என்னது மாதுளம் பழத்தில் ரசமா?
மாதுளம் பழத்தில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகம். இது ரூபி போன்ற செந்நிறத்தில் இருக்கும். இது இதய நோய்க்கு ஏற்றது. கெட்ட கொழுப்பை குறைத்து விட்டமின்களை அதிகரிக்கும். ஏசிஈ விட்டமின்களை உடலில் அதிகரிக்கச் செய்யும்.
அது மட்டுமின்றி இரும்பு சத்தையும் அதிகரிக்கும். அதனால்தான் தினமும் ஒரு கிளாஸ் மாதுளம் பழ ஜூஸ் குடிக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அதிர்ஷ்டவசமாக இந்தியாவில் இது அதிகம் கிடைக்கும் ஒரு பழ வகைகளில் ஒன்றாகும். எனவே மாதுளம் பழத்தில் ரசமாக கூட வைத்து சாப்பிடலாம் என த காரிகை உங்களுக்கு கற்றுத் தருகிறது. பொதுவாகவே ரசம் என்பது நமது வயிறு மட்டும் இல்லை ஆத்மாவையும் நிறைக்கும் உணவாகும். எவ்வளவுதான் வெஜ் அல்லது நான்வெஜ் ஒரு கட்டு கட்டினாலும் கடைசியில் ரசத்தோடு ரசித்து முடித்தால்தான் தமிழர்களுக்கு அந்த உணவு திருப்தியாக இருக்கும்.
பொதுவாக தக்காளி ரசம் தொடங்கி பூண்டு ரசம் மைசூர் ரசம் எலுமிச்சை ரசம் என்றெல்லாம் கூட கேள்விப்பட்டிருப்பீர்கள். மாதுளை மட்டுமின்றி, மாம்பழத்தில் ரசம், பைனாப்பிளில் ரசம் எல்லாம் செய்வது எப்படி என்பதை எல்லாம் ஐயங்கார் வீட்டு பெண்களிடம் கேட்டால் நன்றாகவே சொல்வார்கள். அவர்களின் ரெசிபி இதோ
செய்ய தேவையான பொருட்கள்
அரை கப் பருப்பு
ஒரு எலுமிச்சை அளவிலான ஊறவைத்த புளி
ஒரு கப் மாதுளம் விதைகள்
ஒரு ஸ்பூன் வெல்லம்
ஒரு பின்ச் மஞ்சள்
பெருங்காயம் அரை ஸ்பூன்
உப்பு
தாளிக்க
ஒரு ஸ்பூன் நெய்
அரை ஸ்பூன் சீரகம்
கால் ஸ்பூன் கடுகு
8 முதல் 10 கருவேப்பிலை இலைகள்
2 பச்சை மிளகாய் பாதியாக நறுக்கியது
மாதுளம் பழத்தில் ரசம் செய்ய முதலில் துவரம் பருப்பை நன்றாக வேக வைத்து மசித்து கொள்ளவும். பின் தண்ணீர் ஊற்றி தின் ஆன சூப் போன்ற கன்சிஸ்டெண்சியில் எடுத்துக்கொள்ள வேண்டும்
மாதுளை விதைகளை நன்றாக அரைத்து, தண்ணீர் ஊற்றி எடுத்துக் கொள்ளவும்
பின்பு அதனை வடித்து முக்கால் கப் மாதுளம் பழ ஜூசை எடுத்துக் கொள்ளவும்
ஒரு அடி கனமான பாத்திரத்தில் முதலில் மசித்து வைத்த பருப்பை போடவும்
அடுத்து புளிக்கரைசலை அதில் ஊற்றி மஞ்சள் தூள் போடவும்
பின்பு ஒரு பின்ச் பெருங்காயத் தூளையும் ரசப்பொடியையும் சேர்த்து உப்பு வெல்லம் சேர்த்து கலக்கி கொள்ளவும்
இதை சிம்மல் வைத்து மீடியம் லோ ஃபிளேமில் மூடி வைக்கவும்
ஒரு தாளிக்கும் பாத்திரத்தில் சூடேற்றி நெய் ஊற்றி அந்த நெய் சூடானதும் அதில் கடுகு உள்ளிட்டவற்றை போட்டு ரசக்கலவையை ஊற்றவும்
வடித்து வைத்த மாதுளம் பழ ஜூசை ஊற்றவும்
நன்றாக கிளறிவிட்டு, மூடி போட்டு விடவும்
புளிப்பான இனிப்பான காரமான அதுவும் மழைக்காலத்துக்கு ஏற்ற மாதுளம் பழ ரசம் தயார்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி அதை சாதத்துடன் பிணைந்து சாப்பிட அருமையாக இருக்கும்
சூப்பாகவும் இதனை பயன்படுத்தலாம்
அல்லது சற்று மிளகு தட்டி போட்டு ஜுரத்துக்கும் சிறந்த மருந்தாக பயன்படுத்தலாம்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.