பிக்பாஸ் வீட்டுக்குள் கம்பெனிக்காகவும் கன்டென்ட்டுக்காகவும் ஒன்று சேர்ந்த நிக்சன்-ஐஷு ஜோடி தற்போது டைட்டானிக் கப்பல் போல திண்டாடுகிறது. நிக்சனுக்கு இடம் கொடுத்திருக்கக் கூடாது, அவன் கையைத் தொட்டு பேசும் அளவுக்கு வந்துட்டான், என ஐஷு யோசிக்க, விலகுகிறேன் என வாய் சொல்லில் சொல்லி கண்கலங்கிவிடுவானோ என்ற தயக்கம் ஐஷூவை ஆட்டிப்படைக்கிறது.

குழப்பத் தீயில் வெந்து பொருமிக் கொண்டிருக்கிறார் ஐஷு. நிகழ்ச்சி முடித்து வெளியேறியதும், இதெல்லாம் ஒன்னும் இல்ல, நாம ஜஸ்ட் பிரண்ட்ஸ் எனக் கூறி கைகுலுக்கி விலகும் அளவுக்கு தாமரை இலை தண்ணீர் போல ஐஷுவும்-நிக்சனும் இருந்தால் அது இருவருக்குமே நன்மை எனத் தோன்றுகிறது.

“என்கிட்ட பிரதீப்.. வம்பு பண்ணா நிச்சயம் நான் அடிச்சிடுவேன். எனக்கு சுயமரியாதைதான் முக்கியம்.சமாதானம் செய்ய வர உன்னைத் தள்ளி விடறான்… நீயும் அப்படியே சும்மா வரே… இதெல்லாம் பாக்கவே நல்லா இல்ல” என்று நிக்சனிடம் படபடவென பொறிந்து தள்ளினார் ஐஷு.

கூல் சுரேஷ் தனக்கு துரோகம் செய்ததுபோல உணர்ந்து ஹர்ட் ஆகிவிட்ட பிரதீப்போ, அக்ஷயாவை அழைத்து “இங்கு வாயேன் எனக்கு ஒரு ஹக் கொடு” என்று அணைத்தார். சற்று எமோஷனலும் ஆனார். தனக்கு ஒரு அரவணைப்பு தேவைப்படுகிறது என அவர் தன்னைக் காட்டிக் கொண்டார்.

“சுரேஷை ரொம்ப நம்பினேன். ஆனா அம்மா மேல சத்தியம் பண்ணிட்டு பொய் சொல்லக் கூடாது. இந்த மேட்டர்ல நான் ஸாரியெல்லாம் கேட்க மாட்டேன். இந்த கேமை விட்டு போகச் சொன்னாலும் போயிடுவேன். எனக்கு கோபம் எல்லாம் கிடையாது. இப்ப கிளியரா இருக்கேன்” என்றார் பிரதீப்.

31-ம் நாள் விடிந்ததும், `என்னா உம்முன்னு இருக்க?’ என ஐஷூ கிட்ட போனதும், அவர் எரிச்சலடைந்தார். “நேத்து அவ்வளவு பேசிட்டு மறுபடியும் வந்துட்ட.. சுத்தமா உன்னை பிடிக்கவில்லை நீ போயிடு” என்று பதிலளிக்க சற்றே திடுக்கிட்டார் நிக்சன்.

கலை நிகழ்ச்சி என்ற டேலன்ட் ஷோவுக்கு பிரதீப்பையும்-கூல் சுரேஷையும் தலைமையேற்கக் கூறியதும், இருவரும் மறுத்தனர். இருவரையும் அழைத்து நாட்டாமை போல பஞ்சாயத்து செய்ய முயன்றார் பிக்பாஸ். ஆனால், வேலைக்கு ஆகவில்லை. “அம்மா மேல சத்தியமா பண்ணிட்டு பொய் சொல்லிட்டான் சார்” என்று பிரதீப் சொன்ன போது, அவர் சத்தியத்தை சீரியசாக எடுத்துக் கொள்ளும் 90ஸ் கிட் என தெரியவந்தது.

இதையடுத்து பெரிய வீடு இரு அணிகளாகப் பிரிந்து சுரேஷ் – மாயா தலைமையில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சின்ன வீட்டார் இதில் தீர்ப்பு சொன்னார்கள்.

‘உங்க அம்மா மேலன்னு சொல்லி பொய் சத்தியம் பண்ணி இருக்க. அதனால உங்க அம்மா செத்துருவாங்கன்னு சொன்னேன். நான் செஞ்சது தப்புத்தான்’ என பிரதீப் தன் தவறைப்பற்றிக் கூறினார்.

சினிமா டைரக்டராக விரும்பும் பிரதீப், ஒரு கதையைக் கூறிய போது, சுவாரஸ்யமாக இல்லை என கூறி பஸ்சர் அழுத்தினார் தினேஷ். அடுத்து வந்த நடனப் போட்டியில் மணியும், ஐஷூவும் தங்களது அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நிக்சன் பாடிய ராப் பாடலும் அதன் வரிகளும் உணர்ச்சிகரமாக இருந்தன. ‘அண்ணனோட காக்கா டான்ஸ் தவிர, பாடல் நன்றாக இருந்தது என நிக்சனை பாராட்டி சுரேஷை மட்டம் தட்டினார் கானா பாலா.

“நீ ஆல்பம் போடும் போது சொல்லு தம்பி.. நான் வந்து கோரஸ் பாடறேன். ஆனா இந்த நிகழ்ச்சியை டான்ஸ்தான் கெடுத்தது” என மீண்டும் கூறியதைக் கண்டு சுரேஷை புலம்பித் தள்ளினார் பாலா.

இந்தப் போட்டியில் அழகாக நடனாடிய ஐஷூவிற்குகோல்டன் ஸ்டார் வழங்கப்பட்டது.

முந்தைய நாளின் எபிசோடை காண இங்கு கிளிக் செய்யவும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE