ஒருவேளை வெள்ள நீரைக் கடந்துதான் மீட்பு இடத்துக்கு செல்ல வேண்டும் என்ற நிலை இருந்தால் சோப்பு நீரால் தூய்மையான நீரை கொண்டு பலமுறை நன்றாக உடலின் அனைத்து பாகங்களிலும் கிருமிகள் நீங்கும்படி கழுவ வேண்டும்.

சோப்பு அல்லது நீர் இல்லாத இடத்தில் ஆல்கஹால் கொண்ட சானிடைசர் அல்லது துடைக்கும் வைப்-களை பயன்படுத்தலாம்.

காயங்கள் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

வெள்ள நீரிலும் சாக்கடை நீரிலும் பட்ட துணிகளை சுடுதண்ணீர் போட்டு டிடர்ஜென்டில் ஊறவைத்து இரண்டு முறை துவைத்த பின்பே மறுபடியும் பயன்படுத்த வேண்டும்.

வெள்ளத்தில் நடக்க வேண்டும் என்ற சூழலில், ஒருவேளை உங்களிடம் ரப்பர் பூட்ஸ், ரப்பர் கிளவுஸ், காகிள்ஸ் இருந்தால் அணிந்து கொள்ளவும்.

கூரிய பொருட்கள் கிழித்துவிடலாம்

வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட நீரில் என்ன பொருள் எங்கு கிடக்கிறது என்று தெரியாது.

எனவே கால் வைக்கும் இடங்களில் அல்லது நகரும்போது வெள்ள நீரில் அடித்து வரப்படும் கூர்மையான பொருட்கள் உடலில் குத்தி கிழித்து விட வாய்ப்பு உண்டு.

உதாரணத்துக்கு கண்ணாடி மற்றும் கண்ணாடி துண்டுகள், உலோகப் பொருட்கள் பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தும். இது இன்பெக்ஷனுக்கு வழிவகுக்கும்.

அதுவும் துருப்பிடித்த இரும்பு துண்டு ஏதேனும் கிழித்திருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். சிறிய புண்தான் என்று அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது.

காயங்களைப் பராமரிப்பது எப்படி?

அதையும் மீறி உடலில் சற்று ஆழமான காயமாக இருந்தால் அதில், மலம் போன்ற கழிவுகள், மண், எச்சில் உள்ளிட்டவை பட்டால் அது வேறு பல விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.

எனவே திறந்த நிலையில் காயங்கள் ஏதேனும் இருந்தால் வெள்ள நீர் அதில் படாமல் தவிர்த்து விடுவது நல்லது.

அப்படியே அந்த வெள்ள நீரை கடந்து செல்ல வேண்டும் என்ற நிலை இருந்தால் வாட்டர் ப்ரூப் பேண்டேஜ் அணிந்து கொள்ளலாம். இது இன்பெக்ஷனுக்கான வாய்ப்பை குறைக்கும்.

திறந்த நிலையில் உள்ள புண்கள் அல்லது காயங்களை முடிந்த அளவு சுத்தமாக வைத்துக் கொள்வது நல்லது.

சிவத்தல், வீங்குதல், ரத்தம் வலிதல் உள்ளிட்ட அறிகுறிகள் காயங்களில் தென்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.

ஏற்கனவே காய்ந்து போன காயங்கள் கூட இது போன்ற கடுமையான பொருட்கள் படும்போது மீண்டும் அதில் நோய் தொற்று ஏற்பட்டு காய்ச்சலை வரவழைக்க கூடும்.

இதன் முந்தைய பாகத்தைக் காண இங்கு கிளிக் செய்யவும்.

அடுத்த பாகத்தைப் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE