ஷேம், ஷேம். செத்துடனும்னு முடிவு பண்டேன் – ஐஷூ உருக்கம்

பிக் பாஸ் சீசன் 7 ஆரம்பிக்கும் போது ஐஷூமுதல் 2 வாரங்களில் நல்ல போட்டியாளராக விளையாடி வந்தார். ஆனால் பெண்களை கேவலமாக உடல் அங்கங்களை வைத்து வர்ணிக்கும் நிக்சன் வீசிய காதல் வலையில் ஐஷூ விழுந்தார்.

ஐஷு ஒரு கட்டத்தில் நிக்சனை காதலிப்பது போல் பேசிவிட்டு, பின் மறுநிமிடமே தான் வேறொருவரைக் காதலிப்பதாகக் கூறினார். அப்படி பேசிய பிறகும் நிக்சன் ஆயிஷாவை தொடுவதும், உரசுவதும், கண்ணாடி இடைவெளியில் முத்தம் கொடுப்பதுமாக இருக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகின

இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆகி சென்றுவிட்ட ஐஷூவுக்கு பெயர் கெட்டுப்போனதாக பேச்சடிபட்டது. உண்மையில் ஐஷூ என்பவர் ஆயிஷா ஆவார். மிகவும் ஆர்தொடாக்ஸ் குடும்பத்தில் அவர் வந்தவர் என்பதால், பல முறை அட்வைஸ் செய்து விசித்ரா, அர்ச்சனா, பிரதீப் ஆகியோர் அவரைக் காப்பாற்ற முயன்றனர்.

ஆனால், பிக்பாஸ் வீட்டுக்குள் நின்சனை வெறுப்பது போல் ஒதுக்கினாலும் இலகிய மனம் படைத்த ஐஷூவால் அவர் அழுவதை ஏற்க முடியவில்லை. எனவே, அவர் நிக்சனிடம் இருந்து மீள முடியாமல் இருந்தார்.

இந்தநிலையில்தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கும் ஐஷு ஒரு உருக்கமான பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில், “ரசிகர்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னை நம்பியவர்களை ஏமாற்றிவிட்டேன். பிக் பாஸ் வீட்டில் காதல், நட்பு போன்றவற்றால் என் கண்கள் மறைத்துவிட்டது.

என்னை குறித்து என்ன வேண்டுமென்றாலும் பேசுங்கள் ஆனால் என் குடும்பத்தை மட்டும் விட்டுவிடுங்கள். நான் என்னுடைய குடும்பத்துக்கே அவமானம்.

எனது உயிரை விட முடிவு செய்துவிட்டேன். ஆனால் என் மீது பெற்றோர் வைத்திருக்கும் கடைசி நம்பிக்கைக்காகத்தான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்.

நான் தவறு செய்த போது என்னை காப்பற்ற முயன்ற யுகேந்திரன், விசித்திரா, அர்ச்சனா, மணி, பிரதீப் ஆகியோரிடமும் மன்னிப்பு கேட்கிறேன். பிரதீப் எதிராக நான் ரெட் கார்ட் தூக்கியதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

காதல் கண்ணை மறைக்கலாம். ஆனால் 60 கேமராக்களை அது எப்படி மறைக்கும்? ஒரு பெண்ணுக்கு ஆண் வலை விரித்தால் அதில் 60 கேமராக்கள் உள்ள ஒரு வீட்டில் தவிர்ப்பதே அந்தப் பெண்ணுக்கு புத்திசாலித்தனம். குடும்பத்தைப் பற்றி யோசிக்காமல் நிக்சன் அழுவார் என ஐஷு அமைதிகாத்துப் போனது தற்போது அவர் வாழ்க்கைக்கே மிகப் பெரிய எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், வெளியே சென்று பிக்பாஸ் எபிசோடைப் பார்த்துவிட்ட அவரும், ஏற்கெனவே பார்த்த அவரது குடும்பத்தினரும் அவரை திட்டியிருக்கக் கூடும் என்றும் மன உளைச்சலின் விபரீதத்தில் அவர் தற்கொலை போன் தவறான முடிவை எடுத்திருக்கக் கூடும் என்றும் இதன் மூலம் தெரிகிறது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE