அர்ச்சனா மத்தவங்க கிட்ட வேலை வாங்குறாங்க என்பதை நடித்துக் காட்டி கிண்டல் செய்து கொண்டு இருந்தார் மாயா. உங்களது திறமையை காட்டி இந்த வாய்ப்பை பயன்படுத்தி வெல்லுங்கள் என கமல் சொன்னது நினைவு வந்து விட்டது போல.

“என்ன கொஞ்சனுன்னா கூட அவங்க இடத்துக்கு தான் என்ன கூப்பிடுறாங்க” என அர்ச்சனாவின் சோம்பேறித் தனத்தைப் பற்றிக் கூறினார் ரவீனா.

சாப்பாட்டு பாத்திரத்தில் முந்தைய நாளே தண்ணீரை விட்டு வைத்திருக்க வேண்டும் என அர்ச்சனா சொன்னதும் மைல்டாக கோபப்பட்டார் தினேஷ்.

இதையடுத்து விசாரணை நாள் தொடங்கியது. திரையில் தோன்றிய கமல் “குடும்பத்தாரை சந்திச்சீங்களே சந்தோஷமும் அன்பும் பெருகி ஓடிச்சு. அவங்க கொடுத்த அறிவுரை எல்லாம் ஏற்புடையதாக இருந்ததா என ஒவ்வொருவரும் அவர்களுடைய அனுபவத்தை பகிர்ந்தனர்.

விசித்ரா குழந்தையாவே மாறிட்டாங்க. பூர்ணிமா சோஃபா பின்னாடி ஒளிஞ்சிட்டாங்க. ஒருத்தர் ஐஏஎஸ் ஆபீஸராக இருந்தாலும் 7-ம் கிளாஸ் வாத்தியாரை பார்த்ததும் பணிவா கைய கட்டி நிப்பாங்கல்ல? அந்த மாதிரிதான் பாலச்சந்தர் சார் கிட்ட நான் நிற்பேன்.” என தனது கதையை பல இடங்களில் சொல்ல ஆரம்பித்தார் கமல். பாலச்சந்தர் சாருடைய நினைவு நாள் கூட.

“தன்னோட அம்மா இறந்த அப்போத்தான் தன்னோட தந்தையே தொட்டு பார்த்தேன்” என கமல் கூறியது சற்று நிகழ்ச்சியாக இருந்தது.

பின்னர் முந்தைய தலைமுறையினர் காட்டிய பாசத்தை விட இந்த தலைமுறை காட்டும் பாசம் அதிகமாக தெரிகிறது என்று சரவணன் விக்ரம் குடும்பத்தார் காட்டிய பாசத்தை பார்த்து பேசினார் கமல்.

எங்க அம்மா டான்ஸ் ஆடி முதல் முறையா பார்த்தேன் என தினேஷ் கூறியதும், தங்கச்சிங்க எனக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க என விஷ்ணு கூறியது பற்றியும் கமல் தனது கருத்தை கூறிக் கொண்டிருந்தார்.

எங்க அம்மா எப்பவுமே என்ன குறுக்கீடு பண்ணதில்லை, ஏதாவது சந்தேகம் வந்தா மட்டும் கேளுங்க என்ன சொல்லுவாங்க அட்வைஸ் பண்ணது இல்லை என பேரண்டிங் பற்றி பேசினார் விஜய். இந்த பேரண்டிங் நல்ல விஷயம் எப்போதுமே ஒரு சொத்து பெற்றோர் பிள்ளைகளையோ, பிள்ளைகள் பெற்றோர்களையோ எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறினார் கமல்.

“எங்க அம்மா வராமலே இருந்திருக்கலாம். வரணும்னா காடு தாண்டி, 2 கிலோமீட்டர் நடந்து வந்து, 20 கிலோமீட்டர் டிராவல் பண்ணி, ஆட்டோ புடிச்சு அங்க இருந்து கொஞ்சம் ட்ராவல் பண்ணி டாக்ஸி புடிச்சு அப்புறமா பிளைட் புடிச்சு வரதுக்கு அவங்க வீட்டிலேயே இருந்திருக்கலாம். என மாயா சொன்னார்.

“அண்ணன்லாம் வந்தாங்க ஆனா அம்மா வருவாங்க நினைச்சு ஏமாந்துட்டேன், கேம் தனியா ஆடுன்னு சொன்னாங்க. என்று கூறினார். அதை ஏத்துக்குறீங்களா? என கமல் நக்கலாக கேட்டதும் அவர் மலுப்பலாக பதில் சொன்னார்.

அப்பா ஏன் வந்தார் என்று நின்சன் கூற கமலும் நல்லா அட்வைஸ் கொடுத்தார்.

ஒரு ஜிம்னாஸ்டிக் மாஸ்டர் எப்படி தன்னோட மாணவர்களை எப்போ கீழே விழுந்தாலும் புடிக்கிறதுக்கு ரெடியா இருப்பாரோ, அதே மாதிரி தான் பெற்றவர்களும். தங்கள் குழந்தை விழுந்து விடாமல் இருக்க அல்லது விழுந்தால் தாங்கி பிடிக்க தயாராக இருக்க வேண்டும். ஆனால் விடவே மாட்டேன் என பிடித்துக் கொண்டே இருக்க கூடாது என்று அட்வைஸ் செய்தார் கமல்.

யாரையும் நம்பாதே. உன் பின்னாடி பேசுறாங்க என எங்கள் வீட்டில் சொன்னது எனக்கு கேட்டதும் புத்தி வந்துருச்சு. என மாயா குழுவை பற்றி மறைமுகமாக பேசினார் விக்ரம்.

கமல் சார் திட்டுவதெல்லாம் நீ யோசிக்காத என எங்க வீட்ல சொன்னாங்கன்னு சொன்னதும், “நான் எப்ப உங்கள திட்டுனேன்? நான் திட்டுனா எப்படி இருக்கும் தெரியுமா?” என கேட்டார் கமல்.

நட்பை வளர்க்க இது இடமில்லை கூறினார் கமல். வீட்ல ஒருத்தர் மட்டும் இல்ல எல்லாரு கூடயும் பேசு, நைட்ல மணி கூட உக்காந்து பேசுறத நிறுத்து என அண்ணன் சொன்னதை, ஏற்க மறுத்தார் ரவீனா.

அடுத்து அவரவருக்கான டிரைவிங் ஃபோர்ஸ் என்ன? எந்த ஒன்று அவர்கள் எவ்வளவு கஷ்டங்களை பிக்பாஸில் அனுபவித்தாலும், தொடர்ந்து பயணிக்க உதவுகிறது? என கமல் கேள்வி கேட்க ஒவ்வொருவராக பதில் சொல்லிக் கொண்அட வந்தனர். அந்த பதிலில் மணியும்தான் தனது டிரைவிங் ஃபோர்ஸ் எனக் கூற மணி அய்யய்யோ எனக் குத்தவைத்து தலையில் கைவைத்தது பார்க்க ரசிக்கும் படியாக இருந்தது.

அப்போது தொடங்கிய மணியின் பதற்றம் தொடர்ந்து நீண்டது. ஸ்டோர் ரூமுக்குச் சென்று பாருங்கள் என சர்ப்ரைஸ் கொடுத்து கமல் விடைபெற, அங்கு நின்றுகொண்டிருந்தார் ரவீனாவின் தாய்.

அவரைக் கண்டதும் துள்ளியபடி ஷாக்கில் எகிறிக் குதித்து ஓடினார் மணி. ரவீனா அவரை அணைத்து, மடியில் அமரவைத்து, கொஞ்சி, ஊட்டிவிட்டது நெகிழ்ச்சி. ஆனால், அவர் கண்ணில் சிக்காமல் மணி தப்பித்ததும், மணிக்கு அவர் சாக்லெட் கொடுத்ததும், அட்வைஸ்லாம் இல்ல, நல்லா விளையாடுற, விளையாடு என சொல்லி திட்டாமல் சென்றதும் ரசிக்கும் வகையில் இருந்தது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE