பிக்பாஸ் சீசன் 7-ல 16-வது நாள்ல கூல் சுரேஷ்-க்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதாவது ஜோசியர் போல வேடம் அணிந்து வந்த கூல் சுரேஷ் ஒவ்வொரு போட்டியாளரின் ராசிகளையும் கேட்டு அவர்களது குணாதிசயங்களுக்கு ஏற்ப பலன்களை சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்போது விசித்ரா தனக்கு மீன ராசி என கூறினார். உங்களுக்கு மீன ராசிக்கு இல்ல யான ராசி என விசித்ராவை உருவ கேலி செய்தார். இதனை பார்த்த விசித்திரா சிரித்துக் கொண்டுதான் இருந்தார். ஆனால் மாயாவோ கூல் சுரேசை எரிப்பது போல முறைத்துக் கொண்டிருந்தார்.

பின்பு கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல நான் கிளம்புறேன் என்ன சொல்லி ஒரு வழியாக சமாளித்து எஸ்கேப் ஆனார். கூல் சுரேஷின் உருவக்கேலி காமெடி நல்லதல்ல என்றும் இது பிறரை அட்டாக் செய்வது போல் இருப்பதாகவும் கூறின மாயா, ஒரு நல்ல காமெடியன் என்பது தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு சிரிக்க வைப்பது தான் ஆனால் இவர் பிறரை அட்டாக் செய்து சிரிக்க வைப்பதில் நியாயம் இல்லை எனக் கூறினார்.

இதையடுத்து, விசித்ராவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் கூல் சுரேஷ். தான் காமெடிக்காக தான் கூறியதாகவும் மனதை புண்படுத்தும் வகையில் கூறிய கூறவில்லை என்றும் தெரிவித்தார். இது போன்ற பல கேள்விகளை தான் பார்த்து வந்திருப்பதாகவும், இருந்தாலும் எனக்காக பேச வந்ததற்காக நன்றி என்றும் விசித்ரா மாயாவிடம் கூறினார்.

இதை அடுத்து பூர்ணிமா வைத்த கத்தரிக்காய் குழம்பை அனைவரும் பாராட்டினர். அதன் பின் அழுகாச்சி டாஸ்க் தொடங்கியது.

ஒவ்வொரு ஸ்டாரும் தங்களது வாழ்வில் கடந்து வந்த பாதையை கூற வேண்டும். 5 நிமிடம் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும். ஒருவேளை அவர்கள் பேசுவது பிடிக்கவில்லை என்றால் 3 நிமிடத்தில் யாரேனும் பஸ்சர் அழுத்தி அதனை தடை செய்யலாம் அல்லது நிறுத்தலாம் அல்லது அதிலிருந்து குறுக்குக் கேள்விகள் கேட்கலாம்.

அழுகாச்சி டாஸ்க் என்பது கன்டெஸ்டன்ட் தங்களோட வாழ்க்கைல நடந்த சொந்தக் கதை, சோகக் கதை எல்லாத்தையும் புழிஞ்சு அவங்களும் அழுது, பாக்குறவங்களயும் அழ வைக்குறதுதான். இந்த சீசன்ல அதை ஒரு டாஸ்க் மாதிரி வெச்சுருந்தாரு.

முதலில் ஜோவிகா தொடங்கினார். “‘எனக்கு எல்லாமே எங்க அம்மாதான். டைவர்ஸ் ஆன அம்மா. நான் சின்ன பிள்ளையா இருக்கறப்ப ரொம்ப கஷ்டங்களை அனுபவிச்சிருக்கோம். இருக்க இடம் இல்லாம தாத்தா வீட்ல இருந்து துரத்தப்பட்டிருக்கோம். போலீஸ் ஸ்டேஷன்லாம் எனக்கு அப்பவே பழக்கமாயிடுச்சு. என் பெயர் ஜோவிகா விஜயகுமார். அந்த கடைசிப் பெயரால ரொம்ப கஷ்டப்பட்டிருக்கோம். ஆனா அந்தப் பெயரோடதான் நான் கடைசி வரை இருப்பேன். அந்த அடையாளத்தோடதான் முன்னேறி ஜெயிச்சுக் காட்டுவேன்’ என்றார்.

இதையடுத்து ஐஷூ வந்து தன் கதையைக் கூறத் தொடங்கினார். ஆனால், முடிக்கவில்லை. `நான் மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த பொண்ணு. ரொம்ப ஆச்சாரமான குடும்பம். எப்பவும் டான்ஸ் கிளாஸ்லதான் இருப்பேன். ஆனா நான் வயசுக்கு வந்தவுடன் அதை நிறுத்திட்டாங்க. பொண்ணா பொறந்தது தப்போ’ன்னுலாம் எனக்கு தோணியிருக்கு. அப்பதான்..’ என்று சொல்ல சொல்லவே, அழத் தொடங்கினார்.

இதையடுத்து வந்த அக்ஷயா ‘நான் எப்பவுமே பாசிட்டிவ். ஹாப்பியா இருப்பேன். பாதுகாப்பா என்னை வளர்த்தாங்க. +2 வரைக்கும் ரொம்ப ஹாப்பி. அப்ப நான் ஒரு டிராமால நடிச்சிட்டு வந்தப்ப ‘நல்லாயிருக்கு’ன்னு சிலர் பாராட்டுனதுதான் என்னோட ஹாப்பியஸ்ட் மொமன்ட். அப்பதான் நடிக்கணும்ன்ற ஆசை வந்துச்சு. வீட்ல சொன்னேன். அண்ணா மாதிரி ஒருத்தர் எனக்கு அது பத்தி சொல்லிக் கொடுத்தாரு. நான் அவரை அண்ணா மாதிரி பார்த்தேன்.

ஆனா அவரு என்னை அந்த மாதிரி பார்க்கலைன்றது அப்புறம்தான் தெரிஞ்சது. கொரானோ சமயத்து சிரமங்கள்ல கூட டிக்டாக் வீடியோல்லாம் பண்ணேன். ஒரு விஷயத்துல நாம உறுதியா இருந்தா நம்ம பெற்றோர்கள் நிச்சயம் அதைப் புரிஞ்சுப்பாங்க” என தன்னம்பிக்கை ஊட்டினார்.
இவர்களுக்கு பிரதீப்பும், பூர்ணிமாவும் குறுக்குக் கேள்வி கேட்க, இறுதியில் போட்டியாளர்கள் கலந்து பேசி அக்ஷ்யாவை வெற்றி பெற்றதாக அறிவித்து ஸ்டார் கொடுத்தனர்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE