மணிஷா யாதவ் பாலியல் குற்றச்சாட்டும், சீனு ராமசாமியும்

இயக்குனர் சீனு ராமசாமி, தென்மேற்குப் பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை, மாமனிதன் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கி வெற்றி பெற்றவர். தற்போது கோழிப்பண்ணை செல்லதுரை என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.

மணிஷா யாதவ், ஒரு குப்பைக் கதை படத்தில் நடித்த நடிகை. இவரும், சீனு ராமசாமியும் 9 ஆண்டுகளுக்கு முன், இடம் பொருள் ஏவல் என்ற படத்தில் இணைந்து பணியாற்றும் சூழல் வந்தது. ஆனால், நந்திதா ஸ்வேதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த மணிஷா யாதவ் பாதியிலேயே அந்தப் படத்தை விட்டு வெளியேறினார்.

இதில் சீனு ராமசாமி மீது பாலியல் குற்றச்சாட்டும் சுமத்தி இருந்தார். 2013-ல் நடந்த இந்த பிரச்னை பெரிதளவு ஊடகங்களின் வெளிச்சம் படாமல் முடிந்துவிட்டதாக பலரும் நினைத்தபோது, சீனு ராமசாமியிடம் பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்வியால் மீண்டும் வெடித்துள்ளது. அப்படியிருந்தால், அவர் ஒரு குப்பைக் கதை பற்றி மேடையில் பேசும் போது எனக்கு நன்றி சொல்லியிருக்க மாட்டார் என சீனு ராமசாமி கூறினார்.

இதற்கு மீண்டும் கொதித்தெழுத் மணிஷா யாதவோ, இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிலடி கொடுத்திருக்கிறார். “ஒரு குப்பைக் கதை மேடையில் அவரும் அமர்ந்திருந்ததால் பிறருக்கு நன்றி சொல்லுதல் போன்றே, மேடை நாகரீகம் கருதி சீனு ராமசாமிக்கும் நன்றி தெரிவித்ததாகக் கூறினார். ஆனால், 9 ஆண்டுகளுக்கு முன்னர் நான் கூறிய குற்றச்சாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை” என திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இருப்பினும் சீனு ராமசாமி, 6 கேள்விகளை நடிகை மணிஷா யாதவுக்கு எழுப்பியுள்ளார். அவை பின்வருமாறு. .

  1. இடம் பொருள் ஏவல் படத்தில் படத்திற்கு வந்த முதல் நான் முதல் ஷாட்டில் 28 டேக் வாங்கினார் மனிஷா
  2. படப்பிடிப்புத் தளத்தில் உதவ வந்த மூத்த நடிகை வடிவுக்கரசியை கோபித்துக் கொண்டு கடுஞ்சொல் வீசியது ஏன்?
  3. விஷ்ணு விஷால் ஜோடியாக நடிக்க நானும், அண்ணாமலை ஃபிலிம்ஸ் கணேஷூம் கேட்டபோது ஏன் மறுத்தார்?
  4. என் சம்பளத்தில் எதற்காக ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு பெற்றார்?
  5. 3 நாட்கள் படப்பிடிப்புத் தளத்தில் திருப்பதி பிரதர்ஸ் ஏற்பாடு செய்த ஹோட்டலில் தாயாருடன் தங்கியிருந்த மணிஷாவை 3-ம் நாள் காலை படப்பிடிப்பின் போது தான் சந்தித்தேன்.
  6. அந்த 28 டேக் மேக்கிங் வீடியோவுக்கு காத்திருக்கிறேன்.

தெய்வம் அருளனும். இருப்பினும் உங்களோடு திரும்ப பணியாற்ற விரும்புகிறேன் என்றும் சீனு ராமசாமி டிவிட்டரில் கூறியுள்ளார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE