46 வயசுல ரெடின் கிங்ஸ்லிக்கு கல்யாணம்
தற்போது பெரிய பெரிய நடிகர்களின் திரைப்படம் என்றால் காமெடிக்காக இவர் இருப்பது பழக்கமாகிவிட்டது இவர் ரெடின் கிங்ஸ்லி.
அஜித்தின் அவள் வருவாளா திரைப்படத்தில் குரூப் டான்ஸர் ஆக இருந்தவர் இவர்.
அதற்குப் பின் சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் போனதால் இவர், அரசாங்க நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். சினிமா துறையில் இருந்து விலகியும் இருந்தார், அப்போதுதான் இவருக்கு இயக்குநர் நெல்சன் திலிப் குமார் அறிமுகமாகியிருக்கிறார்
இந்த நட்பு அவரை திரைப்படங்களில் அறிமுகமாக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது.
ஏற்கனவே சிம்பு நடித்த வேட்டை மன்னன் படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அவரும் நடித்து வந்தார். ஆனால் அந்த திரைப்படம் துரதிர்ஷ்டவசமாக பாதியில் நின்று போனது. இதை அடுத்து ரெடினை விட்டு விலகி இருந்தார்.
நயன்தாரா ஹீரோயினாகவும் யோகி பாபுவும் நடித்திருந்த கோலமாவு கோகிலா படத்தில் ரெடின் கிங்சிலியின் டோனி கதாப்பாத்திர நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது.
இதை அடுத் பது பலடங்களில் அவர் கமிட்டானார். சிவகார்த்திகேயனின் டாக்டர், ரஜினிகாந்தின் அண்ணாத்த, ஜெயிலர், விஜய்யுடன் பீஸ்ட் திரைப்படங்களில் நடித்தார்.
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இவர் நடித்தது மிகவும் வரவேற்பை பெற்றது.
தற்போது 46 வயதான ரெடின் கிங்ஸ்லி நடிகை சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
சென்னையில் இன்று அவர்களுக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.
சங்கீதா மாஸ்டர் படத்தில் மருத்துவராக நடித்திருப்பார். மேலும் பல திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.
பல திரை பிரபலங்களும் ரசிகர்களும் நேரிலும் இணையதளம் மூலமும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இணைக்கு இல்லறம் சிறக்க த காரிகையின் வாழ்த்துக்கள்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.