போதும் அழகானவை மட்டுமல்ல. சுத்தமானவையும் கூட. அது படுக்கும் இடம், வசிக்கும் இடம் ஆகியவற்றைச் சுத்தமாக வைத்துக் கொள்ளும். தான் சாப்பிடும் உணவுகளையும் அது சுத்தமாக வைத்துக் கொள்ளும். பாதம், நாக்கின் மூலம் தனது உடலை சுத்தம் செய்து கொள்ளும்.

  1. பூனை

பூனையின் உடல் இயற்கையாகவே சுத்தமாக இருக்கும். அதன் உடலை தனக்குத் தானே சுத்தம் செய்து கொள்ளத் தேவையான சுரப்பிகள் சுரக்கும். அதன் முடியை சீராக வைத்துக் கொள்ள அதன் நாக்கு ஒரு சொரசொரப்பான வடிவில் இருக்கும்.

  1. வெண்பன்றி

முதல் இடத்தில் உள்ளது வெண்பன்றிக்கள் தான் என சிலர் கூறுகின்றனர். இவை, சூரிய ஒளியில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள சேற்றில் புரண்டாலும், அதன் பின் தன்னைத் தானே சுத்தப்படுத்திக் கொள்ளும். உணவுக்கான இடத்தையும் கழிவுக்கான இடத்தையும் தானே பிரித்து வைத்துக் கொள்ளக் கூடியவை.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE