பொரி மிகவும் உடலுக்கு நல்லது. இது ஆயுத பூஜை, விஜயதசமி சமயத்தில் தான் கட்டாயமாக பலரும் வாங்கி சாப்பிடும் உணவாக உள்ளது.

பொரி என்பது மிகவும் சுவையான ஒரு சிற்றுண்டி என்று சொல்லலாம். சிற்றுண்டி என்பதை விட இது பல வகைகளில் செய்து ருசிக்கக்கூடிய ஸ்நாக்ஸ் ஆகும். பொறியை சாதாரணமாக பொட்டுக்கடலை, நிலக்கடலை கூட வைத்து சாப்பிடலாம். அல்லது வெங்காயம் கருவேப்பிலை கொத்தமல்லி கேரட் எல்லாம் போட்டு தேங்காய் எண்ணெய் ஊற்றி மிளகாய் பொடி தூவி சாட் மசாலா தூவி மசாலா பொரியாகவும் சாப்பிடலாம். பொரி உருண்டை வறுத்த பொரி என பல்வேறு விதமாக பொரியை உட்கொள்ளலாம். பேல் பூரி போன்றவற்றுக்கும் இது ஒரு முக்கியமான சேர்மானப் பொருளாகும்.

அப்படிப்பட்ட பொரி சாப்பிடுவதன் மூலம் என்னென்ன பலன்கள் உடலுக்கு கிடைக்கிறது என்பதை பார்க்கலாம்.

பொரியில் புரதம், இரும்பு சத்து, பொட்டாசியம், கொழுப்பு, ஆற்றல், கார்போஹைட்ரேட் சத்துக்கள் உள்ளன. வைட்டமின் பி, தாதுக்கள், கால்சியம் ஆகியவை இதில் அதிக அளவில் இருப்பதும் கூடுதல் பலன் தான்.

எடை குறைக்க முயல்பவர்கள் பொரி சாப்பிடலாம். ஏனெனில் பொரி சாப்பிடும் போது உங்களுக்கு வயிறு நிறைந்த ஒரு உணர்வை கொடுத்து மேலும் ஏதேனும் ஸ்நாக்ஸ்களை அல்லது எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடாமல் இருக்க உங்களுக்கு உதவும். இதுவே உடல் பருமன் கூடுவதை குறைக்கும். மேலும் இதில் கலோரிகளும் குறைவாக இருப்பதால் உங்களுக்கு கூடுதல் பலன்.

நோய் எதிர்ப்பு சக்தி தரும். பொரி சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கலாம். இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன.

இவை அனைத்துமே நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த தேவையான வேலையை செய்யும்.

பொரி சாப்பிடும் போது உங்களது செரிமான அமைப்புகளில் உள்ள பிரச்சனைகளுக்கு சற்று தீர்வு கிடைக்கும்.

ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமான அமைப்பை இது மேம்படுத்த உதவுகிறது.

பொரியில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது எனவே பொரி சாப்பிடும் போது இது உங்களது எலும்புகளை வலுப்படுத்த உதவும்.

பொரி சாப்பிட்டால் ரத்த அழுத்தம் கட்டுப்படும் என்றும் சொல்லப்படுகிறது. ஏனெனில் இதில் சோடியம் உள்ளது என்றும் ரத்த அழுத்த பிரச்சனைகளை இது குறைக்கும் என்றும் சொன்னாலும் உங்கள் மருத்துவரின் அறிவுரையை கேட்டபின் சர்க்கரை மற்றும் பிபி நோயாளிகள் இதனை உட்கொள்ளலாம்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE