நடிகை திரிஷாவும்- விஜயும் 90ஸ் கிட்ஸ்க்கு பிடித்த பெஸ்ட் காம்போ. கில்லி, திருப்பாச்சி, ஆதி என பல படங்களில் அவர்கள் ஜோடிபோட்டு நடித்தது அட்டகாசமான கெமிஸ்ட்ரியாக இருந்தது. இதையடுத்து இருவருமே அடுத்தடுத்து வெவ்வேறு நடிகர்-நடிகைகளுடன் நடித்து வந்தனர்.

எவ்வளவு லேட்டஸ்ட் நடிகைகள் வந்தாலும், அது விஜய்-த்ரிஷா ஜோடி அளவுக்கு 90ஸ் கிட்ஸ் மனதில் ஒட்டவில்லை என்றால் அது மிகையல்ல. நீங்களும், திரிஷாவும் விஜயும் தவிர வேறு எந்தெந்த ஜோடி கெமிஸ்ட்ரியில் ஹிட்டடிக்கும் என கமென்டில் தெரிவிக்கவும்.

சரி, விஷயத்துக்கு வருவோம். பல ஆண்டுகள் கழித்து விஜயும்-திரிஷாவும் புதியதாக வெளிவந்த லியோ படத்தில் ஒன்றாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

இதையடுத்து, ஏற்கெனவே நடிகர் விஜய் ரஜினிகாந்த் பேசிய காக்கா-கழுகு கதையை எல்லாம் பேசி ஒரு அலப்பறையைக் கிளப்பியதால், த்ரிஷாவின் பேச்சு பெரிதளவில் ஊடக வெளிச்சம் படாமல் அடிபட்டுப் போனது. அவை இதோ உங்களுக்காக.

எனது பால்ய நண்பருடன் மீண்டும் பல ஆண்டுகளுக்கு பிறகு திரைப்படத்தில் ஒன்றாக நடிப்பதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைந்தேன். எனது வாழ்நாட்களில் மறக்க முடியாத இனிமையான தருணங்கள் அவை. விஜய் எனது நண்பர் மட்டுமல்ல, நான் விரும்பும் நபரும் கூட. அவரின் மீது அவ்வுளவு அன்பு உள்ளது.

அமைதி மற்றும் அமைதியுடன் கூடிய வெற்றி தான் சரியான பதிலடியாக இருக்கும். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவரது படங்களில் கதாநாயகிகள் கொல்லப்பட்டு விடுவார்கள்.

ஆனால் நான் நல்லவேளையாக தப்பித்திருக்கிறேன். என்னை இந்த படத்தில் கொல்லாமல் இருந்ததற்கு, அவருக்கு மிகுந்த நன்றியை நான் தெரிவிக்கிறேன்” என நகைச்சுவையாகத் தெரிவித்தார் திரிஷா.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE