நடிகர் விஜய் சேதுபதி பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். தற்போது உச்ச கட்டத்தில் உள்ள நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் விஜய் சேதுபதி. அதுவும் வில்லன் கதாபாத்திரம் என்றால் விஜய் சேதுபதி புக் செய்யத்தான் முதலில் முந்தி அடித்துக்கொண்டு இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் முயற்சி செய்து வருகின்றனர்

பாலிவுட் வரை சென்று வெற்றி நடை போட்டு வரும் விஜய் சேதுபதிக்கு சூர்யா என்ற மகன் உள்ளார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி – அஞ்சலி நடித்த சிந்துபாத் என்ற படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆனால் சிந்துபாத் படம் வெற்றி பெறாததால் சூர்யா விஜய் சேதுபதி ஒரு நடிகராக யாருக்கும் தெரியாமலேயே போய்விட்டார்.

இதை அடுத்து சூரி கதாநாயகனாக நடித்த விடுதலை படத்தின் முதல் பாகத்தில் விஜய் சேதுபதி வாத்தியாராக நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் அதி முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக இருந்தது.

தற்போது விடுதலை 2 படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதில் வெற்றிமாறனுடன் விஜய் சேதுபதி சூரி மற்றும் சூர்யா விஜய் சேதுபதி ஆகியோர் ஒன்றாக படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய போது எடுத்த புகைப்படம் வைரலானது.

இந்த நிலையில் வீழான் என்ற படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. அந்த போஸ்டரில் நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி முகத்தில் கோணிப்பையை சுற்றிக்கொண்டு கண்கள் மட்டும் தெரியும் வகையில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி உள்ளது.

விஜய் சேதுபதியின் மகன் கதாநாயகனாக நடிக்கும் படம் என்பதால் இந்த படத்துக்கு சற்று எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE