பிக் பாஸில் இருந்து பிரதீப் வெளியேறியதும், சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாக இளைஞர்கள் கருத்துக்களை பதிவிட்டு வரும் அளவுக்கு பேசுபொருளாகியுள்ளது.

பிக் பாஸ் வீட்டுக்குள் ஆரம்பத்தில் நுழைந்தது முதலே தனது வித்யாசமான சிரிப்பு முதற்கொண்டு அவரது பேச்சு, அணுகுமுறை என பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். நல்ல திறமையான நபர் என்றும், வாய் பேசியே பிறரை தனது ஸ்ட்ரேட்டஜியில் இழுக்கிறார் என்றும் பாராட்டப்பட்டவர். என்னதான் சக போட்டியாளர்களை வழி அனுப்பி தான் ஜாக்பாட் தொகையான ரூ.50 லட்சம் பிக் பாஸில் இருந்து வென்றுவிட்டுதான் வெளியேற வேண்டும் என பிரதீப் நினைத்திருந்தாலும், அவரது முரட்டு குணமும் மன்னிப்பு கேட்க முடியாது என்ற சுயமரியாதை கௌரவமும் அவரை இந்த போட்டிகளில் இருந்து வெளியேற்றியது என்றே சொல்லலாம்.

ஆனால் இந்த போட்டிகளில் இருந்து அவள் வெளியேறியதற்கு கமலஹாசன் தான் காரணம் என பலரும் பல விதமாக விமர்சித்து வருகின்றனர். கமலை அந்தாளு என ஒருமையில் பேசியதால் கமலுக்கு கோபம் வந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இது கமலே இந்த நிகழ்ச்சியில் கூறிய ஒரு வார்த்தையின் மூலம் உறுதியாகி உள்ளது. அதை பற்றி பின்னர் பார்க்கும் முன்னால் பிரதீப் மீதான குற்றச்சாட்டு என்ன? ஏன் ஒட்டு மொத்த ஹவுஸ் மேட்ஸ்ம் ஒரே அடியாக பிரதிப்பை எதிர்த்தனர் என தற்போது பார்க்கலாம்.

பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சி தொடங்கியது முதலே பிரதீப் தான் ஹாட்டான கண்டஸ்டன்ட். அவரது ஒவ்வொரு அசைவுகளும் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை எழுப்பியது.

புத்திசாலியான பிளேயர், பிக் பாஸ் ஆட்டத்தை மிகத் திறமையாக புரிந்து கொண்டு வந்து அதில் விளையாட களம் கண்டு நன்றாக ஆடி வந்தவர்.

பிற போட்டியாளர்கள் எல்லாம் அ உ என்றால் பிக் பாஸ் இடம் போய் சந்தேகம் கேட்டு நின்று கொண்டு இருந்தனர். ஆனால் பிரதீப் எந்த ஒரு சூழலையும் தனக்கு சாதகமாக அதனை திறம்பட மாற்றிக் கொண்டார்

பிரதீப் மீதான குற்றச்சாட்டு என்ன?

இந்த வாரம் உரிமைக்குரல் துணியை பயன்படுத்த வேண்டும் என மாயா பூர்ணிமா உள்ளிட்டோர் திட்டமிட்டு பிரதீப்புக்கு எதிராக பிரச்சாரங்களை செய்தனர்.

பிரதீப் மீதான குற்றச்சாட்டுகளாக மற்றவர்களை அச்சுறுத்துவது போல் பல விஷயங்களை பேசுவது கெட்ட வார்த்தை பேசுவது மட்ட ரகமான பாலியல் கிண்டல்களை சொல்வது பெண்கள் குறித்து தரக்குறைவான கமெண்ட்களை செய்வது இரவில் தூங்காமல் வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருப்பது மக்களின் ஆதரவு நிறைய இருப்பதாக உணர்வதால் மிகையான துணிச்சலுடன் ஆடுவது அதனாலேயே அவரை எதிர்த்து நிற்க தயக்கம் காட்ட வேண்டிய நிலை, லவ் கன்டென்ட் வைத்து மற்றவர்களின் உணர்வுகளுடன் விளையாடுவது மூளைச்சலவை செய்வது செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்காமல் இருப்பது அப்படித்தான் செய்வேன் என அராஜகம் செய்வது என பல கருத்துக்கள் வெளியாகின்றன

அதிலும் உச்சமாக, கழிப்பறையை தாளிடாமல் சிறுநீர் கழித்தது பற்றி கேட்கும் போது அலட்சியமாக பதில் சொன்னது நான் வேணும்னே தான் பண்ண என ஆண்களும் பெண்களும் தங்கும் இடத்தில் அடாவடியாக பேசியது என அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. மணியை தோற்கடித்து வெளியேற்றியதும் நான் ரவீனாவை லவ் பண்ணலாமா? எனக் கேட்டதாக புதிதாக ஒரு புகார் வேறு அவர் மீது எழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி பூர்ணிமா பேசிய போது தன்னைப் பற்றி பிரதீப் திரும்ப கூற முடியாத ஒரு பாலியல் கிண்டலை செய்ததாக குற்றம் சாட்டினார். எப்போது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தெரிந்து விட்டதோ அப்போதே ஒரு முடிவு எடுத்து ஆக வேண்டும் என பிரதிப்பை பேச விடாமல் கமல் தடுத்து கன்ஃபெசன் ரூமுக்குள் வாக்கெடுப்பு நடத்தினார். அப்போது விசித்ரா கூல் சுரேஷ் உள்ளிட்ட சிலரை தவிர பலரும் பிரதீப் இந்த போட்டியில் இருந்து வெளியேற வேண்டும் என ரெட் கார்டை காட்டினர்.

இதை அடுத்து நீங்கள் வெளியேறலாம் என பிக் பாஸ் பிரதீப்பை வெளியே அனுப்பி வைத்தார்.

இந்த ரெட் கார்ட் விஷயத்தில் நானே கூட முடிவெடுக்க முடியும். ஆனால் ஜனநாயக பூர்வமாக இதை நிகழ்த்த விரும்புவதால் தான் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு பதில்களை நேர்மையாகவும் துணிச்சலாகவும் சொல்லுங்கள் பிரதீப் இந்த ஆட்டத்தில் தொடலாமா வேண்டாமா என்று பிறருக்கும் வாய்ப்பு அளித்தது பற்றி கமல் கூறினார்

பிரதீப் இனி வர மாட்டார் என அதிகாரபூர்வமாக அறிவித்த பின் போட்டியாளர்கள் பலமாக கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதிலும் மாயாவின் கொக்கரிப்பான சிரிப்பு பலருக்கும் பொறைமையை வெளிப்படுத்தியதாக ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியது

என்னோட முடிவு ஒரு பக்கம் இருந்தாலும் சேனல் முதலீட்டாளர்களின் முடிவும் அதே மாதிரி தான் இருந்தது பெண்களின் பாதுகாப்பு தான் பிரதானம் நாங்களே முடிவு எடுக்கக் கூடாது என்பதற்காகத்தான் புகார் சொன்னவர்களின் கருத்தையே கேட்கும்படி முடிவு எடுக்கப்பட்டது என கூறிய கமல் ஒருவேளை சேனல்ல இதற்கு மறுத்து இருந்தால் நானும் பிரதிப்போடு வெளியேறி இருப்பேன் என கமல் கூறினார்.

தன்னை அந்தாளு என பிரதீப் கூறியதால் கமல் அவரை வெளியேற்றியதாகவும், அவர் வெளியேறாவிட்டால், தான் வெளியேறிவிடுவேன் என கமல் சேனலிடம் நிபந்தனை விதித்திருக்கலாம் என விஜய் டிவியிடம் கமல்ஹாசன் கூறியிருக்கலாம்.

அது எப்படி சக போட்டியாளர் ஒரு பலமான போட்டியாளரை பற்றி வேண்டாம் எனக்கூறி வாக்கெடுப்பு நடத்தி வெளியேற்ற முடியும்? இதில் நியாயம் இல்லை. அப்பொழுது மக்களுடைய கருத்து எங்கே இருக்கிறது? கமலஹாசனை அந்தாளு என பிரதீப் கூறியதால் தான் வெளியேற்றப்பட்டு இருக்கிறார் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் உலவி வருகின்றன.

பிரதீப் வெளியேற்றப்பட்டது சரியா என்பது பற்றி உங்களது கருத்துக்களை கமெண்ட் செக்ஷன்ல தெரிவிக்கவும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE