முந்தைய நாளின் தொடர்ச்சியாக ஒவ்வொருவரும் 2 பெயர்களை தேர்வு தேர்ந்தெடுத்து அவர்களுடைய குடும்பத்தினரின் வீடியோக்களை பார்த்து அதற்கு லைக் அல்லது டிஸ்லைக் கொடுக்க வேண்டும்.

அதிக லைக் பெற்றவருக்கு ஸ்டார் கிடைத்து எலிமினேஷனில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதன்படி அடுத்ததாக விஷ்ணு மற்றும் ஐசுவின் குடும்ப வீடியோக்களை பார்க்க விரும்புகிறேன் என நிக்சன் கூற ஐஷூவுக்கு அவர் லைக் கொடுத்தார். “கோபப்படாமல் விளையாடுவார்னு உங்க வீட்ல சொல்றாங்கப்பா” என்று சிரித்துக் கொண்டு விஷ்ணுவிற்கு டிஸ் லைக் கொடுத்தார் நிக்சன்.

வர வர உன்னை எனக்கு பிடிக்கல என ரவீனாவிடம் சண்டை போட்ட மணியை பார்த்து குழந்தை போல பரிதாபமாக தனது முகத்தை வைத்துக் கொண்டார் ரவீனா. இந்த சீசனில் இந்த போட்டியில் ரவீனா எடுத்துக் கொண்டுள்ள ஆயுதம் குழந்தைத்தனமான முகம் தான் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான்.

இதை அடுத்து பொசசிவ் ஆக மாறும் ஜோடியாக அடுத்ததாக உருவாகி வருகின்றனர் நிக்சன் ஐஷூ. “நான் உன்னை நம்ப மாட்டேன் நீயும் என்னை நம்பாதே எத்தனையோ வருஷமா தெரிஞ்சவங்களே நம்ப முடிவதில்லை. உன்னை எத்தனை நாளா தெரியும்?” என ஐஷூ பேச நம்பிக்கை வேற பாசம் வேற என சமாளித்தார்.

ஒரு துணையே இல்லாமல் விளையாடலாம் என பிரதீப் மட்டும்தான் நினைக்கிறார் போல. அடுத்து “சினிமா வாய்ப்பு கிடைக்கணும்னு உள்ள வந்தா இப்ப கிடைச்சுட்டு இருக்க சீரியல் வாய்ப்பு கூட கிடைக்காது போலவே” என விஷ்ணு கூற பூர்ணிமா சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்.

யுகேந்திரன் மணியின் குடும்ப வீடியோக்களை பார்த்து மாயா மணிக்கு லைக் கொடுத்து அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார். எதிரி புதிரியாக சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்கள் இப்படி மாறிவிட்டார்களா? என அனைவரும் யோசிக்க தொடங்கினர்.

அடுத்து ரவீனாவுக்காக மணி இந்த வீட்டில் இருந்தாகணும்னு வீடியோல சொன்னாங்க அது உண்மை என மாய வைத்த உள்குத்து மணிக்கு புரியவே இல்லை. யாருடைய தயவும் இல்லாமல் விளையாடுவது தான் பிக் பாஸ் விளையாட்டு என்பது அவர்கள் புரிந்து கொள்ளவில்லை போலும்.

மேக்கப் இல்லை என பிக் பாஸ் மேக்கப் சாதனங்களை பறித்து விட பூர்ணிமா யாருக்கும் தெரியாமல் நைசாக சென்று லிப்ஸ்டிக் போட்டார். இதை பார்த்த பிக் பாஸ் இது விதிமீறல் என கூறி விட்டுவிட பிரதீப் அந்த விஷயத்தை விடவில்லை.

“ஒன்னு கேப்டன்சியை யாருக்காவது விட்டுக் கொடுங்க. நீங்க ஜெயிலுக்கு போங்க. இல்லனா உணவகத்தை தியாகம் பண்ணுங்க என தண்டனைகளை அடுக்கிக் கொண்டிருந்தார் பிரதீப். “என்ன ஒன்னு நாலு சேர் கொடுத்தீர்கள் அதனால் கொஞ்சம் சாப்ட் கார்னர் இருக்கு என்று சலுகையும் காட்டினார்

என்னப்பா எல்லாரும் ஈஸியா மன்னிச்சிட்டீங்க. இவங்க அழகு மெயின்டன் பண்றதுக்காக நாம எல்லாரும் இங்க பட்டினி கிடக்க முடியாது என சண்டையை மூட்ட எவ்வளவோ முயன்றும் பிரதீப்பால் இந்த விஷயத்தில் ஜெயிக்க முடியவில்லை

வழக்கமாக பிக் பாஸ் ரேங்கிங் டாஸ்க்கில். 1,2,3 என வரிசைப்படுத்தி ஒரு சில இடங்களை வைத்திருப்பார்கள். அந்த இடத்தில் யார் நிற்பது? என பெரும் அடிதடி நடக்கும். ஆனால் இந்த முறை அது “விவாதம்” ஆகிப்போனதால் சற்றே சுவாரஸ்யம் குறைந்துவிட்டது என்று சொல்லலாம்.

குடும்ப வீடியோ டாஸ்க் பிரதீப் ஜெயித்ததாக கோல்டன் ஸ்டார் வென்றார். நான் நன்றி மட்டும் சொல்லுகிறேன் இந்த ஸ்டார் நம்மை எலிமினேசனில் இருந்து காப்பாத்தணும்னு தெரியும். இருந்தாலும் வெளியே போய் என்ன நிரூபிச்சிட்டு உள்ள வரணும்கிறது தான் நான் விரும்புறேன். எனக்கு கேம் ஆட்றது ரொம்ப பிடிக்கும். இங்க எல்லாருமே நண்பர்கள்தான். ஆனால் கேம் பொருத்தவரைக்கும் எனக்கு எதிரிகள். அந்த மிருகத்தன்மை எனக்குள்ள இருக்கறதுனால தான் நான் உயிர்ப்பா வச்சிருக்கேன் என அடுத்தடுத்து அடுக்கினார் பிரதீப். இது பிரதீப்பை பார்த்து சக போட்டியாளர்கள் மனதில் ஒரு பயத்தை ஏற்படுத்தி அவர்களது நிதானத்தை இழக்க செய்யும் பிரதீப் ஸ்ட்ராட்டஜி ஆகும்

இதை அடுத்து ”அட்வான்ஸ் மன்னிப்பு கேட்டுக்குறேன். நான் முதல் பொசிஷன்ல நிப்பேன். யார் வந்தாலும் ஹர்ட் பண்ணுவேன்“ அப்படின்னு ஆரம்பத்திலேயே ரேங்கிங் டாஸ்க்கில் பிரதீப் முன்னெச்சரிக்கை கொடுத்தார்

ஒவ்வொருவரும் தான் ஏன் விளையாட்டில் சிறந்தவர்கள்? என விவாதம் செய்து நிரூபிக்க வேண்டும். “பணத்தை நீ எடுத்துக்கோ டைட்டில் நான் எடுத்துக்கிறேன்” என மாயா பேச பேச்சு பேச்சா போயிடும் ஸ்டாம்ப் பேப்பர்ல எழுதிக் கொடு” என பிரதீப் பேசினார். இது சக போட்டியாளர்களால் கேலி செய்யப்பட்டது.

பின்பு மாயா ஒரு போட்டி போட்டு ஜெயிக்க முடியாத பிரதிப், அடுத்த இடத்துக்கு பின் வாங்கினார்.

விவாதத்தின் போது வர்க்க பிரச்சனையை எடுத்தார் பிரதீப். அதாவது “நானெல்லாம் பணம் இல்லாதவன். உங்களுக்கெல்லாம் வசதி இருக்கு. நான் அப்படி இல்லை” என தனது பாவமான பக்கத்தை காண்பித்து விவாதத்தில் ஜெயிக்க நினைத்தார்.

ஆனால் இதில் ஏழை – பணக்காரன் வித்தியாசம் இல்லை என யுகேந்திரகும், நிக்சனும் பேசிய போதும் பிரதீப் அதையேதான் தொடர்ந்து விவாதத்தின் கருப்பொருளாக கொண்டு சென்றார்.

ஜோவிகாவைப் பார்த்து “நீ எல்லாம் நடுத்தர குடும்ப பின்னணி என சொல்லாத. உன்னோட ஷூக்கள பாத்தாலே தெரியுது. மிடில்கிளாஸ்னா என்னனே உனக்கு தெரியல” அப்படின்னு பிரதீப் ஜோவிகாவை வம்புக்கு இழுக்க “நான் ஏழைன்னு எப்ப சொன்னேன். மிடில் கிளாஸ் வளர்க்குற மாதிரிதான் எனக்கு சூழல் இருந்தது.” என உஷ்ணமாகி கத்திக் கொண்டிருந்தார் ஜோவிகா.

பிறகு டென்ஷன் தாங்காமல் “சரி நான் தோத்துட்டேன்” என 15ஆம் இடத்துக்கு சென்று நின்று கொண்டார் பிரதீப்

நான் கோபத்துல ஜோவிகாவை ஆட்சேபனமாமான வார்த்தைகளை பேசிட்டேன். அதனால தான் முதலிடத்தில் இருந்து நகர்ந்து போயிட்டேன் என அவரே கூறி தான் சொன்ன வார்த்தை என்ன என்பதை யாருமே கண்டு கொள்ளாவிட்டாலும் அவரே வெளி காட்டிக் கொண்டார் பிரதீப்.

முந்தைய நானின் எபிசோடை காண இங்கு கிளிக் செய்யவும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE