பிக் பாஸ் வீட்டிலிருந்து 2 பேர் எலிமினேட் ஆகி வெளியே செல்ல 5 பேர் புதிதாக வந்துள்ளனர்.

“மீண்டும் முதலில் இருந்தா?” என வடிவேலு கேட்பது போல் ஏற்கனவே 18 பேர் இருந்த பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொருவராக எலிமினேட் ஆகி 15 பேராக குறைந்த நிலையில் இருவரை வெளியே அனுப்பி ஐவரை உள்ளே அழைத்து ஆட்டத்தை சற்று கலைத்துப் போட்டு விளையாடுகின்றனர் பிக் பாஸ் குழுவினர்.

அகம் டிவி வழியே அகத்துக்குள் சென்ற கமல் இந்த வாரமும் கேப்டன் ஆன பூர்ணிமாவுக்கு வாழ்த்து கூறினார்.

அதட்டி மிரட்டாமல் ரோல் பக்கம் இருப்பதை மற்றவர்களுக்கு உணர வைத்தது, சின்ன பிக் பாஸ் வீட்டாருக்கு அமர சேர் தந்தது என பல பாசிடிவ்களை அடுக்கினார் கமல். “மனிதாபிமான அடிப்படை தான் ஒரு தலைமைக்கு அழகு” என பூர்ணிமாவை பாராட்டித் தள்ள ஹவுஸ் மேட்சும் “கலந்தாலோசித்து முடிவு செய்வது, கூல் கேப்டன், டிஸ்கவுண்ட் கேட்டு பிக் பாஸ் இடமே பேரம் பேசி சரித்திரம் படைத்த முதல் கேப்டன், தினமும் ரைம்ஸ் சொல்ல வைத்து சாக்லேட் தரும் நல்ல டீச்சர்” என பல பாராட்டுகளை குவித்தார்.

சின்ன பிக் பாஸ் வீட்டில் நான் இருந்தபோது அவர்களுடைய கஷ்டம் புரிந்தது என பூர்ணிமா பதில் அளித்ததும் அடித்தட்டு மக்களின் வலி அதிகாரத்துக்கு வரும்போது மறக்காமல் நினைவில் இருப்பதே பெரிய விஷயம் என பாராட்ட தோன்றுகிறது.

என் வீடு விட்டு வீடு தாவுனீங்க? என கமல் கேட்டபோது “சுவையான சாப்பாட்டுக்காக தான்” அங்க போனேன், என ரவீனா ஜாலியாக சொல்ல, அவ சாப்பாட்டுக்கு போகல என மாயா குறும்பாக சொன்னார். “உடம்பு சரியில்லை சார்” என சுரேஷ் கூறிய போது ரொம்ப முடியலன்னா இங்க வந்துருங்க என கமல் குறும்பாக கேட்டார்.

“உரிமைக் குரல சிவப்பு கையுறை டவல் மாதிரி விளையாட்டாக பயன்படுத்துனதுக்கும் சின்ன சின்ன விதிமீறல்களுக்கும் குட்டு வைத்தார் கமல். அதிக விதிமுறைகள் இருந்தால் வீட்டின் கரன்ட் கட் செய்யப்படும் என்றும் எச்சரித்தார்.

மணி நீங்க Saved என அறிவித்த பின். முதல் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் உள்ளே வந்தவர் தினேஷ். இவர் முந்தைய சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சீரியல் நடிகை ரஞ்சிதாவின் கணவர் ஆவார்.

ஏற்கனவே நிகழ்ச்சி பார்த்துவிட்டு உள்ளே செல்லும் தினேஷ் “இது ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி அல்ல, பிக் பாஸ் நிகழ்ச்சி என புரிய வைக்க உள்ளே செல்வதாக கூறினார். பிக் பாஸ் வீட்டுக்குள் நான் ரெடி தான் வரவா என்ற பாடல் மூலம் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்தார்.

“என்கிட்ட இருக்கிற எவிக்ஷன் ரீப்ளேஸ்மென்ட் கார்டு மூலமாக யார் வெளிய போக விரும்பறீங்க?“ என 10 செகண்ட் டைம் கொடுத்து திண்டாட வைத்தார். “ஓகே நான் வரேன்” என யுகேந்திரன் கிளம்ப அப்படி எல்லாம் முடிவு பண்ணிட முடியாது இருங்க என தினேஷ் கூறி “ஐசு நீங்க வரிங்களா?” என அதிர்ச்சி கொடுத்தார்.

அடுத்தது விக்ரம் நீங்க Saved என திகிலாக அழைத்து இன்ப அதிர்ச்சி மாதிரி கொடுத்தார் தினேஷ்.

அதிரடி காட்டிய தினேஷிடம் நீங்க யார்? என கேட்டு நம்பிக்கைக்கு உலை வைக்க முயன்றார் மாயா. இந்த வாரமே உங்களை எவிக்ட் பண்ணலாமா? என விரட்ட முயன்றார் பிரதீப்.

“இந்த டைட்டிலை நான் வாங்க விரும்புவதற்கு ஒரு எமோஷனல் கனெக்ட் இருக்கு” என தினேஷ் கூறிய போது இது ரக்ஷிதாவிற்கு சமர்ப்பணம் செய்ய என்று கூறப்படுகிறது.

அடுத்து வைல்ட் கார்டு என்று மூலம் திருநெல்வேலி பெண்ணான பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி உள்ளே வந்தார்.

“இருக்கு ஆனா இல்லை என்பது மாதிரி விளையாடாதீங்க. .. காதல் பரத் மாதிரி சிலரை மாத்திடாதீங்க” என அன்ன பாரதி கூறியதும் சிலரது முகம் மாறிப்போனது.

இதை அடுத்து யுகேந்திரன் வினுஷா ஆகியோரில் யார் போவாங்க? என கமல் கேட்க யுகேந்திரன் பெயரே பெரிதாக அடிபட்டது.

யுகேந்திரன் பெயர் எவிக்சன் கார்டில் காட்டப்பட்டதும், அப்பாடா சந்தோஷம் என்று எழுந்தார் யுகேந்திரன். தான் தப்பித்தோம் என வினுஷா நினைத்திருக்கலாம்.

3-வது என்ட்ரியாக கலகலப்பாக சீரியல் நடிகை அர்ச்சனா உள்ளே வந்தார்.

“என் பொண்ணுங்களுக்கு என்னோட காய்ன்களை தர்றேன்” என ஜோவிகா, ஐஷூவுக்கு பரிசளித்து யுகேந்திரன் எக்ஸிட் ஆனார்.

உள்ளே வந்த அர்ச்சனா ஜோவிகா, மாயா, விசித்ரா என 3 பெண்களுக்கும் ரேங்கிங் கொடுத்தார். இதனால் பலரின் கடுப்பையும் சம்பாதித்தார்.

இதை அடுத்து 4-வதாக வைல்ட் காடு மூலம் வால்பாறையைச் சேர்ந்த ஆர் ஜே பிராவோ உள்ளே வந்தார். இவர் துபாயில் உள்ள ரேடியோவில் மிகவும் பிரபலம். பைக்கில் ஸ்டைலாக என்ட்ரி கொடுத்து ஒவ்வொருவர் பற்றியும் விமர்சனம் கொடுத்து மதிப்பெண்ணும் கொடுத்தார்.

5-வது கானா பாலா உள்ளே வந்து சர்ப்ரைஸ் கொடுத்தார். 25 வருடம் வக்கீலாக பணியாற்றியவர். 3 முறை தேர்தலில் நின்று, சுயேட்சையாக இரண்டாம் இடம் பெற்றவர். சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மரண வீடுகளிலே பாடினார். இதை அடுத்து சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தவர்.

இந்த சர்ப்ரைஸ் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? என கமல் கேட்க “ஐயோ போதும் சார் இப்பவே படுக்க இடம் இல்லை” என ஹவுஸ் மேட்ஸ் கூற இதை அடுத்து வினுஷாவை வீட்டை விட்டு வெளியேற்றினார் கமல்.

முந்தைய நானின் எபிசோடை காண இங்கு கிளிக் செய்யவும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE