சரம்குத்தியிலேயே தொடங்குது வரிசை. .
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கேரள பக்தர்கள் மட்டுமின்றி, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். முன்பெல்லாம் சபரிமலைக்கு வருபவர்கள் மாலையணிந்து, விரதமிருந்து, இருமுடி கட்டி கூட்டம் கூட்டமாக ஐயன் ஐயப்பனைத் தேடி மலைக்கு வருவார்கள்.
பம்பையில் நீராடி, மலையேறி, பாபரை வணங்கி, சரம்குத்தியில் ஆட்டம்போட்டு கொண்டாடி, பின்பு 18 படியேறி. கொடி மரம் கண்டு. சுற்றி வந்து சன்னிதானத்தில் ஹரிஹரசுதனைக் கண்டு தரிசனம் செய்வார்கள். இதையடுத்து கூட்ட நெரிசலால் பக்தர்கள் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தது உள்ளிட்ட அசம்பாவிதங்களை அடுத்து சபரிமலை ஐயப்பன் தேவஸ்தானம் மாநில அரசோடு இணைந்து பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தது.
இதையடுத்து திருப்பதியைப் போன்றே முன்பதிவு செய்து ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என முன்பதிவு வசதி வந்தது. இதையடுத்து, எந்த தேதியில் எந்த நேரத்தில் தரிசனம் என அறிவிக்கப்பட்டது. அதன்படியே பக்தர்களும் தங்களுக்கான ஸ்லாட்டுக்களை புக் செய்து தரிசித்து வருகின்றனர்.
இருந்தபோதும் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. கார்த்திகை முதல் தேதி பிறந்தது முதல் பக்தர்கள் வருகை அதிகரித்தபடியே காணப்படுகிறது. இதனால், தேவஸ்தான அதிகாரிகள் சேர்ந்து பல பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
அதன் படி, 17 மணி நேரமாக தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டது. மரக்கூட்டம் மற்றும் சரம்குத்தி அருகே 3 வரிசை வளாகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்த வழிகள் திறக்கப்பட்டு பக்தர்கள் கூட்டமும் அதிகரித்தது.
பரிசோதனை முறையில் இந்த வரிசை முறையானது வெற்றி பெற்றுள்ளது. எனவே, இதை முழுதும் அமல்படுத்த தேவஸ்வம் போர்டு திட்டமிட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தில் இதேமுறை பின்பற்றப்படும் நிலையில், சீசன் நேரத்தில் இந்த முறை கையாள்வதில் பல பலன்கள் இருப்பதாகவும் தேவஸ்வம் போர்டு நம்புகிறது.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.