BB Day 44 விசித்ராவை கட்டம் கட்டும் மாயா கேங்
திருமண பாடல் ஒலித்து உற்சாகமாகத் தொடங்கிய 44-ம் நாளில் ஆரம்பத்திலேயே ஒரு ஆப்பு. . .
போட்டியாளர்கள் காலை உணவாக ஒரு வாரத்திற்கு ரவா உப்புமா சாப்பிட வேண்டுமென்று பார்வையாளர்களின் கருத்துக்கணிப்பில் சொல்லப்பட்டதாகக் கூறி வீட்டின் செலவைக் குறைத்தார் பிக்பாஸ். ‘ஆயில் இல்லாத சப்பாத்தியை’ கேட்டு சுரேணிடம் திட்டு வாங்கிய அக்ஷயா பிராவோவிடம் கோகோ மில்க் கேட்டு அடம்பிடிக்க, அவரே செய்து தரும் மன நிலைக்கு வந்த பின், விஷ்ணு புகுந்து ஆட்டையைக் கலைத்தார். “தப்பு. அதெல்லாம் நீ கேட்கக்கூடாது. அப்படில்லாம் தனியா கொடுக்க முடியாது” ‘நீ ஏதோ ஷூட்டிங் வந்த மாதிரியே இருக்க. உன்னை ஸ்பெஷலா கவனிக்க முடியாது’ என்று சொன்னார் விஷ்ணு.
நீ எல்லாம் ஒரு ஆளே இல்ல எனப் பேசுனதுக்கு ஒரு வழியா அப்பாவி முகத்தை வெச்சு மன்னிப்பு கேட்க வைத்தார் அக்ஷயா.
‘கூல்’ சுரேஷ் மாதிரி மணியும்-ரவீனாவும் மேக்கப் போட்டு ஒரு பக்கம் அதிக சத்தத்தில் அலப்பறையைக் கிளப்ப முயன்றார்கள். கீச்சுக் குரலை வைத்துக் கொண்டு ரவீனா பேச முயன்றதுதான் அல்டி.
“இந்த வாரம் மாயா எப்படியோ நாமினேஷன்ல இருந்து மிஸ் ஆயிடுச்சேப்பா?” என்று சுரேஷ் ஆதங்கப்பட “மத்தவங்க போடுவாங்கன்னு ஒவ்வொருவருத்தரும் விட்டுட்டாங்க போல” என்றார் ரவீனா.
மொக்கை கன்டென்ட் ஒன்று தர முயன்று பல்பு வாங்கினார் பூர்ணிமா “கிச்சன்.. டீம்.. உங்க கிட்ட ஒரு புகார் சொல்லணும். பாத்திரங்கள்ல இருக்கற உணவையெல்லாம் க்ளீன் பண்ணிட்டு தர மாட்டீங்களா. இப்படி தந்தா எப்படி வாஷ் பண்றது?” என்று பூர்ணிமா ஒரு பஞ்சாயத்தை ஆரம்பிக்க “என்னது உணவா… காட்டுங்க” என்றார் தினேஷ். அதில் பாவம் ஒரு பச்சை மிளகாய் யாருக்கும் தெரியாது ஒளிந்து கொண்டிருந்தது.
“நியாயமான விஷயமா இருந்தா நான் உங்க கூட நிப்பேன். இது சாதாரண விஷயம். நீங்க சொல்றது baseless point. கண்ணாடி மாதிரி துடைச்சா பாத்திரங்களை வைப்பாங்க?” என பொறிந்து தள்ளினார் தினேஷ்.
ஷாப்பிங் பில் கட்டுவதற்கான நேரம். அதிக பொருட்களை அள்ளிக் கொண்டு வந்ததன் விளைவாக ஒரு ஃபிரேமில் நின்று தலையில் செங்கல்லை முட்டுக் கொடுத்து பஸ்சர் அடிக்கும் வரை நிற்க வேண்டும என பிக்பாஸ் உத்தரவு போட்டார்.
இதில் உயரமான ஆண்கள் தான் ஜெயிக்க முடியும் என நினைத்தபோது, பிராவோ மணி ஆகிய இருவரும் தோற்க, மாயா-பூர்ணிமா ஜோடி ஜெயித்தது. இருந்தாலும், நால்வரில் மூவர் ஜெயித்தால்தான் பிக்பாஸ் பெரிய வீட்டு படுக்கை அறை திறக்கப்படும். அந்த வகையில் இருவர் மட்டுமே வென்றதால், வீட்டின் கடைக்குட்டி போல விக்ரமை அழைத்து கதவை மூடச் சொன்னார் பிக்பாஸ். கொடுக்கும் சம்பளத்துக்கு அதற்காக அவரைப் பயன்படுத்தலாம் என நினைத்திருக்கலாம் பிக்பாஸ்.
“சின்ன வீட்டுப்பக்கம் யாரும் வந்துடக்கூடாது.. இங்க வர்றதுக்குத்தானே முன்ன பயந்தீங்க.. இப்ப மட்டும் இனிக்குதா?” என்று கேட் போட்டார் சுரேஷ்.
மாயாவும் பூர்ணிமாவும் மைக்கை கழற்றி வைத்து விட்டு ஸ்கீரின் பின்னால் சட்டென்று மறைந்து ஏதோ செய்ய, ‘மைக்கை மாட்டுங்க. மைக்கை மாட்டுங்க’ என்று ரோபோ போல பலமுறை சொன்னார் பிக்பாஸ்.
அடுத்த டாஸ்க் லட்டு டாஸ்க். ஒரு லட்டை தனக்கு எடுத்துக் கொண்டு நண்பன் என்று கருதுபவருக்கு ஒரு லட்டும், எதிரி என்று கருதுபவருக்கு ஒரு லட்டும் காரணத்தைச் சொல்லி தர வேண்டும். மூன்று லட்டுகளின் உள்ளே மட்டும் ஸ்டார் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். அதிக ஸ்டார்களைப் பெறும் அதிர்ஷ்டசாலிகளுக்கு ‘அடுத்த வாரத்தில் இரண்டு நபர்களை எவிக்ஷன் பட்டியலில் சேர்ப்பதற்கான’ பவர் வழங்கப்படுமாம்.
இதில் விசித்ராவிற்கு 2 அதிர்ஷ்ட ஸ்டார்கள் கிடைத்தன. மணிக்கு ஒரு ஸ்டார் கிடைத்தது. இதில் விசித்ரா-ஜோவிகா பரஸ்பரம் எதிரி லட்டை பரிமாறிக் கொண்டனர். விசித்ராவும் அர்ச்சனாவும் ஒருவருக்கொருவர் நட்பைத் தொடங்க பிள்ளையார் சுழி போட்டுள்ளனர்.
‘மம்மி. பாதுகாவலர்..வேஷம்லாம் போடுவாங்க. அது உண்மையில்லன்னு பக்கத்துல போய்ப் பார்ததாதான் தெரியும்’ என்று எதிரி பட்டத்தை விசித்ராவிற்கு வழங்கினார் பூர்ணிமா. இதேதான் ஜோவிகாவின் நிலைப்பாடும். ‘விசித்ரா கேம் ஆடுவாங்களாம். பதிலுக்கு நாம ஆடக்கூடாதாம். அவங்க பாசமெல்லாம் போலி’ என்றார்.
`வந்த நாள் முதலே அப்படித்தான் இருக்கா. படிப்பு பத்தி யதார்த்தமா கேட்டதுக்கு என்னை பொதுவில வெச்சு பதார்த்தமாக்கிட்டா. அவ சேர்ந்திருக்கிற இடம் அப்படி. அந்தக் கூட்டமே வெஷம்.’ என பொறிந்து தள்ளினார் விசித்ரா.
“விசித்ராவை வீக்கான பிளேயர்ன்னு நெனச்சேன். ஆனா கிளவரா பண்றாங்க” என் பூர்ணிமா பகைமையுடன் பாராட்ட, “அது கிளவர்ன்ஸ்லாம் கிடையாது. சித்தி, அத்தை மாதிரி சீரியல் காரெக்ட்டர் பண்ற அதே மேட்டர்தான். எமோஷன்களோட விளையாடறாங்க. ‘ஐ லவ் யூ சைல்ட்’ன்னு சொல்லிட்டு பின்னாடி நாமினேஷன் பண்ணுவாங்க. இது ரொம்ப ஓல்ட் மெத்தட்’ எனக் கூறினார் மாயா.
தோழா தோழா பாட்டுக்கு பிராவோ-மாயா ஆடிக் கொண்டிருக்க, தில்லிருந்தா நீங்க இந்த பாட்டப் பாடுங்க பாப்போம் என விஷ்ணு – பூர்ணிமாவைக் கோர்த்துவிட்டார் மாயா.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.