குதிகால் வெடிப்புக்கு டாட்டா
குதிகால் வெடிப்பு என்பது அதிக நேரம் ஈரத்தில் இருப்பதாலும் செருப்பு போடாமல் அனைத்து விதமான தரைகளிலும் நடப்பதாலும் விளையும் ஒரு தோல் குறைபாடு ஆகும்.
நமது உள்ளங்கையை விட பாதங்கால்கள் அதிக சூடு தாங்க கூடிய ஒன்றாக படைக்கப்பட்டுள்ளது. எனவே செருப்பு அணியாமல் நடக்க பழக்கப்பட்டதாக நமது உள்ளங்கால்கள் இருந்தன.
ஆதிகாலத்தில் மனிதன் செருப்பு அணியாமல் காடு மேடெல்லாம் திரிந்து அதனை காப்பு காய்ச்சியது போல் திடமாக வைத்திருந்தனர். அதில் முட்கள் கூட அதிகம் துளைக்காது இருந்தது. ஆனால் தற்போது டைல்ஸ் தரையில் நடந்து, வெளியே வந்தாலே செருப்பு போட்டுக் கொள்வது, அதிகம் நடக்காதது உள்ளிட்ட பல சூழல்கள் இருந்த போதும் கூட நாம் பாத வெடிப்புக்கு ஆளாகிறோம்.
பாதவெடிப்பு எதனால் வருகிறது என்பதை பார்த்து விட்டோம். தற்போது இதனை எப்படியெல்லாம் தடுக்கலாம் என பார்க்கலாம்.
குதிகால்களை எப்போதும் ஹைட்ரேட்டடா வைத்துக் கொள்ளவும்.
அடர்த்தியுள்ள பாத வெடிப்புக்கான கிரீம் அல்லது ஆயின்மெண்டை தினமும் தடவலாம்.
அந்த ப்ராடக்டுகளில் பெட்ரோலியம் ஜெல்லி, ஷியா பட்டர், யூரியா உள்ளிட்டவை இருக்க வேண்டும்.
உங்களது கால்களை வெதுவெதுப்பான நீரில் சோப்பு கலந்து 15 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும்.
ஊற வைத்த காலை தேய்த்து கழுவினாலே இறந்த செல்கள் சென்று விடும்.
ஆனால் அவற்றை முழுமையாக அகற்ற ஃபுட்ஸ்கிராப்பர் என்ற சொரசொரப்பான கற்களை பயன்படுத்தலாம்.
அல்லது எண்ணெயில் சர்க்கரை தடவி அதனை தேய்த்து வந்தாலும் இறந்த செல்கள் உதிர்ந்து விடும்.
உடல் வறட்சியை போன்று பாத வறட்சி கூட வெடிப்பை ஏற்படுத்தலாம்.
எனவே அடிக்கடி நீர்ப்பருகி உங்களை ஹைட்ரேட்டடாக வைத்துக் கொண்டீர்கள் என்றால் பாத வெடிப்பு அவ்வளவு எளிதில் உங்களை ஆட்கொள்ளாது.
சொகுசான ஷூக்களை அணியவும்.
குதிகால்கள் வெளியே தெரியும் படியோ அல்லது குதிகால்களின் பக்கம் திறந்த வெளியில் உள்ள ஒரு காலணியை அணியும் போதோ உராய்வின் காரணமாக வெடிப்பு வரலாம்.
எனவே அதனை தடுக்க உங்களுக்கு சவுகரியமான மிருதுவான ஷூக்களை அணியலாம்.
ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும் இயற்கையான ஃபைபர்கள் அடங்கிய சாக்ஸை அணிவதன் மூலம் பாத வெடிப்பில் இருந்து தவிர்க்கலாம்.
விட்டமின், மினரல்கள் அதிகம் உள்ள பேலன்ஸ் ஆன டயட்டை எடுத்துக் கொள்வதன் மூலம் பாத வெடிப்பு தவிர்க்கப்படலாம்.
ஆரோக்கியமான தோலுக்கு விட்டமின் E யும் முக்கியம்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.