“அடிச்சான் பாருய்யா அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர” அப்படிங்கிற மாதிரி கமலை மீறி விஜய் டிவி ஒரு அதிரடியான முடிவை எடுத்து பிரதீப்புக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கு. ஆனா கண்டிப்பா அது பிக் பாஸ் ரீ என்ட்ரி கிடையாது.

பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில ஏற்கனவே 3-வது சீசனில் வெளியேறிய பிரதீப், ஆட்டத்தை நன்றாக இத்தனை சீசன்களாக அமர்ந்து கணித்து, ஸ்கெட்ச் போட்டு மீண்டும் 7வது சீசனில் உள்ளே வந்து ரணகளமாக விளையாடினார். என்ன அவர் பேசிய கெட்ட வார்த்தைகள் தவிர அவர் ஆட்டம் பல இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது. பிரதீப்பை பலரும் பாராட்ட தொடங்கி அவரை அட்மைர் செய்ய தொடங்கிய நேரத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற ஒரு விமன் கார்டை காட்டி மாயா, பூர்ணிமா, ரவீனா, ஐசு உள்ளிட்ட கேங் ஒன்றாக சேர்ந்த பிரதிப்பை ரெட் கார்ட் காட்டி வெளியேற்றியது. ஆனால் பிரதிப் வெளியேறாவிட்டால் தானே வெளியேறியிருப்பேன் என நடிகர் கமலஹாசன் கூறியது மூலம் இது நடிகர் கமலஹாசனை அந்தாளு எனப் பிரதீப் கூறியதன் வெளிப்பாடாக இருக்கலாம் என்று பலரும் சமூக வலைதளங்களில் யூகித்தனர். இது கமல் காதுககு நன்றாக எட்டியதோ என்னவோ அவர் விழுந்து விழுந்து விளக்கம் கொடுத்தார்.

பிரதீப் இனி பிக் பாஸ் வீட்டுக்குள் வர மாட்டார் என்று கமலஹாசன் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். எனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் அந்த 50 லட்சம் ரூபாய் வென்றாக வேண்டும் அல்லது தனக்கான ஒரு இயக்குனர் வாய்ப்பை பெற்றாக வேண்டும் தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற வெறியில் உள்ளே வந்து வெறித்தனமாக விளையாடி வந்த பிரதீப் ஆண்டனி எக்ஸ் தளத்தில் தனக்கு பிக் பாஸ் மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தால் தான் ஏற்க தயாராக இருப்பதாக கூறி பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் பிக் பாஸுக்குள் அவர் நுழைய வாய்ப்பு இல்லை என்றாலும் விஜய் டிவி அவருக்கு ஒரு ஜாக்பாட் வாய்ப்பை கொடுத்திருக்கிறதாம்.

சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற வாய்ப்புக்காக தான் பிரதீப் அவ்வளவு குட்டிக்கரணமும் போட்டார்.இந்த நிலையில் அவருக்கு ஒரு இயக்குனர் வாய்ப்பை லட்டு போல தூக்கி கொடுத்து இருக்கிறதாம் விஜய் டிவி நிர்வாகம்.

அதாவது விஜய் டிவியின் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒரு வெப் சீரிஸ் ஒன்று உருவாக்க திட்டமிட்டுள்ளனர். அதற்காக பிரதிபிடம் கதையும் கேட்டுள்ளதாகவும் பிரதீப் மும்முரமாக அதன் கதை தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE