சிக்கன் சாப்பிடும் பிராமின் பெண்ணாக நயன்

அன்னப்பூரணி என்ற படத்தில் நடித்து வருகிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. அவர்
சமீப காலமாகவே ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து வரும் நயன்தாரா அடுத்து அண்ணபூரணி என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பாலிவுட் சினிமாவில் ஷாருக்கான்-அட்லீ கூட்டணியில் வெளியான ஜவான் படத்தில் நாயகியாக நடித்திருந்த நயன்தாரா தற்போது நீலேஷ் கிருஷ்ணா இயக்கி வரும் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். நடிகர்கள் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சச்சு, கார்த்திக் குமார். சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

படத்தின் டீசரை வைத்தே படம் பயங்கரமான காமெடி கன்டென்டாக இருக்கக் கூடும் எனத் தெரியவருகிறது. அதில் அன்னபூரணி என்ற பெயருக்குக் கீழ், சாப்பாட்டின் குலதெய்வம் என்ற டேக்லைன் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால்,ச சமீபத்தில் வெளியாகியுள்ள டீசரினது சர்ச்சைக்குரிய வகையில் அமைந்துள்ளது.

திருச்சியில் உள்ள ஸ்ரீ ரங்கத்தி கோபுரத்தின் காட்சியும், அக்ரஹாரக் காட்சியும் கதைக்களத்தின் இருப்பிடத்தைத் தெளிவுபடுத்துகிறது. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் ரங்காபுர விஹாராவின் எஸ்.தமனின் இசை பின்னணியில் அக்ரஹாரம் ஒன்றில் பாரம்பரிய பிராமண குடும்பம் வசிக்கும் சிறிய வீட்டில், குடும்ப உறுப்பினர்கள் தங்கள் அதிகாலை பூஜை, புணஸ்கார வழிபாடுகளில் தீவிரமாக இருக்கின்றனர். அந்த நேரத்தில் மேலாண்மை தொடர்பான புத்தகத்தை நடிகை நயன்தாரா மும்முரமாகப் படித்து நோட்ஸ் எடுத்துக் கொண்டு இருக்கிறார்.

ஆனால் அவர் அந்தப் புத்தகத்துக்குள் வேறொரு சிறிய புத்தகத்தை மறைத்து வைத்துள்ளார். சிக்கன் லெக் பீஸின் படத்தைப் பார்த்த கண்களாலேயே புசித்து வருகிறார்.

நயன்தாராவின் தாயாக வரும் ரேணுகா, அவருக்கு தீபாரதானையின் ஆசி நெற்றியில் ஒத்திக் கொடுத்து திருநீறு வைக்கிறார்.

படத்தின் டீசரைப் பகிர்ந்த நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “அன்புள்ள நிலேஷ்கிருஷ்ணா உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். சினிமா மீதான உங்கள் காதல் உங்களை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்லும்!! உங்கள் திறமையை காட்டுவதற்கான நேரம் இது.உங்கள் அற்புதமான காட்சிகளை உலகம் காண இனியும் காத்திருக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார்.

இந்த டீசரை பார்த்து ரசிகர்கள் பலரும் நயன்தாராவை பாராட்டி வருகின்றனர்.

டீசர் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE