ஐடி துறையில் பலத்த அடி, மீண்டும் 2008 ஆ?

ஐடி சேவை துறை செலவுகளை கட்டுப்படுத்த திணறி வருகிறது. புதிய வர்த்தகம் கிடைப்பது சவாலாக இருக்கும் சூழலில் ஊழியர்களின் சம்பளம் அதிகப்படியான ஒரு நிதிச் சுமையாக பல ஐடி நிறுவனங்களுக்கு உள்ளது. எனவே ஒரு இக்கட்டான சூழலில் மாட்டிக் கொண்டு தவிப்பது போல் ஐடி நிறுவனங்கள் உள்ளன. இது கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த ரெஷசன் போன்ற உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழல் இப்போது தொடங்கவில்லை. கடந்த ஆண்டே துவங்கி விட்டது. அப்போதே ஒரு 6 மாதத்துக்குள் எல்லாம் சரி ஆகிவிடும் என்றுதான் அனைவரும் நம்பி வந்தனர். ஆனால் ஒன்றரை வருடமாக இதேநிலை நீடிப்பதால் பல ஐடி நிறுவனங்கள் சில முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன.

அந்த முடிவுகள் மிகவும் கடுமையானதாகவும் உள்ளன.

இதில் முக்கிய நடவடிக்கை புதிய பணிக்கு கல்லூரியில் இருந்து வெளியே வந்த ஃபிரஷ்ஷர்களை சேர்ப்பது தான்.

அவர்களுக்கு மிக குறைவான ஊதிய உயர்வு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே இருக்கும் ஊழியர்களையும் முழுமையாக பயன்படுத்தும் சில நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன.

ஊழியர்களின் செயல் திறனை மேம்படுத்தி அவர்களுக்கு பதில் வெளியில் இருந்து ஆட்களை சேர்ப்பதை குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளனவாம்.

சம்பள உயர்வு கட்

பொதுவாக ஐடி ஊழியர்கள் மிகவும் சிறப்பாக பணியாற்றும் போது அவர்களுக்கு 20 சதவீதம் வரை சம்பள உயர்வு வழங்கப்படலாம்

அதுவே பதவி உயர்வு கிடைத்தால் அவர்களுக்கு 50 சதவீதம் வரை சம்பள உயர்வு கிடைக்கும்

இந்த இக்கட்டான சூழலில் பலருக்கும் சம்பள உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதுவும் ஊதிய உயர்வாக 10 சதவீதத்திற்கும் குறைவாகவே கொடுக்கப்படுகிறது.

முன்பெல்லாம் ஒரு ஐடி ஊழியர் வேறு ஒரு நிறுவனத்துக்கு புதியதாக சென்று சேர்ந்தால் பழைய சம்பளத்தை விட 30 முதல் 45 சதவீதம் வரை சம்பள உயர்வு வழங்கப்படும்.

கொரோனா காலத்தில் எல்லாம் இது 120 சதவீதம் வரை அதிகமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

ஆனால் அது இப்போது 18 முதல் 22 சதவீதமாக குறைந்துள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகள் 2007 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் வருடங்கள் சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக ஐடி நிறுவனங்கள் எதிர்கொண்டது தான்.

எனவே அச்சமும் பதற்றமும் அடைய வேண்டாம். மீண்டும் அது மீண்டு வரும் என்று ஒருபுறம் சொல்லப்பட்டாலும் ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு இவர்களின் வேலைக்கு வேட்டு வைக்கும் வகையில் வந்து விடுமா? என்ற அச்சமும் எழுந்துள்ளது

கடந்த 3 வருடத்தில் ஐடி சேவை துறையின் பெருநிறுவனங்கள் உடைய ஊழியர்களின் சம்பள செலவு 64 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் அவர்களின் வருமானம் வெறும் 57% ஆகவே உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE