ஒரு மண்டலம் எப்டி கணிக்குறாங்க தெரியுமா?
விண்வெளிகளுக்கு செயற்கைக் கோள்களை அனுப்பும் முன்பே வானியல் மண்டலத்தில் எத்தனை கோள்கள் உள்ளன? என கணித்து பஞ்சாங்கத்தையும் எழுதி வைத்துள்ளனர் நம் மக்கள்.
பூமிக்கு வரும் கதிர்வீச்சு ஒளிகளுக்கு சொந்தமான நட்சத்திரக்கூட்டம், கோள்களையும் நம் முன்னோர்கள் 12 ராசி நட்சத்திர கூட்டங்களாகவும், 27 நட்சத்திர கூட்டங்களாகவும் மற்றும் 9 கோள்களாகவும் வகைப்படுத்தினர்.
இந்த 9+12+27ஐக் கூட்டினால் 48 என்ற கூட்டுத் தொகை வரும். எப்படி சூரியனின் கதிர்வீச்சு ஒளி இல்லாமல் உலகில் உயிர்கள் வாழவோ, விவசாயம் செய்யவோ முடியாது என்று அதேபோல் அந்த கிரகங்களின் கூட்டமைப்பின் ஒளி, கதிர்வீச்சு ஆகியவை மறைமுகமாக நமது உடலில் பகிர்கிறது.
எனவேதான், தொடர்ந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் செய்யும் எந்த ஒரு செயலும் மேலும் மேலும் தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெறும் என ஆன்மிகத்தில் குறிப்பிடுகின்றனர்.
இதனால்தான் சித்த மருத்துவத்தில் கூட எந்த ஒரு இயற்கை மருந்தையும் ஒரு மண்டலம் சாப்பிடும்படி அறிவுறுத்துகின்றனர். அப்படிச் செய்தால் அந்த நோய் நிரந்தரமாக குணமாகும் என்றும், அதேபோல் எந்த மதத்தினை சேர்ந்தவராய் இருந்தாலும், தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் வேண்டுதல்கள் கைகூடுவதாக நம்பப் படுகிறது.
நம்முடைய முன்னோர்களான சித்தர்களும், முனிவர்களும் வெறும் சாமியார்கள் மட்டும் அல்ல. அவர்கள் மிகச்சிறந்த அறிவியலாளர்கள் என்றும் இந்த கூட்டுக் கணக்கு மூலம் இன்னும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணம் ஆகிறது. எனவே, ஏதாவது ஒரு செயலையோ அல்லது வேண்டுதலையோ 48 நாட்கள் நம்பிக்கையோடு ஒரு முறை செய்து பாருங்களள்! உங்களுக்கே இந்த யோக அறிவியலில் ஒளிந்துள்ள நன்மையோடு உண்மையும் விளங்கும்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.