நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் ஜெய்லர். இது கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்துக்கு பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் அதிகமான வசூல் கிடைத்தது.

ஜெயிலர் ஸ்டோரி லோகேஷ் இயக்கிய விக்ரம் படத்தின் தொடர்ச்சி என ஏற்கனவே பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அப்படி இல்லை விக்ரம் தான் ஜெயிலர் படத்தின் தொடர்ச்சி என நெல்சன் கொடுத்துள்ள விளக்கம் தற்போது வைரலாகி வருகிறது.

ஜெய்லர் படம் வெகு நாட்களில் கழித்து ரஜினியின் ஃபேன்பாய் சம்பவமாக அமைந்தது. பாக்ஸ் ஆபிஸிலும் மகா ஹிட் கொடுத்தது. இதை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கலாநிதி மாறன் தாறுமாறாக கொண்டாடினார்.

ஆளாளுக்கு ஒன்றரை கோடி ரூபாயில் கார் மற்றும் ரொக்கம் என பரிசு கொடுத்து படக்குழுவினரை நனைய வைத்தார். பிரம்மாண்டமாக உருவான ஜெய்லர் படம் மிகவும் அருமையாக வந்திருந்தது. இருந்த போதும் அது விக்ரம் படத்தின் சாயலில் இருப்பதாக சில விமர்சனங்கள் வந்தன.

அதாவது ஜெய்லர் படத்தின் கதையில் ஒரு ஓய்வு பெற்ற ஜெயிலராக வருவார் ரஜினியான முத்துவேல் பாண்டியன். தனது மகனை கடத்திய வில்லன்களுடன் மோதுவது தான் அதன் கதையாக அமைந்தது.

கிட்டத்தட்ட விக்ரம் கதையும் இதே மாதிரி தான் தனது மகனை கொன்ற வில்லன்களை பழி வாங்குவதாக அமைந்தது. பேரனைக் காப்பாற்றும் ஏஜென்ட் ஆன விக்ரமின் கதையும், ஜெய்லர் முத்துவேல் பாண்டியனின் கதையும் ஒன்றுதான் என்றும், ஆக மொத்தம் விக்ரம் பட கதையை கொஞ்சம் ஆல்டர் செய்த ஜெய்லர் படத்தை நெல்சன் இயக்கிவிட்டதாகவே சொல்லப்பட்டது.

ஆனால் இது பற்றி தற்போது நெல்சன் ஒரு விளக்கம் கொடுத்த பேட்டி வைரலாகி வருகிறது. விக்ரம் படத்தின் ஷூட்டிங்கு முன்பே ஜெய்லர் பட கதையை லோகேஷ் இடம் நான் சொல்லிவிட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால் “விக்ரம் வெளியான போது லோகேஷ் என்னிடம் பணம் படம் பார்க்குமாறு கூறியிருந்தார்.. விக்ரம் பார்த்தபின் அதுவும் ஜெய்லர் பட கதை போலவே இருந்ததுதான். ஆனால் நிறைய வித்தியாசம் இருந்ததால் ஜெய்லர் பட கதையில் எந்த மாற்றமும் நான் செய்யவில்லை” என்று கூறியுள்ளார்.

அதேபோல லியோ படத்தில் ஹைனா வரும் காட்சிகளும் நெல்சனின் ஐடியா என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இதனால் 171 வது படமாக ரஜினிகாந்த் நடிக்கும் படத்திலிருந்து லோகேஷ் கனகராஜ் விலகவிருப்பதாகவும் சில செய்திகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE