‘கரு கரு கருப்பாயி‘, ‘சக்கு சக்கு வத்திக்குச்சி’ பழச ட்ரெண்டாக்கும் இளசுங்க

சமீபத்திய தமிழ் திரை இயக்குனர்களின் அதுவும் இயக்குனர்களிடம் ஒரு புதிய வகையான ஸ்டைல் தெரிகிறது. அதாவது பழைய பாடல்களை அவர்கள் டிரெண்டாக்கி புதிய படங்களில் இணைத்து வருகின்றனர்.

பழைய நல்ல பாடல்களுக்கு ஒரு தனி மவுஸ் இருப்பதை அவர்கள் அறிந்து கொண்டனர். எனவே தங்களது படத்தின் ஏதேனும் ஒரு காட்சியில் பழைய பாடலை போட்டு அதனை ட்ரெண்டாக்கியும் விடுகின்றனர். இது பற்றி தற்போது பார்க்கலாம்.

விஜய்யின் லியோ படம் சமீபத்தில் வெளியானது இது ஒரு காஃபி ஷாப் சண்டை காட்சி இடம் பெற்றுள்ளது. அதில் சண்டைக் காட்சிக்கு முன்னதாக வரும் கரு கரு கருப்பாயி என்ற பாடலில் விஜயின் நடன அசைவுகள் அவருடைய ரசிகர்களை வெகுவாக சுண்டி இழுத்தது.

கரு கரு கருப்பாயி என்ற பாடல் பிரபுதேவா நடிப்பில் கடந்த 2000 ஆவது ஆண்டில் ஏழையின் சிரிப்பில் என்ற படத்தில் இடம்பெற்றது.

இதேபோல் 1995இல் பிரபு நடிப்பில் வெளியான பசும்பொன் படத்தில் இருந்து வரும் “தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் என்ணெய்க்கும் சண்டையே வந்ததில்லை“ என்ற பாடல் கூட லியோ வில் இடம்பெற்றது.

முன்னதாக ஜெயிலர் படத்தில் கூட இப்படி ஒரு பாடல் இடம் பெற்றது. 1999 ஆம் ஆண்டு வெளியான தால் படத்தில் இருந்து “தால் சே தால்மியா” என்ற பாடல் பயன்படுத்தப்பட்டது.

இதற்கான நடனமும் ரசிகர்களுக்கு புது மாதிரி ஒரு வைபை கொடுத்தது. எனவே அந்தப் பகுதியை மட்டும் கட் செய்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக மாற்றி வருகின்றனர்.

இதேபோல் மார்க் ஆன்டனி படத்திலும் எட்டுப்பட்டி ராசாவில் இடம் பெற்ற “பஞ்சுமிட்டாய் சேலை கட்டி” என்ற பாடல் இடம் பெற்றது. இது மாதிரி பழைய பாடல்களை புதிய படங்களில் சேர்க்கும் அதையும் டிரெண்டாக்கும் விதம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் கூட பகீரா படத்தில் ‘பட்டுக்கோட்டை அம்மாளு’ என்ற பாடலை பிரபுதேவாவின் நடனத்துடன் சேர்த்து இருந்தார். இந்த பாடல் ரஜினியின் ரங்கா படத்தில் இடம்பெற்றது.

அதை போல் ஷாருக்கானின் ஜவான் படத்தில் கூட ரயிலில் ஷாரூக் கான் “பாட்டு பாடவா” என்ற பாடலுக்கு வைப் ஆகி ஸ்டெப் போட்டது ரசிகர்களை கவர்ந்தது.

இது மாதிரியான பழைய பாடல்கள் உயிர்ப்பூட்டி இளம் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

ஏற்கனவே lcu என்ற லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் படங்களில் லோகேஷ் கனகராஜ் இந்த டிரெண்டை பின்பற்றி இருக்கிறார்.

கைதி படத்தில் கூட மிக சீரியசான காட்சி ஒன்றில் 1999 ஆம் ஆண்டு வெளியான என் சுவாச காற்றே படத்திலிருந்து “ஜும்பலக்கா ஜும்பலக்கா” என்ற பாடல் வந்தது.

அர்ஜுன் தாஸ் கூட டெரராக வந்த நிற்கும் காட்சியில் “ஆச அதிகம் வெச்சி” என்ற பாடல் படத்தின் டோனாக அமைந்தது.

இதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் கமல் போருக்கு தயாராகுவது போல் துப்பாக்கிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் போது, மன்சூர் அலிகான் பாடிய பாடலான “சக்கு சக்கு வத்திக்குச்சி” பாடல் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE