அமுல் பேபி கெட்டவார்த்தை, இதான் அர்த்தம்-சுசித்ரா
தனுஷ், அனிருத் ஆகியவர்களின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டு சர்ச்சைக்கு ஆளானவர் நடிகையும் பாடகியுமான சுசித்ரா.
இதை அடுத்து அவரது கணவர் கார்த்திக்கை அவர் விவாகரத்து செய்தார். சுசித்ராவுக்கு மனநலம் பாதித்திருப்பதாக கார்த்திக் வீடியோக்கள் வெளியான சமயத்தில் விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் சுசித்ரா சமூக வலைதளங்களில் பெரும்பாலும் சர்ச்சைகளில் சிக்கவில்லை .
ஆனால், விஷ்ணு ஏன் அமுல் பேபி என்ற வார்த்தையை கேட்டதும் சூடாகி கடுப்பாகி தினேஷை எதிர்த்து சண்டையிட்டார் என்று சுசித்ரா ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.
இது தெரிந்து கொள்வதற்கு முன் தினேஷுக்கும் விஷ்ணுவுக்கும் உள்ள முன்பகை பற்றி பார்ப்போம்.
தினேஷ் வேறு யாரும் இல்லை சீரியல் நடிகையும், பிக் பாஸ் சீசனில் மக்கள் மனம் கவர்ந்த வருமான ரச்சிதாவின் முன்னாள் கணவர் ஆவார்.
அவர்கள் பிரிந்து விட்டதாக ஏற்கனவே பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வந்தது.
இந்த நிலையில் ஜிஜி என்ற ரட்சிதாவுக்கு டப்பிங் கொடுக்கும் பெண் காவல் நிலையத்தில் ஒரு புகாரை அளித்துள்ளார். அந்த புகாரில் ரட்சிதாவின் கணவர் தினேஷ் தன்னை மிரட்டுவதாக குற்றம் சாட்டி இருந்தார். அவர் ரட்சிதாவை தவறாக வழி நடத்துவதாகவும் தினேஷ் தரப்பு காவல் நிலையத்தில் விளக்கம் கொடுத்தது.
அதே ஜிஜி அளித்த புகாரில் விஷ்ணுவையும் தினேஷ் மிரட்டுவதாக கூறியிருந்தார். பிக் பாஸ் வென்ற பின்னர் வீடு கார் வாங்குவதற்காக விஷ்ணு தான் உதவி செய்ததாகவும் எனவே தினேஷுக்கு இது கோபத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
விஷ்ணுவிடம் பேசவும் நேரில் சந்திக்கவும் தினேஷ் முயற்சித்ததாகவும் ஆனால் விஷ்ணு மறுத்துவிட்டது குறித்தும் தகவல் வெளியானது. இந்த நிலையில் தான் விஷ்ணுவும் ஜிஜியும் நண்பர்கள் என்றும் விஷ்ணு தினேஷால் மிரட்டப்பட்டதாக கூறிய தகவல் ஜி.ஜிக்கு அப்படித்தான் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இதனுடைய சுசித்ரா விஷ்ணுவை தினேஷ் அமுல் பேபி எனக் கூறியதும் டென்ஷன் ஆனதற்கான காரணத்தை கூறியுள்ளார்.
பொதுவாக தனுஷ் கேங்க் பயன்படுத்தும் கோடு வேர்ட்டுகளில் ஒன்று அமுல் பேபி. அமுல் பேபி என்றால் “ஒயிட் பம்” கொண்டவர்கள் என்று அர்த்தமாம். இந்த கோடுவேர்ட் விஷ்ணுவுக்கும் தெரிந்ததால் தான் அவர் டென்ஷன் ஆகி சண்டையிட்டு இருப்பதாக கூறியிருக்கிறார்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.