BB Day 46 கல்யாண மாலை மாதிரி பூர்ணிமாவுக்கு விஷ்ணு பிரபோஸ்
பிக்பாஸ் வீட்டின் 46-வது நாள் நிகழ்வுகளை சிம்பிளான தொகுப்பாக பார்க்கலாம்.
டைரக்ட் டீலிங்குக்கு விசித்ராவிடம் வந்து அமர்ந்தார் மாயா. “நீங்க பண்ணதுக்கு எல்லாம் நான் ஸாரி சொன்னேன். ஆனால் நீங்கள் இன்னமும் சொல்லவில்லை. எதைப் பற்றியா? பெண்கள் trauma பற்றியது. அதையெல்லாம் மீண்டும் சொல்ல விரும்பவில்லை. விக்டிம்தான் எப்பவும் கஷ்டப்படணுமா? இதன் தீவிரம் உங்களுக்குப் புரியலையா?.. நாங்க விளையாட்டா சொன்ன சிலதையெல்லாம் bullying-ன்னு நீங்க நினைச்சுட்டு இருக்கீங்க” என அவர் விளக்கம் அளித்தார். “கமல் சார் எபிசோட் அப்புறமாத்தான் புரிஞ்சுகிட்டேன்” என விசித்ரா சொன்னாலும், அவர் மன்னிப்புக் கேட்கவில்லை.
ஏற்கெனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் விக்ரமை மிக்சர் தின்பவர் செட் பிராபர்ட்டி என பலரும் வெளியே மீம்ஸ் போட்டு கலாய்க்கின்றனர். அதை மெய்ப்பிக்க பாவம் பசி எடுத்த விக்ரம், நடு இரவில் எழுந்து விக்ரம், மிக்சர் பாக்கெட்டை திருட்டுப் பூனை மாதிரி நொறுக்க, கேமிராவைக் கண்டு திருதிருவென விழித்தார்.
“trauma-லாம் வச்சு டிராமா பண்றாங்க. நீங்க பண்றதுதான் மற்றவர்களுக்கு trauma-வா ஆகுது. நீ என்ன வேணா பண்ணிக்கோ. நான் அதைப்பத்திலாம் சட்டையே பண்ண மாட்டேன்” என மாயாவைப் பற்றி புறணி பேசினார் விஷ்ணு.
“நாங்க உன்னை கேப்டன் ஆக்கிடுவோம். இதோ இந்த கிளாசை வாங்கி கீழே வை..போதும்…அவ்வளவுதான்… நீதான் கேப்டன்” என விக்ரம் வேடத்தில் இருந்த அர்ச்சனாவை பங்கமா கலாய்த்தனர் விஷ்ணுவும் மணியும்.
அர்ச்சனா வேடத்தில் இருந்த சுரேஷ், மயாயாவான விஷ்ணு மடியில் படுத்து கதற, “இவளை அழாமல் பார்த்துக்கங்க. அழுதே ஸ்கோர் பண்ணிடுவா” என்று கமென்ட் அடிக்கப்பட்டது செம்ம டைமிங்.
‘யாருடைய கட்டுப்பாட்டில் கிச்சன் நன்றாக செயல்படும்?’ என்ற விவாதத்தில் “யுகேந்திரனுக்கு சமையல் சொல்லிக் கொடுத்ததே நான்தான். ப்ரொவிஷன் பொருட்களை சரிபார்ப்பதில் இன்றைக்கும் ஜோவிகாதான் டாப்” என்றெல்லாம் கூற பெண்கள் அணி வென்றது.
வீடு சிறப்பாக நிர்வகிக்கப்பட்டது, ஆண்களின் கேப்டன்ஸியிலா அல்லது பெண்களின் கேப்டன்ஸியிலா?’ என அடுத்த கேள்வி பிக்பாஸால் முன்வைக்கப்பட்டது. பூர்ணிமாவின் வேடத்தில் இருந்த மணி, “நான்தான் ஸ்மால் பிக் பாஸ் ஹவுஸில் சேர் போட்டேன். பிக் பாஸிடம் பேசி டிஸ்கவுன்ட் வாங்கினேன். செல்போன் சார்ஜிங் டாஸ்க்கில் போனை திருப்பி வைத்ததை பிக் பாஸ் பாராட்டினார். கமல் சாரே எனக்கு ஸ்டார் கொடுத்தார்” என்று பேசினார். ‘ஆண்கள் கேப்டன்ஸியில்தான் வீடு சிறப்பாக இருந்தது’ என்ற விசித்ராவின் பேச்சுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார் பாலா. அதற்கு வீட்டின் அமைதியை ஆண்கள் குலைக்கவில்லை என்பது ஒரு பொருளாகும்.
டைட்டில் வின்னர் ஆணா, பெண்ணா? என்ற விவாதத்தில் தினேஷ் கேரக்டரில் இருந்த பூர்ணிமா பேசினார். அப்போது, “டைட்டில் ஜெயிக்க எனக்குத்தான் பத்து பொருத்தம் இருக்கு. நான் உள்ளே வரும் போது எல்லோரையும் வெச்சு செஞ்சிருக்கேன். வெளிய பார்த்த கன்டென்ட்டை உள்ளே கொண்டு வந்து ஜட்டி பிரச்சினையா ஆக்கினேன். சம்பந்தமே இல்லாம பேசுவேன். பெண்கள் பிரச்சினைன்னா நான் கேப்பேன். ஏன்னா நான் ஆம்பளை.. ” என சர்காஸ்டிக்காக கலாய்த்தார் பூர்ணிமா.
“ஆண்களாகவே இருந்தாலும் பெண்களின் சார்பில் திறமையாக வாதாடினார்கள்” என்று பாராட்டி பெண்கள் அணி வென்றது. ஸ்டார் வழங்குவதற்கான ஆலோசனையில் மணிக்கு ஸ்டார் கொடுக்க விவாதம் நடக்கும் போது, “விஷ்ணு.. நீ ஸ்டார் கேளு..” என லஞ்ச் ஷேர் பண்ணாதேன்னு சொல்லி கண்ணால் மிரட்டும் அம்மாவைப் போல மாயாவும் சைகை காட்டினார். பின், அவனைக் காப்பாற்றினால் திறமையாக விளையாடும் யாரேனும் வெளியே செல்ல நேரிடும் என பிராவோவிடம் பொறிந்து தள்ளினார் மாயா.
தீபாவளிக்கு வந்த பழைய பாறாங்கல் போல் இருந்த ரவா லட்டுக்குள் இருந்த ஸ்டாரை உடைத்து, கடித்து, சுரண்டித் தேய்த்து எடுத்தனர். இதில் ரவீனாவுக்கு ஒன்றும், விஷ்ணுவுக்கு 2 ஸ்டார்களும் கிடைத்தன.
“உன்கிட்ட நல்ல குணம் எல்லாம் இருக்கு” என்ற விஷ்ணுவிடம், “ஏங்க.. நான் நல்ல பொண்ணுதாங்க” என சுய விளக்கம் கொடுக்க பாடுபட்டார் மாயா. “உன்கிட்ட திறமை இருக்கு. ஆனா நெகட்டிவ் ஷேடு அதிகமா தெரியுது அதை விட்டுட்டா சூப்பர்” என்ற விஷ்ணு பின்னர் பேசியதுதான் ஹைலைட்.
‘கல்யாண மாலை’ நிகழ்ச்சியில் மணமாகாத வயது முதிர்ந்த இளைஞர், தன்னைப் பற்றி சுயவிவரம் சொல்வது போல் பூர்ணிமாவிடம் கூறினார் விஷ்ணு. “எந்தப் பொண்ணைக் கட்டினாலும் எங்க வீட்ல ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. லவ், கல்யாணம் எதுவா இருந்தாலும் ஓப்பனா சொல்லுவேன். Most Eligible bachelor. வெல் செட்டில்டு” என இன்டைரக்ட் பிரபோசலைக் கொடுத்தார். “நீ ஒரு நல்ல பிளேயர். ஆனா you are not on the right track” என பூர்ணிமாவின் நிலைப்பாட்டை விளக்கினார் விஷ்ணு.
சமத்துப் பிள்ளையாக இருந்து நாமினேசனில் தப்பிக்கும், கூல் சுரேஷ், அக்ஷயா, விக்ரம் பற்றி பேசினர் தினேஷூம், விசித்ராவும்.
“விசித்ரா கிளவரா ஆடறாங்க.. போன சீசன்ல தாமரைச்செல்வி இருந்தாங்கள்ல.. அந்த மாதிரி” என சொல்ல சொல்லவே பூர்ணிமா அவரைத் தடுத்தார்.
“நீங்கதான் டைட்டில் வின்னர். இந்த ஆட்டக்காரி சொல்றேன்” என ஐஸ் வைத்த மாயாவிடம், போட்டு வாங்கினார் விசித்ரா. ‘ஐஷூ ஏன் எலிமினேட் ஆனா?’ என பேசும் போது, “ நல்லா விளையாடறவங்க இருக்கணும்ன்னு சொல்றீங்க. அப்ப ஏன் என்னை நாமினேட் பண்ணீங்க?” என கொக்கி போட்டதும் உங்க பக்கம் யாராச்சும் உங்களை நாமினேட் பண்ணிருப்பாங்க, நாங்க இல்ல என மலுப்பினார் மாயா.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.