‘அவன் இவன்’ பட பாடலோடு விடிந்தது/ தலைவிரிகோலமாக நடனமாடினார்கள்.

“ரெண்டு பேர் வெளியே போயிருக்காங்க.. யாருக்கும் இங்க பீலிங்க்ஸ் இல்லை. பிரதீப் பய காலையிலேயே வந்து நிப்பான்… டீ வேணுமான்னு கேட்பான்… ஏதாவது தொணதொணன்னு பேசிட்டே இருப்பான்” என தனக்குள் இருந்த தாயன்பை புலம்பலாகக் கொட்டித் தீர்த்தார் விசித்ரா.

பிரதீப்புக்கு கேமரா மூலம் மெசேஜ் சொன்னார் கூல் சுரேஷ். “நீ போனது எனக்கு ரொம்ப வருத்தம்ப்பா.. உனக்கு நல்ல திறமை இருக்கு. நேரம் தான் சரியில்லை. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். உன் குணத்தை மட்டும் மாத்திக்கோ” என தன்னோட தம்பியைப் பிரிந்தது போன்று சோகத்தை வெளிப்படுத்தினார் கூல் சுரேஷ்.

சின்ன வீட்டிற்கு செல்ல வேண்டிய பொறுப்பு தனக்கு வந்ததும் மாயா தலைக்கணமாக உணர்ந்தாரோ என்னவோ, விசித்ரா, ரவீனா, மணி, தினேஷ், அர்ச்சனாவை பழிவாங்கல் நடவடிக்கையாக அனுப்பினார்.

பிக் பாஸ் சீக்ரெட் நாமினேஷன் பிராசஸை அடுத்ததாக ஆரம்பித்தார். ‘நாமினேஷன் பற்றி பொதுவில் விவாதிக்கக் கூடாது. அப்படி விவாதித்தால் தண்டனை’ என்ற மாற்றம் மீண்டும் அறிமுகமானது. விசித்ரா, தினேஷ், அர்ச்சனா, ஐஷூ, பூர்ணிமா மற்றும் பிராவோ.

பிக்பாஸ் கூறிய காரணங்களில் ரெட் கார்ட் பற்றிய காரணமும் இருந்ததால் பெரிய வீடு டென்ஷன் ஆனது. “பெண்கள் பாதுகாப்பு என்பது முக்கியமான விஷயம். அதை நீங்கள் invalidate ஆக்கியது கேவலமானது” என்று மாயா சொல்ல சண்டை தொடங்கியது.

“நீங்கள் அந்தக் காரணத்தை மனசாட்சியுடன் சொல்லி இருந்தால் சரி. ஆனால் ஆட்டத்திற்காக சொல்லி இருந்தீர்கள் என்றால் ஒருவரின் வாழ்க்கையை அழித்து விட்டீர்கள் என்று பொருள்” என அர்ச்சனா கூறி, உண்மை ஏதும் வெளிவந்துவிடுமோ என்றே மாயா கேங் பதறியது.

புள்ளப் பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளச்சுருச்சு என அர்ச்சனாவை ஆவேசமாகப் பார்த்ததும் சற்றே திடுக்கிட்டனர்.

“நீங்களா நினைச்சா ஜாலியா பேசிட்டு இருக்கீங்க.. அப்பல்லாம் எதுவும் சொல்லாமல் திடீர்னு இதை ஒரு டிரம்ப் கார்டா பயன்படுத்திட்டீங்க” என்றார் தினேஷ். “இவ்வளவு விஷயம் நடந்திருக்குன்றீங்க. ஏன் என் கிட்ட யாருமே சொல்லலை?” என்று மீண்டும் விசித்ரா கூறினார். “உங்ககிட்ட சொல்லாததுதான் இப்ப பிரச்சனையா… பிரதீப் என்ன பத்தி என்னல்லாம் கமெண்ட் சொல்லி இருக்காருன்னு உங்களுக்கு தெரியுமா?” என்று வாதாடினார் பூர்ணிமா.

“நாங்க எப்ப சொல்லணும்னு நீங்க முடிவு பண்ணாதீங்க” என்ற மாயாவிடம், “நியாயமான கேப்டனாக நடந்து கொள்” என்றார். “ஐசுவிடம் பிரதீப் மிகையாக நடந்து கொண்டார் என்றால் நிக்சன் ஏன் அதை அப்போதே ஆட்சேபிக்கவில்லை, சண்டை போடவில்லை?” என விசித்ரா கூறியதும். “பிரதீப் மாதிரியான ஆளுங்களுக்கு எப்படி இவங்க சப்போர்ட் பண்றாங்கன்னே தெரியலையே’ என டென்சன் ஆனார் ஐஷூ.

“பிரதீப் விவகாரம் குறித்து உங்களிடம் முழுமையாக விளக்கம் அளித்தோம். அப்போது ஒப்புக்கொண்டு இப்போது மறுபடியும் கிளறுவது ஏன்?” என்ற கேள்விக்கு, “அப்படி உண்மையாகவே நடந்திருந்தால் நான் பொதுவில் மன்னிப்பு கேட்பேன்” என்றார் விசித்ரா.

விசித்ராவுக்கும் ஜோவிகாவிற்கும் இடையில் மறுபடியும் மோதல். “பொட்டிய கட்டிட்டு கிளம்பு” என்று ஆவேசமாக வார்த்தைகளை இறைத்தார் ஜோவிகா. “நீ என்னை அண்ணான்னு கூப்பிட்டா, நான் உன்னை நான் நாமினேட் பண்ணிடுவேன்னு அவரு சொன்னாரு. இது உங்களுக்குப் புரியுதா இல்லையா” என்றார் ஐஷூ.

அர்ச்சனாவிடம் “நீ அழப் போகலையா?” என மாயா அவரது பலவீனத்தைக் குறை கூறி பேசியது அபத்தம்.
“ஒரு கேப்டனா நீங்க இப்படி செய்யக்கூடாது” என நினைவூட்டினார் விசித்ரா. “ஆமாம். நான் நியாயமற்ற முறையில் நடக்கும் கேப்டன்தான்” என்றதும் பிரதீப்பைப் போல மாயாவும் எவிக்ட் ஆவார் என தெரிகிறது.

அர்ச்சனா மீது ஐஷு கோபத்தில் கெட்ட கெட்ட வார்த்தைகளைப் பொழிந்து தள்ளினார். “தினேஷ்…அர்ச்சனா.. விசித்ரா.. இந்த மூணு பேரும் இந்த வீட்டில் இருக்கக் கூடாது. தூக்கியே ஆகணும்” என மாயா கேங் சபதம் ஏற்றது.

ரவீனாவிடம் பிரதீப் வில்லங்கமாக கமெண்ட்களை சொன்ன விவகாரம் குறித்து பேசுகையில், “நீ ஏன் அப்பவே சொல்லல? ஒரு பெண்ணை ரேப் செய்தால் கூட உடனே சென்று புகார் சொல்லணும். இல்லனா காயம் ஆறிடும்” என விசித்ரா கூறியது படு கேவலம்.

“Claustrophobia இல்லைன்னு கமல் சாரே சொல்லிட்டாரு என மாயா மீண்டும் சொல்ல, அர்ச்சனாவைப் ‘பொய்க்காரி, கள்ளி’ என திட்டித் தீர்த்தார் ஜோவிகா.

“பிரதீப் என்கிட்ட நல்லாத்தான் பழகினான்.. ” என விசித்ரா கூறியது தவறு. ஒருவரிடம் தாயுள்ளத்தோடு பழகும் நபர் வேறொரு பெண்ணிடம் தவறாக நடப்பது இயல்பு.

ஷாப்பிங்கின் போது, ‘கேப்டனுடன் சின்ன வீட்டில் உள்ள ஒருவர் செல்ல வேண்டும்’ என்றார் பிக்பாஸ். “நான் வருகிறேன்.. என்னால் வேகமாக ஓடி பொருட்களை எடுக்க முடியும்” என்றார் மணி. ஆனால், விசித்ரா திட்டமிட்டே அர்ச்சனாவை அனுப்பி ஷாப்பிங்கை சொதப்பினார்.

வெங்காயத்தை அள்ளிக் கொண்டு வந்தவர்கள், சமையல் எண்ணெயை கோட்டை விட்டனர். “அவ்வளவுதான். என்னை வெச்சு செய்யப் போறாங்க” என்று மீண்டும் அர்ச்சனா புலம் சமாளிக்கலாம் என்றார் விசித்ரா.

தன்னுடைய தனிப்பட்ட விவகாரத்தை அர்ச்சனாவும் தினேஷும் பேசியதால் கோபமான ஐஷு தன் கேங்குடன், ‘யார் ஆண்.. யார் ஆண் இல்லை’.. என வில்லங்கமாக விவாதிக்க, ஜோவிகா பலிகடா ஆனார்.

‘விமன் கார்டை தவறாக பயன்படுத்தியிருக்கறதா சொல்றீங்க… உங்களுக்கு அது நடந்திருந்தால்தான் தெரியும்’ என்று அர்ச்சனாவிடம் நிக்சன் கூற ஐஷூவிடம் சமாதானத்துக்கு தயாரானார் அர்ச்சனா.

“நான் ஐஷூ கிட்ட தனியா பேசணும்” என்று அர்ச்சனா சொல்ல, “நீங்க இங்க சேஃப்பா இருப்பீர்களா என்று மாயா ஐஷூவிடம் குத்தலாக கேட்டார். “மாயா இல்லைனா நான் சேஃப்பா இருப்பேன்” என கெட்ட கெட்ட வார்த்தைகளாகப் பேசித்தள்ளினார் அர்ச்சனா. இதையடுத்து மன்னிப்பும் கேட்டார்.

‘சமையல் செய்துதான் ஆக வேண்டும்’ என்று மாயா அடம் பிடிக்க Closed போர்டை போட்டார் அர்ச்சனா. சண்டை தொடர்ந்தது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE