சபரிமலை செல்வோருக்கு இலவச தங்குமிடம். .
கார்த்திகையில் பலரும் ஐயப்பனுக்கு விரதம் இருந்து சபரிமலைக்கு தரிசனத்துக்காக பயணிப்பார்கள்.. அவர்களுக்கு சில முக்கியமான பயணக் குறிப்புகள் இதில் உள்ளதால் முழுமையாக படிக்கவும்.
தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு செல்ல 3 வழிகள் உள்ளன. குற்றாலம், செங்கோட்டை வழியாக பத்தினம் திட்டா மாவட்டத்திற்குள் நுழைந்து சபரிமலை செல்லலாம்.
கோவை வழியாக கேரளாவிற்குள் நுழைந்து கோட்டயம் வழியாக குமுளி சென்று சபரிமலைக்கு போகலாம்.
3-வது வழி, நேரடியாக தேனி வந்து அங்கிருந்து குமுளி வழியாக சபரிமலை போக முடியும்.
மிக எளிதான வழி என்றால், அது திண்டுக்கல், தேனி, குமுளி வழியாக செல்வதே. வெளிமாநிலத்தவருக்கும், சென்னை மக்களுக்கும் எளிது.
தேனி வழியாக சபரிமலைக்கு செல்வோர், கம்பத்தில் இருந்து மாற்றுப்பாதையில் செல்ல வேண்டியதிருக்கும். தேனியை அடுத்து கம்பம், கம்பம் மெட்டு, அதன்பிறகு குமுளியை அடைந்து வண்டிப் பெரியார் வழி எரிமேலி செல்ல முடியும்.
சபரிமலை தரிசனம் முடிந்து வரும் போது, நேரடியாக குமுளி வழியாக கம்பம் தேனியை அடைந்து போக வேண்டி ஊருக்கு செல்லலாம்.
சபரிமலை செல்வோர் தேனியில் சில கோயில்களில் 24 மணி நேரமும் தங்கி கொள்ள முடியும். ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் பயணத்தை தொடரலாம். .
சபரிமலை செல்ல பலரும் வேன், கார், பஸ் பிடித்து செல்வார்கள். இந்த முறை தேனிக்கு நேரடியாக ரயில் உள்ளது. எனவே ரயிலில் தேனி வந்து அங்கிருந்து எளிதாக ஒரே பேருந்தில் சில மணி நேரத்தில் சபரிமலையை அடைய முடியும். சென்னை டூ தேனிக்கு 390 ரூபாய் தான் டிக்கெட், நேரடியாக அங்கிருந்து 150 முதல் 200 ரூபாயில் சபரிமலையை அடைய முடியும்.
சபரிமலை பயணத்தை முடித்துவிட்டு தேனி வழியாக வரும் போது, வரும் வழியில் வாகமன், தேக்கடி, இடுக்கி அணை, சுருளி, மூணாறு போன்றவற்றிருக்கு போக முடியும்.இதேபோல் கொடைக்கானல், பழனிக்கும் போகவும் முடியும்.
இதனிடையே சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து இயக்கப்படுகிறது.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.