வெறி நாய் கடிகள் என்பது உயிரை பறிக்கும் அளவு ஆபத்தானது. அதுவும் கொடூரமான முறையில்தான் உயிர்போகும். ஒரு மனிதருக்கு கொடூர தாகம் எடுக்கும் போது தண்ணீரை பார்த்தால் வெறுப்பு வருவது என்பது மிகவும் கொடுமையான விஷயம்தான். பல நாட்கள் தாகத்திலும், பசியிலும் மூச்சிறைத்துத்தான் உயிர்போகும்.

எனவேதான் பாம்பு கடியை போல வெறிநாய் கடியையும் அதிக ஆபத்தோடு கையாள வேண்டும் என்றும் முறையாக கையாண்டு உடனடியாக தடுப்பூசி போட வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். சமீபத்தில் கூட உத்தர பிரதேசத்தில் பொமரேனியன் ரக நாய் கடித்த சிறுவன் வீட்டிற்கு சென்று மஞ்சள் தூளை வைத்துவிட்டு வீட்டில் யாரிடமும் சொல்லாமல் விட்டுவிட்டார். இதன் விளைவாக அவருக்கு ரேபீஸ் வெறிநாய் கடி நோய் வந்து அவர் உயிரிழந்து விட்டார்.

ஆபத்தான வெறிநாய்க்கடி ராபீஸ் வராமல் தடுக்க தெருநாய்களை கண்டுபிடித்து அவற்றுக்கு ஆண்டுதோறும் தடுப்பூசி போட வேண்டும். இதனை கோவை மாநகராட்சி நிர்வாகம் சிறப்பாகவே செய்துள்ளது. ஆனால் சென்னை இதில் தோற்றுப் போய் வசைகளை வாங்கி வருகிறது.

குழந்தைகள் போனிலேயே மூழ்கி விடாமல் இருக்க தெருவில் இறங்கி விளையாட பல பெற்றோர்கள் ஊக்குவிக்கின்றனர். ஆனால் தெருவுக்கு வரவே சில வெறி நாய்களால் தயங்கும் நிலைதான் உள்ளது. அதையும் மீறி வந்தாலும் நாய்கள் அவர்கள் சைக்கிள் ஓட்டும் போது துரத்துவது, கடைக்கு செல்லும்போது விரட்டி, பிரண்டுவதோ கடிப்பதோ என பல தொல்லைகளை கொடுத்து வருகிறது.

அந்த நாய்களுக்கு தடுப்பூசியும் போடப்படாததால் சென்னையில் மக்கள் நடமாடவே சில நேரங்களில் அஞ்சும் சூழல் உருவாகியுள்ளது. ஒரு சில பகுதிகளில் இந்த வெறிநாய் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வருகிறது. அதன் எண்ணிக்கையும் அதிகரித்து தான் வருகிறது.

சென்னையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தெரு நாய் களுக்கான சென்சஸ் எடுக்கப்பட்டது. அதில் 57,366 நாள்கள் இருந்தன. அதன்பின் ஒரு தடவை கூட சென்சஸ் எடுக்கப்படவில்லை. எடுத்தால் தான் நாய்களுக்கு தடுப்பூசி போட முடியும்.

தற்போதைய பெருநகர சென்னை மாநகராட்சி 98,000 முதல் 1,20,000 தெரு நாய்களுக்கு ஸ்டெர்லைஸ் செய்து விட்டதாக கூறியுள்ளது. ஆனால் இது வெறுமனே கணக்கு தான். ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்ட நாய்களுக்கு காய்கறிகளால் உருவாக்கப்பட்ட வண்ண நிறங்களை பூசி தடுப்பூசி போட்ட நாய்களுக்கும் போடாத நாய்களுக்கும் வேறுபடுத்தி காட்டினர்.

ஆனால் ஒன்றிரண்டு மாதங்களிலேயே மழையால் அந்த சாயம் வெளுத்து விட்டது. இதனால் தற்போது தடுப்பூசி போடப்பட்ட நாய்கள் எது? போடப்படாதது எது? என கண்டறிவது கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

ஒரு மாநகராட்சிகள் எத்தனை தெருநாய்கள் இருக்கின்றன? அவற்றில் எத்தனை தெரு நாய் களுக்கு விலங்குகள் பிறப்பு கட்டுப்பாடு ஊசி போடப்பட்டுள்ளது? ராபீஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதா? என்பதை அறிய வேண்டும்.

அதற்கு எத்தனை ஊசி கொள்முதல் செய்ய வேண்டும் என்பதே அந்த நாய்களின் எண்ணிக்கையை பொறுத்துதான் முடிவு செய்ய வேண்டும். இது பற்றி பேசிய விலங்கியல் நல ஆர்வலர் சுருதி வினோத் ராஜ் “தற்போது சென்னை சிடையில் 4.5 லட்சத்திற்கும் அதிகமான தெருநாய்கள் இருக்கலாம். இருந்த போதும் அறிவியல் பூர்வமாக கணக்கு தடுத்தால் தான் இது ராபிஸ் எதிர்ப்புக்கான திட்டத்தை தடுப்பூசி திட்டத்தை சரியாக அமல் படுத்த முடியும்” என்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் 20% தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக அவர் கூறினார். ஒரு பெண் நாய் ஆண்டுக்கு இருமுறை கருவுற்று 6 முதல் 7 குட்டிகளை ஈன்றுகிறது. சராசரியாக ஒரு தெரு நாய் ஆண்டுக்கு 12 முதல் 14 குட்டிகளை ஈனும்.

இதனை அடிப்படையாகக் கொண்டாவது தெரு நாய்களை கட்டுப்படுத்துவதற்கான ஊசிகளை வாங்க, அதன் சென்சஸ் எடுத்து ஜியோ டேக் அல்லது மைக்ரோ சிப் பொறுத்தி நாய்களை கண்காணிக்க வேண்டும்.

அவற்றின் பிறப்பு எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும். ராபிஸ் தடுப்பூசி போட வேண்டும். இந்த மைக்ரோசிப்பின் விலை ரூ.100 ரூபாய் தான் என்றும் ஸ்ருதி குறிப்பிட்டுள்ளார்.

கோவையில் தன்னார்வலர்கள் அதிகாலையிலும் இரவிலும் சென்று நாய்களை கண்டறிந்து அவற்றுக்கு தடுப்பூசி போட்டிருந்தால், அவற்றுக்கு ஜியோ டாக்குளை அணிவித்து வருகின்றனர்.

இதே எண்ணிக்கையில் அல்லது இதே முறையில் ஆவது பின்பற்றி சென்னையிலும் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தியாவிலேயே உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் அதிக அளவிலான நாய்களின் எண்ணிக்கை உள்ளது, ஆனால் நாட்டிலேயே 2வது மாநிலமாக நாய் கடிக்கு ஆளாகும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் தான் அதிகமாக உள்ளது குறிப்பித்தக்கது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE