எருமை விற்று 500 கோடி – IIT பெண்கள் அசத்தல்

பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் எந்த தொழிலும் கேவலமாக இல்லை எந்த படிப்பும் அதற்கு இறங்கி செயல்பட தடையாக இருக்காது என்பதை வெற்றிகரமாக நிரூபித்து 500 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளனர் ஐஐடி சேர்ந்த பட்டதாரி பெண்கள் இருவர்.

இவர்கள் தங்கள் படிப்புக்கு ஏற்ற வேலை தான் செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக இருந்திருந்தால் இந்த சாதனையை அவர்கள் எட்டி இருக்க முடியாது ஆனால் அவர்கள் மாற்றி யோசித்து முன்னேறிக் கொண்டிருக்கின்றனர்.

நீது மற்றும் கீர்த்தி ஐஐடியில் படிக்கும் போது இருந்தே சிறந்த தோழிகள். ஒரே அறையில் தங்கி இருந்தனர். இவர்கள் இருவருக்கும் நட்பாக தொடங்கிய பேச்சுவார்த்தை விவசாயத்தைப் பற்றிதான். ஏனெனில் இருவருமே விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களது குடும்பத்தினர் எவ்வளவு கஷ்டப்பட்டு ஆடு மாடுகளை விற்று படிக்க வைக்கின்றனர் என்று புரிதல் அவர்களுக்கு இருந்தது. எனவே நன்கு படித்து இருவரும் வெவ்வேறு நிறுவனங்களில் நல்ல வேலையோடு சம்பளம் ஈட்டி வந்தனர்.

ஆனால் இருவரும் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்ததால் ஏதேனும் ஒரு தொழில் செய்ய வேண்டும் என்ற உத்வேகம் பற்றி தான் அதிகம் பேசிக் கொண்டிருந்தனர்.

நிலைமை அப்படி இருக்க, நீதுவின் தந்தை தன்னிடம் இருந்து 3 மாடுகளை விற்க சிரமப்பட்டு கொண்டிருந்தார். இதனை பார்த்ததும் மாடுகளை ஏன் ஆன்லைனில் விற்கக் கூடாது? என்ற எண்ணம் நீத்துக்கு தோன்றியது. இதனை கீர்த்தியிடம் சொல்ல அவரும் இது நல்ல ஐடியா என ஏற்றுக்கொண்டார்.

இருவரும் தனித்தனியாக அவரவர் மாநிலங்களில் உள்ள விவசாயிகளிடம் சென்று மாடுகளை ஆன்லைனில் விற்றுத் தருவதாக பேசினர் இதைக் கூட யாராவது ஆன்லைனில் வாங்குவார்களா என கூறி முதலில் அவர்கள் கேலி செய்தனர். இதை அடுத்து இருவரும் பெங்களூருக்கு புறப்பட்டு சென்று மாதம் 11 ஆயிரம் என்று வாடகையில் ஒரு சிறிய அறை எடுத்து தங்கி இருந்தனர்.

அங்கு அவர்கள் தங்களது அனிமல் என்ற செயலியை 2019 ஆம் ஆண்டு நவம்பரில் துவங்கினர். முதலில் மூன்று மாடுகள் வெற்றிகரமாக ஆன்லைனில் விற்கப்பட்டன பின்பு தனது நண்பர்கள் உதவியோடு 50 லட்சம் நிதி திரட்டி அவர்கள் இந்த ஆப்பில் முதலீடு செய்தனர். இதை அடுத்து பல்வேறு நாடுகளில் இருந்தும் 44 கோடி, 150 கோடி ரூபாய் என முதலீடுகள் இவர்களுக்கு குவியத் தொடங்கியது.

3 ஆண்டுகளில் தங்களது அனிமல் என்ற செயலி மூலம் 2500 கோடி ரூபாய்க்கு எருமை மாடுகளை விற்றுள்ளனர்.

இதில் 500 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாக அவர்கள் தெரிவித்தனர். முதலில் தனது தந்தையிடம் சென்று தான் ஆன்லைனில் மாடு விற்ககப் போவதாக கூறியதும், இதற்காகவா இவ்வளவு செலவு செய்து உன்னை ஐஐடியில் படிக்க வைத்தோம் என்று அவர்கள் வருத்தப்பட்டனர். தற்போது அதிக வருவாய் ஈட்ட தொடங்கியதும் அவர்கள் எங்களை நினைத்து பெருமிதம் தான் கொள்கின்றனர் என்று கூறினார் ஐஐடி பட்டதாரி பெண் நீது.

தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் எருமை மாடு கூட ஆன்லைனில் விற்று சம்பாதிக்கலாம். ஆனால் சந்தை பரிணாம மாற்றம் அடையும் வேளையில் ஆன்லைன் விற்பனை பற்றி கேலி பேசிக்கொண்டே அமர்ந்திருந்தால் பிழைப்பு நடத்துவது சிரமம். எனவே பெண்களாகிய நீங்களும் உங்கள் வீடுகளில் ஏதேனும் தொழில் செய்து கொண்டு கடைகள் நடத்தி வந்திருந்தால் அதனை ஆன்லைன் விற்பனைக்கு கொண்டு வந்து பாருங்கள் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE