சாதாரண துடைப்பம்தான், ஆனால், இப்படி பயன்படுத்தினால் தரித்திரம்

சுத்தம் என்பது நமது ஆரோக்யத்துடன் சேர்ந்தது. அப்படி வீட்டை சுத்தப்படுத்துவதில் நமக்கு உதவுவது, துடைப்பம்தான். பொதுவாக 108 பொருட்களில் மஹாலட்சுமி வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. அதில் முக்கியமான ஒன்று துடைப்பம். துடைப்பத்தை சரியாக பயன்படுத்தினால் வரும் வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்யும் துடைப்பத்தில் கூட சாஸ்திர, சம்பிரதாயங்கள் அடங்கியுள்ளன. துடைப்பத்தை சரியாக பயன்படுத்தினால் அதில் லட்சுமி குடியிருப்பார். தவறாகப் பயன்படுத்தினால், அதில் தரித்திரம் வந்து சேரும்.

பயன்படுத்தும் முறை

  1. காலையில் சூர்ய உதயத்துக்கு முன்னதாக எழுந்ததும் முதல் வேலையாக துடைப்பத்தைக் கையில் எடுக்க வேண்டும்.
  2. வீட்டை பெருக்கும்பொழுது வீட்டில் இருக்கும் அனைவரும் எழுந்து இருக்க வேண்டும்.
  3. யாரும் தூங்கிக் கொண்டோ, சாப்பிட்டுக் கொண்டோ இருக்கும்போது பெருக்கக் கூடாது.
  4. துடைப்பத்தால் வீட்டை கூட்டும் பொழுது பெரிய பொருட்கள் வைத்திருந்தால் அதனை அகற்றி விடவேண்டும்.
  5. அறைகலன்களுக்கு அடியில் கட்டாயம் பெருக்க வேண்டும். அப்படி குப்பை அகற்றாமல் இருக்கும் இடங்களில் பூச்சி, பாம்பு குடியேற வாய்ப்புள்ளது.
  6. உள்ளிருந்து வெளிப்புறமாக குப்பைகளை அள்ளுவது போல பெருக்க வேண்டும். வெளியிலிருந்து உள்ளே தள்ளும்படி கூட்டக்கூடாது.
  7. துடைப்பத்தை கையில் வைத்துக் கொண்டு யாரிடமும் பேசிக் கொண்டிருக்கக் கூடாது.
  8. துடைப்பத்தை போட்டுவிட்டு, கைகழுவிய பின்பே பேச வேண்டும்.
  9. துடைப்பத்தைக் கையில் வைத்திருக்கும்போது, சமையல் பொருட்களையோ, குழந்தைகளையோ தொடக்கூடாது.
  10. வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்ற உடனே துடைப்பத்தை எடுத்து வீட்டை கூட்டுவது அமங்கலமாகும்.
  11. வாசலை கூட்டி பெருக்குவது, வீட்டை கூட்டி பெருக்குவது, குளிப்பது போன்ற செயல்களை ஒருவர் வீட்டை விட்டு வெளியில் சென்றதும் செய்யக் கூடாது.
  12. துடைப்பத்தை எப்பொழுதும் படுக்க வைக்கக் கூடாது.
  13. துடைப்பத்தை மற்றவர்கள் கண் பார்வையில் படும்படி வைக்கவும் கூடாது.
  14. துடைப்பத்தை படுக்க வைத்தால் தேவையற்ற சினத்தை உருவாக்கும்.
  15. துடைப்பத்தை அதிக உயரத்தில் ஆணி அடித்து மாட்டாமல் கதவுக்கு பின்னால் நிறுத்தி வைக்க வேண்டும்.
  16. பெருக்கும்பொழுது யார் மீதும் துடைப்பம் பட்டுவிடக்கூடாது. இது அமங்கலம் தரும் செயலாகும்.
  17. கூட்டும்போது முடி இருந்தால் அதை கையில் எடுத்து வெளியே போட்டுவிட வேண்டும்.
  18. துடைப்பத்தில் முடிகளை சுற்றி அப்படியே வைப்பது தரித்திரம் உண்டாக்கலாம்.
  19. துடைப்பத்தில் லட்சுமி வாசம் செய்வதால் அதனை தாண்டி செல்லக் கூடாது.
  20. வீட்டு பூஜை அறையை துடைப்பத்தைக் கொண்டு கூட்டக் கூடாது. எப்பொழுதும் துணியால்தான் சுத்தம் செய்ய வேண்டும்.
  21. பூஜை அறை பெரிதாக இருந்தால் அதற்கென தனி துடைப்பம் பயன்படுத்தலாம்.
  22. துடைப்பத்தை வைத்து நீங்கள் பெருக்கும்பொழுது உள்ளங்கைகளை கொண்டு முழுமையாக அழுத்தம் கொடுத்து பிடிக்க வேண்டும். அது அக்குபிரஷ்ஷர் தரும்.
  23. துடைப்பத்தை நின்றபடி கூட்டாமல் குனிந்த படிதான் கூட்டிப் பயன்படுத்த வேண்டும். இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.
Facebook
Instagram
YOUTUBE