தீபாவளி பலகாரம் – உடையாமல் குலாப் ஜாமூன் செய்வது எப்படி?
குலாப் ஜாமூன் குழந்தைகளுக்கும் பிடிக்கும். அத்துடன், குழந்தை மனதுள்ள வயதானவர்களுக்கும் பிடிக்கும். எஸ்பெஷலி சொல்லப் போனா சக்கரை வியாதி இருக்குறவங்களுக்கு ரொம்பவே பிடிக்கும்.
அப்டிப்பட்ட குலாப் ஜாமூன் கடையில் கிடைக்குறத விட வீட்ல ரொம்ப ஈஸியா செய்யலாம். அதுவும் சொதப்பாம, உடையாம செய்யுறது எப்படின்னு இப்போ பாக்கலாம்.
குலாப் ஜாமூன் மிக்ஸ் இல்லன்னா, பால் பவுடர் எடுத்துக் கோங்க. அதுல கொஞ்சம் நெய், கொஞ்சம் பால் ஊத்திக் கோங்க.
சப்பாத்திக்கு மாவு பிணையுற மாதிரி அதிகமா போட்டு அழுத்திப் பிணையாம, லேசா பிணைஞ்சாலே போதும். தேவைப்பட்டா கொஞ்சம் மைதா மாவு சேர்த்துக்கலாம்.
மாவு பிணைஞ்ச அப்புறம் அது வறவறண்ணு இருக்ககூடாது. அப்டி இருந்தா, அது வெடிச்சுரும்.
10 நிமிஷம் மாவ ஊற வைக்கனும். இதில தேவைப்பட்டா பேகிங் பவுடர், கொஞ்சம் உப்பு சேத்துக்கலாம்.
இதையடுத்து எவ்ளோ கப் சர்க்கரை எடுக்குறோமோ, அவ்ளோ கப்புக்கு அளவா தண்ணீர் ஊத்திக்கனும்.
அதுக்கப்புறம், ஏலக்காய் 2, கொஞ்சம் குங்குமப்பூ, கொஞ்சம் பன்னீர் சேர்த்துக்கலாம்.
சர்க்கரைல தூசி இருந்தா இதெல்லாம் போட்றதுக்குள்ளே வடிச்சுருங்க.
அதுக்கப்புறம் அடுப்புல வெச்சு ஒரு கம்பிப் பதம் வர்ற வரைக்கும் காய்ச்சுங்க.
பிசைஞ்சு வெச்ச குலாப் ஜாமூன குட்டி குட்டியா உருண்டை பிடிச்சுக்கோங்க.
உருண்டைல வெடிப்பு இல்லாம அழுத்தி, வட்டமா உருண்டை பிடிக்கனும்.
உருண்டை பெருசா இருந்தா, உள்ள வேகாம போய்டும். எனவே கவனம்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் ஒரு உருண்டை குலாப் ஜாமூனைப் போடவும்.
உருண்டை வாணிலியின் அடியில் தொட்டு, தானாக மேல் எழும்பும் போது நுரை எழும்ப பொறிந்து வரணும்.
அப்போதுதான் அது சரியான பதத்துக்கு வந்துள்ளது என்று அர்த்தம்.
இதையடுத்து, அனைத்து உருண்டைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக வரும் வரை பொறித்து எடுக்கவும்.
சற்று சர்க்கரைப் பாகு ஆறியதும் அதில் உருண்டைகளைப் போட்டு 3 முதல் 5 மணி நேரம் ஊற வைத்து பின்னர் பரிமாறவும்.
தேவைப்பட்டால் அதன் மீது நட்ஸ் துருவி போடலாம். இல்லாவிட்டால், ஐஸ்கிரீம் கூட டாப்பிங்ஸ் ஆக வைத்து பரிமாறலாம்
ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் 1 வாரத்துக்கு வைத்து சாப்பிடலாம். ஆனால், அதற்குள் தீர்ந்துவிட்டால், த காரிகை கம்பேனி பொறுப்பல்ல.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.