பெண்கள கருவறைக்குள் அனுமதிச்சு புரட்சி செய்தவர்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடாதிபதி பங்காரு அடிகளார் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் பகுதியில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனராக இருந்த பங்காரு அடிகளார் 83 வயதான இவர் மாரடைப்பால் காலமானார்.
மேல்மருவத்தூரைச் சேர்ந்த இவர் பள்ளி ஆசிரியராகத்தான் முதலில் பணியாற்றி வந்தார். அவர் வசித்த பகுதியில் அருகில் வசிப்பவர்களுக்கு அருள் வாக்கு சொல்வதில் தனது ஆன்மீக தொழிலை தொடங்கினார். அப்போது இவர் சொல்லும் அருள்வாக்கு சற்று பலிப்பதாக நம்பிய மக்கள் அவரை தேடி படையெடுத்து வந்தனர். வெளியூர்களிலிருந்தும் அவருக்கான ஆதரவு பெருகி வந்தது.
இதை அடுத்து அவர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் என்ற ஒன்றை தொடங்கினார். இதன் மூலம் தான் எவர் பிரபலம் அடைய தொடங்கினார். ஆதிபராசக்தியின் வெளிப்பாடாக தன்னை அவர் அறிவித்துக் கொண்டார்.
தான் ஓம் சக்தி என்றும் அவர் கூறிக் கொண்டார். இதை அடுத்து அவருக்கு பக்தர்கள் அதிகரிக்க அதிகரிக்க அவரை ஒரு கட்டத்தில் ‘அம்மா’ என்று பக்தர்கள் அழைத்தனர். அம்மா. . . பங்காரு அம்மா.. . . என்ற பாட்டும் பிரபலமானது. பெண்கள் கருவறைக்குள் போகக்கூடாது மாதவிலக்கு காலங்களில் சாமி கும்பிடக் கூடாது என்றெல்லாம் பல கட்டுப்பாடுகள் உள்ளன.
ஆனால் அவை அனைத்தையும் முறியடித்து பெண்களும் கருவறைக்குள் செல்லலாம் அவர்கள் மாதவிடாய் காலத்தில் கோவிலுக்குள் சென்றாலும் சக்தி ஒன்றும் ஆகாது என்று அவர் பிரச்சாரம் செய்து பெண்களை வரவழைத்தார். அதேபோல் சபரிமலையில் எப்படி ஆண் பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை இட்டு விரதம் இருந்து மலைக்கு சென்று சாமி கும்பிடுகிறார்களோ, அதே போல் பெண்களும் மாலை அணிந்து சிவப்பு நிறம் உடைய உடை அணிந்து விரதம் இருந்து கூட்டம் கூட்டமாக பெண்களின் சபரிமலை எனப்படும் ஓம் சக்தி கோவிலுக்கு சென்று வந்ததை பலரும் கண்கூடாக கண்டிருப்போம்.
அதேபோல் இவர் பெண்கள் கருவறையில் நுழையலாம் என புரட்சி மிக்க ஆன்மீகத்தை தொடங்கினார். இதனால் அவருக்கு வரவேற்பு அதிகரிக்க தொடங்கியது. பெண் பக்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. அவருடைய வழிபாட்டு மன்றங்கள் காஞ்சிபுரத்தை தாண்டி பல்வேறு மாவட்டங்களிலும் கிளை பரப்பி விரியத் தொடங்க 1980 முதல் தற்போது வரை 7000க்கும் மேற்பட்ட பங்காரு அடிகளாரின் வழிபட்டு மன்றங்கள் உள்ளன இந்தியா மட்டுமின்றி 10 வெளிநாடுகளிலும் இந்த அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.